என் மலர்
நீங்கள் தேடியது "கீழ்பவானி வாய்க்காலில் இருந்து"
- கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்
- ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது
சென்னிமலை,
கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் செல்லும் கடை மடை பகுதியான திருப்பூர் மாவட்டம், முத்தூர், மங்களப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்கு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அங்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னிமலை அருகே அய்யம்பாளையத்தில் உள்ள முதலைமடை என்னும் இடத்தில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.
ஓடையில் செல்லும் தண்ணீர் மேட்டூர், கரைப்புதூர், சரளைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் இந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும் ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது.
கடைமடை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் வடியும் வரை ஓடையில் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
- கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பாதி தண்ணீரை பொதுப்பணித்துறையினர் ஓடை வழியாக திறந்து விட்டனர்.
- பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஒரே நாளில் வாய்க்காலில் நீர்வரத்து குறையும்.
சென்னிமலை:
கீழ்பவானி வாய்க்கால் செல்லும் கடைமடை பகுதியான திருப்பூர் மாவட்டம், மங்களப்பட்டி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் அங்கு விவசாய நிலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கிய தாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.
இதனால், கீழ்பவானி வாய்க்காலில் செல்லும் தண்ணீரை பாதியாக குறைக்கும் வகையில் சென்னி மலை அருகே அய்யம்பாளை யம் அருகே முதலைமடை பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பாதி தண்ணீரை பொதுப்பணித்துறையினர் ஓடை வழியாக நேற்று முன்தினம் திறந்து விட்டனர்.
இந்த தண்ணீர் புதுப் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ., நகர். குட்டைக்கு சென்று அந்த குட்டை நிரம்பிய பிறகு அங்கிருந்து நொய்யல் ஆற்றுக்கு செல்லும் ஓடை வழியாக சென்றது.
கீழ்பவானி வாய்க்காலில் இருந்து அதிக அளவில் தண்ணீரை ஓடையில் திறந்து விட்டதால் இந்த தண்ணீர் சென்னிமலை அருகே மேட்டூர்,-எல்லைக்குமாரபாளையம் தரைப்பாலம், மேட்டூர்-சொக்கநாதபாளையம் தரைப்பாலம், மேட்டூர்-கரைப்புதூர் தரைப்பாலம் மற்றும் சரளைக்காடு, சொக்கநாதபாளையம் தரைப்பாலம் ஆகிய நான்கு இடங்களில் உள்ள தரை ப்பாலத்தை மூழ்கியபடி சென்றது.மேலும், ஓடை அருகில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இது குறித்து பொதுப் பணித்துறை பணியாளர்கள் கூறும் போது, கடைமடை பகுதியில் அதிக மழை பெய்ததால் விவசாய நில ங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முதலைமடை ஓடையில் அதிக தண்ணீரை வெளி யேற்றப்பட்டு வருகிறது. தற்போது பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஒரே நாளில் வாய்க்காலில் நீர்வரத்து குறையும். அதன் பிறகு நிலைமை சரியாகி விடும் என்றனர்.






