என் மலர்
ஈரோடு
- உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆரோக்கிய மேரியை கொண்டு சென்றனர்.
- ஆரோக்கிய மேரியை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி(38). இவரது கணவர் அற்புதராஜ்.
இவர்களுக்கு 22 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 14 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆரோக்கிய மேரி தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஆரோக்கிய மேரிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது மகன் ஆரோக்கியமேரியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் ஆரோக்கிய மேரிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ஆரோக்கியமேரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் சோதனை செய்த போது மேரி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு சூரம்பட்டி துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர். மேரி இறப்புக்கான காரணம் சரியாக தெரியவில்லை. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் வேறு எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மேரியுடன் பழகிய நபர் குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- வரட்டு பல மனையும் தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் உள்ளது.
- இதே–போல் பல்வேறு இடங்களில் ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.
மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் வெளி–யேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது.
41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 41.75 அடியாக உள்ளது.
இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 30.84 அடியாக உள்ளது. வரட்டு பல மனையும் தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் உள்ளது.
இதேபோல் பல்வேறு இடங்களில் ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நேற்று முன் தினம் மதியம் சுகுணா வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததை அவரது அக்கா மாலதி பார்த்துள்ளார்.
- இதுகுறித்து சுகுணாவின் அக்கா மாலதி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள வீரணம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா (23). பி.எஸ்.சி., படித்துள்ள இவர், பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையத்தில் உள்ள மகாலிங்கம் என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
சுகுணாவுக்கு கடந்த 10 நாட்களாக காது வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மதியம் சுகுணா வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததை அவரது அக்கா மாலதி பார்த்துள்ளார்.
அதன்பின் சுகுணாவை காணவில்லை. அக்கம்பக்கம், உறவினர் வீடுகள் என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
வீட்டில் உள்ளவர்கள் டி.வி.ஸ்டேண்டில் பார்த்தபோது ஒரு கடிதம் இருந்தது. அதில், தனக்கு காதுவலி அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் சுகுணா எழுதி வைத்துச் சென்ற கடிதம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து சுகுணாவின் அக்கா மாலதி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை களை கட்டியது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.15 கோடிக்கு துணிகள் விற்று தீர்ந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவி த்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தை யானது பன்னீர்செல்வம் பார்க், தலைமை தபால் நிலையம் எதிர்புறம், அசோ கரம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெற்று வருகிறது.
சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாக ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை களை கட்டியது.
நேற்று இரவு கூடிய ஜவுளி சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த நூற்று க்கணக்கான வியாபாரிகள் மொத்த விலைக்கு துணி களை கொள்முதல் செய்து அள்ளிச் சென்றனர்.
இதே போல் கேரளா கர்நாடகா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநில வியாபாரிகள் இரவு நடந்த ஜவுளி சந்தைக்கு வந்திருந்தனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜவுளி சந்தை யில் ஏராளமான புதிய துணி வரத்துக்கள் அறி முகப்படுத்த ப்பட்டுள்ளன.
குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புதிய ஜவுளி ரகங்கள் அறிமுகப்படுத்த ப்பட்டு ள்ளன. இதனால் வியாபாரி கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்.
கடந்த 4 நாட்களாக தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. மொத்த வியாபாரத்தை விட சில்லரை வியாபாரம் விறு விறுப்பாக நடந்து வருகிறது.சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.
இதேபோல் மொத்த வியாபாரம் 30 சதவீதம் நடை பெற்றதாக வியாபாரி கள் தெரிவித்த னர். கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.15 கோடிக்கு துணிகள் விற்று தீர்ந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவி த்தனர்.
- சென்னிமலை முருகன் கோவிலில் இன்று, அமாவசை தினத்தில் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணிக்கு அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.
ஈரோடு:
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று, அம்மாவசை தினத்தில் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று அமாவசை நாளில் தீபாவளி பண்டிகை விடுமுறை, செவ்வாய்கிழமையும் ஒருங்கிணைந்து வந்ததால் சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை 5.30 மணி முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மதியத்துக்கு மேல் நடை சாத்தப்பட்டது,
இதே போல் சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரி யம்மன் கோவிலில் அமா வாசையை யொட்டி இன்று ஏராள மான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது. தொடர்ந்து ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மாநில பக்தர்களும் அதிகளவு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணி கோவில் நடை சாத்த ப்பட்டது. இதே போல் ஈரோடு பெரிய மாரியம்மன், சத்திய மங்கலம் தண்டு மாரியம்மன், கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன் அந்தியூர் பக்தர காளியம்மன் கோவில் உள் அனைத்து கோவில் களிலும் ஏராளமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணிக்கு அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.
- தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட எதுவாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
- முன்பதிவு பெட்டி கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிக்க ஏறினர்.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட எதுவாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட ஆயிரக்கண க்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதைப்போல் வெளி மாவட்டத்தில் தங்கி இருந்த ஈரோடு மாவட்ட மக்களும் தீபாவளி கொண்டாடு வதற்காக ஈரோட்டுக்கு வந்தனர்.
இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ப்பட்டன. மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் கல்லூரி கள் திறக்கப்படுகின்றன. இதேபோல் அரசு| தனியார் அலுவலகங்களும் நாளை முதல் வழக்கம் போல் செயல்பட தொடங்குகிறது.
இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் இன்று முதல் மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வருகின்றனர். இதே போல் ஈரோட்டில் இருந்து வெளி யூருக்கு செல்பவர்களும் இன்று திரும்பி சென்றனர்.
இதன் காரணமாக இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. முன்பதிவு பெட்டி கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிக்க ஏறினர்.
- ஈரோடு மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக வெள்ளோடு பறவை சரணாலயம் விளங்கி வருகிறது.
- தீபாவளி அன்று மட்டுமல்ல இங்குள்ள கோவில்களில் நடைபெறும் விசேஷங்கள் கூட நாங்கள் வெடி வெடிக்காமல் அமைதியான முறையில் கொண்டாடி வருகிறோம்.
சென்னிமலை:
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வருவது பட்டாசு தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். ஆனால் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கிராம மக்கள் பறவைகளுக்காக கடந்த 19 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு பஞ்சாயத்து பகுதியில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. இந்த பறவைகளை கண்டு களிப்பதற்காக ஈரோடு மட்டுமன்றி சேலம். கோவை, நாமக்கல், கரூர் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக வெள்ளோடு பறவை சரணாலயம் விளங்கி வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பறவை சரணாலயத்தை சுற்றி வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன் கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர் கருக்கங்காடு வலசு ஆகிய கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடிப்பதால் இங்கு உள்ள பறவைகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால் இந்த பகுதி மக்கள் ஒன்று கூடி தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் கொண்டாட முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த 18 ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 19-வது ஆண்டாக நேற்றும் இந்த கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதுகுறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-
பறவைகள் சரணாலயம் அருகில் உள்ளதால் தீபாவளி பண்டிகையை வெடி வெடிக்காமல் கொண்டாட நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி கடந்த 19 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகிறோம். இதற்கு எங்கள் பகுதி குழந்தைகள், இளைஞர்களும் ஒத்துழைப்பு தருகின்றனர். பறவை இனங்கள் எப்போதும் அமைதியை விரும்பும் இனமாகும். இதனால் நாங்கள் வெடி வெடிப்பதில்லை.
தீபாவளி அன்று மட்டுமல்ல இங்குள்ள கோவில்களில் நடைபெறும் விசேஷங்கள் கூட நாங்கள் வெடி வெடிக்காமல் அமைதியான முறையில் கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, தரை சக்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இந்திரா நர்சிங் படிப்பு முடித்துவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
- திடீரென சமையல் அறையில் இருந்த மின்விசிறியில் இந்திரா தாவணியால் தூக்குபோட்டு கொண்டார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசை சேர்ந்தவர் நடராஜ். தற்போது சென்னிமலை பொறைன்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகள் இந்திரா (வயது 27). இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 4 வருடங்களாக இந்திராவுக்கு அவரது தந்தை நடராஜ் வரன் பார்த்து வந்தார். எனினும் இந்திராவுக்கு எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதனால் விரக்தி அடைந்த இந்திரா தனக்கு திருமணமே வேண்டாம் என வீட்டில் கூறி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இந்திராவின் தந்தை நடராஜ் தனது மனைவியுடன் சில்லாங்காட்டுவலசில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது இந்திராவும் அவருடைய தம்பி கோபாலகிருஷ்ணன் இருவரும் மட்டும் வீட்டில் இருந்தனர். திடீரென சமையல் அறையில் இருந்த மின்விசிறியில் இந்திரா தாவணியால் தூக்குபோட்டு கொண்டார். இதனைக்கண்ட அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இந்திராவின் பெற்றோர்கள் விரைந்து சென்று இந்திராவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் இந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திராவின் தந்தை நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காரணாம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராள மான மீனவர்கள் மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
- பெரும்பாலும் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகளுடன் வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு - கரூர் செல்லும் ரோட்டில் உள்ளது காரணாம் பாளையம் அணைக்கட்டு. கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி ஊராட்சிக் குட்பட்ட காரணாம் பாளையத்தில் இந்த அணைக் கட்டு அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1961ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்டது இந்த அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் இருந்து கரூர் மாவட்டம் புகலூரில் உள்ள காகித ஆலைக்கு என தனியாக வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் மூலம் புகழூர் வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்கால் மூலம் காகித ஆலைக்கு தண்ணீர் செல்வதுடன் விவசாயிகளும் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது.
ஈரோட்டில் இருந்து திருச்சி வரை காவிரி ஆற்றையொட்டி எந்த சுற்றுலா தலமும் இல்லை. திருச்சியில் முக்கொம்பில் மட்டுமே பூங்கா உள்ளது. ஆனால் வழியில் எந்த பகுதியிலும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தலம் இல்லை. இதனால் காரணாம்பாளையம் அணைக்கட்டு பகுதியில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த அணைக்கட்டுக்கு ஈரோடு மட்டுமல்லாது கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணைக்கட்டில் குளித்துவிட்டு அங்கேயே மீனவர்கள் பிடிக்கும் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு என அங்கேயே ஏராளமான மீனவர்கள் மீன்களை பிடித்து அவர்களுக்கு தேவையானவற்றை சமைத்துக் கொடுத்து வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருபவர்கள் அணைக்கட்டில் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்கும் மற்றும் குழந்தைகளின் விளையாடுவதற்கும் போதுமான வசதிகள் இல்லை. மேலும் கழிவறைகள் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளா–கின்றனர்.
இந்த காரணாம் பாளையம் அணைக்கட்டிற்க்கு தினசரி மட்டுமில்லாத பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர்.
இதனால் காரணாம்பாளையம் அணைக் கட்டை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுமென இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் கூறியதாவது:
அணைக்கட்டை நம்பி காரணாம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராள மான மீனவர்கள் மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். அணைக் கட்டுக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெரும்பாலும் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகளுடன் வருகின்றனர்.
ஆனால் அவர்கள் குளித்துவிட்டு உடை மாற்று வதற்கோ கழிவறைக்கு செல்வதற்கும் போதுமான வசதிகள் இல்லை. இதனால் தமிழக அரசு காரணாம்பாளையம் அணைக்கட்டை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால் இதுவரை சுற்றுலாத்தலமாக அறிவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும், சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஓய்வு அறையும் கழிவறையும் பெண்கள் உடைமாற்று அறையும் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த வசதி இல்லாமல் சாலை ஓரத்திலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அரசு விரைவில் சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்.
மேலும் காரணாம் பாளையம் அணைக்கட்டுக்கு எதிரே உள்ள காவிரி ஆற்றின் கரை பகுதியான நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் தமிழக அரசின் சார்பில் சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டு அங்கு சிறுவர் பூங்கா, பயணிகள் ஓய்வறை, கழிவறை, பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்து கொடுத்து ள்ளனர்.
அதேபோல் எதிர்க்க ரையில் உள்ள காரணா ம்பாளையம் அணைக்கட்டு பகுதியிலும் அவ்வாறு சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- வேலை பார்க்கும் இடத்தில் சுஜித்குமார் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு, அக். 23-
பீகார் மாநிலம் முஜபூர் மாவட்டம் சிவதோஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் சுஜித்குமார் (23). இவர் ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு அனிஷாதேவி என்பவருடன் கடந்த மே மாதம் பீகாரில் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மனைவியை அங்கேயே விட்டுவிட்டு சுஜித்குமார் கடந்த ஜூலை மாதம் மீண்டும் ஈரோட்டுக்கு வந்து வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சுஜித்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் வேலை பார்க்கும் இடத்தில் சுஜித்குமார் தூக்குபோட்டு கொண்டார். அதை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
- மாநகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தீபாவளி உற்சாகமாக கொண்டாட சொந்த ஊருக்கு ஆயிரக்க ணக்கான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு ெரயில், பஸ் நிலையங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஏற்கனவே முன்பதிவு அனைத்தும் நிரம்பி விட்டதால் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். 2 நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று இரவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு கடைவீதிகளில் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆர்.கே.வி.ரோடு பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் ஈஸ்வரன் கோவில் வீதிகளிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் இருந்தது.
தீபாவளி பண்டிகையை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் பொது இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்கா ணித்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் பணத்தை திருடுவதும், நகைகளை திருடுவதும் கைவரிசை காட்டுகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாநகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கோபுரத்தில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொரு த்தப்பட்டு பொதுமக்கள் நடவடிக்கை துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்பி.க்கள், டி.எஸ்பி.க்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1,100 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பெண் போலீசார் மாறு வேடங்களிலும் பொது மக்களை கண்காணித்து வருகின்றனர்.
இன்று பட்டாசு விற்பனை மும்முரமாக இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு ரகங்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த வருட தீபாவளிக்காக புதிய ரக பட்டாசுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
- கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பாதி தண்ணீரை பொதுப்பணித்துறையினர் ஓடை வழியாக திறந்து விட்டனர்.
- பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஒரே நாளில் வாய்க்காலில் நீர்வரத்து குறையும்.
சென்னிமலை:
கீழ்பவானி வாய்க்கால் செல்லும் கடைமடை பகுதியான திருப்பூர் மாவட்டம், மங்களப்பட்டி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் அங்கு விவசாய நிலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கிய தாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.
இதனால், கீழ்பவானி வாய்க்காலில் செல்லும் தண்ணீரை பாதியாக குறைக்கும் வகையில் சென்னி மலை அருகே அய்யம்பாளை யம் அருகே முதலைமடை பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பாதி தண்ணீரை பொதுப்பணித்துறையினர் ஓடை வழியாக நேற்று முன்தினம் திறந்து விட்டனர்.
இந்த தண்ணீர் புதுப் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ., நகர். குட்டைக்கு சென்று அந்த குட்டை நிரம்பிய பிறகு அங்கிருந்து நொய்யல் ஆற்றுக்கு செல்லும் ஓடை வழியாக சென்றது.
கீழ்பவானி வாய்க்காலில் இருந்து அதிக அளவில் தண்ணீரை ஓடையில் திறந்து விட்டதால் இந்த தண்ணீர் சென்னிமலை அருகே மேட்டூர்,-எல்லைக்குமாரபாளையம் தரைப்பாலம், மேட்டூர்-சொக்கநாதபாளையம் தரைப்பாலம், மேட்டூர்-கரைப்புதூர் தரைப்பாலம் மற்றும் சரளைக்காடு, சொக்கநாதபாளையம் தரைப்பாலம் ஆகிய நான்கு இடங்களில் உள்ள தரை ப்பாலத்தை மூழ்கியபடி சென்றது.மேலும், ஓடை அருகில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இது குறித்து பொதுப் பணித்துறை பணியாளர்கள் கூறும் போது, கடைமடை பகுதியில் அதிக மழை பெய்ததால் விவசாய நில ங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முதலைமடை ஓடையில் அதிக தண்ணீரை வெளி யேற்றப்பட்டு வருகிறது. தற்போது பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஒரே நாளில் வாய்க்காலில் நீர்வரத்து குறையும். அதன் பிறகு நிலைமை சரியாகி விடும் என்றனர்.






