என் மலர்
ஈரோடு
- சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன.
- யானைகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. மேலும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கடா மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளிேயறி வருகிறது. தொடர்ந்து யானைகள் ரோட்டில் உலாவி வருகிறது.
அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் துரத்துவது, வழி மறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக கரும்புகள் ஏற்றி வரும் லாரிகளையும் வழி மறித்து அதில் இருந்து கரும்புகளை ருசித்து வருவது அடிக்கடி நடக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை சத்தியமங்கலம் வனப்பகுதி தலமலை வனப்பகுதியில் இருந்து சுமார் 5-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தேடி வெளியறியது. தொடர்ந்து அந்த யானைகள் மைசூர் மெயின் ரோடு சிக்கள்ளி என்ற பகுதியில் உலாவி கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறிது தூரத்துக்கு முன்பு ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் அங்கேயே உலாவிய யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மீண்டும் புறப்பட்டு சென்றன.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, ஆசனூர், தலமலை வனப் பகுதிகளில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே வனப் பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுக்க கூடாது. யானைகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. மேலும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்றனர்.
- இயற்கை உபாதையை கழிக்க சென்ற அப்பகுதியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- சிறுமியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்தனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது.
இவர் காலை இயற்கை உபாதையை கழிக்க சென்ற அப்பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது சிறுமி சத்தம் போட்டு அழுததையடுத்து, ரகுமான் அங்கிருந்து ஓடிவிட்டார்.
அங்கிருந்து தப்பி வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ரகுமானை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
- சுகுணாவுக்கு கடந்த சில நாட்களாக காது வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
- வீட்டை விட்டு மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, அக். 27-
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள வீரணம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா (23). இவர், பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையத்தில் கடந்த 6 மாதங்களாக ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
சுகுணாவுக்கு கடந்த சில நாட்களாக காது வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மதியம் சுகுணா வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததை அவரது சகோதரி மாலதி பார்த்துள்ளார். அதன்பின் சுகுணாவை காணவில்லை. அக்கம் பக்கம், உறவினர் வீடுகள் என எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
வீட்டில் உள்ளவர்கள் டி.வி.ஸ்டேண்டில் பார்த்தபோது ஒரு கடிதம் இருந்தது. அதில், தனக்கு காதுவலி அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் சுகுணா எழுதி வைத்துச் சென்ற கடிதம் கிடைத்தது.
இதுகுறித்து சுகுணாவின் அக்கா மாலதி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வந்தனர். இந்நிலையில் வீரணம் புதூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சுகுணா பிணமாக மிதப்பதாக பெருந்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில்கயிறு கட்டி இறங்கி சுகுணாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து பெருந்துறை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுகுணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை விட்டு வெளி யேறிய சுகுணா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டை விட்டு மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வன உயிரினங்களை சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடுதலால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டம், கேர்மாளம் வனச் சரகத்தில் வனச்சரக அலுவலர் தினேஷ் தலைமையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து கேர்மாளம் மலை கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக வன உயிரினங்களை சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடுதலால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தால் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று கேர்மாளம் வனச் சரகத்திற்கு உட்பட்ட கானக்கரை கிராம பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்குள்ள அங்கன்வாடி வளாகத்திற்கு அருகே இரண்டு நாட்டுத் துப்பாக்கிள் கிடந்துள்ளது அதை கைப்பற்றிய வனத்துறை சட்ட நடைமுறைகளின் படி கைப்பற்றிய நாட்டுத் துப்பாக்கிகள் 2-ம் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
- வழக்கமான நாட்களில் 70 டன் வரை குப்பைகள் சேரும் நிலையில் இந்த 2 நாட்களில் மட்டும் 190 டன் வரை குப்பைகள் சேர்ந்துள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
இவ்வாறு மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 70 முதல் 75 டன் வரை குப்பைகள் சேருகின்றன. இவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து மாநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால் கடந்த 24 மற்றும் 25ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் மாநகர் பகுதியில் பட்டாசு கழிவுகள் மலை போல் குவிந்தன.
இந்த பட்டாசு குப்பை கழிவுகளை அகற்ற நான்கு மண்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். வழக்கமான நாட்களில் 70 டன் வரை குப்பைகள் சேரும் நிலையில் இந்த 2 நாட்களில் மட்டும் 190 டன் வரை குப்பைகள் சேர்ந்துள்ளன. அதனை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி உள்ளனர்.
- கந்த சஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.
- 31-ந் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ விதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்.
சென்னிமலை:
கந்த சஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.
விழாவை முன்னிட்டு 7.30 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளை, 1320 படிக்கட்டுகள் வழியாக, மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அமைக்கப் பட்டிருந்த, யாக சாலையில் விநாயகர் வழிபாடு, யாக பூஜைகள் ஹோமங்கள் பூர்ணாகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், பன்னீர், தேன், சந்தனம் உட்பட 108 வகையான திரவியங்களுடன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிேஷகமும், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து சாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பிறகு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் பலர் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற, விழா நடைபெறும் ஆறு நாட்களும், விரதத்தை தொடங்கும் முகமாக கைகளில் காப்பு கட்டி கொண்டனர்.
பக்தர்களுக்கு தலைமை குருக்கள் ராமநாதசிவம் காப்புகட்டிவிட்டார். கந்த சஷ்டி விழா, வருகிற 30-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
அப்போது, தினமும் காலை 9.30 மணி முதல், பகல் 12 மணி வரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக, விழா நடைபெறும் நாட்களில் அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
30-ந் தேதி மாலை, 5.30 மணிக்கு மேல் மலை கோவிலில் இருந்து, படிக் கட்டுகள் வழியாக, உற்சவமூர்த்திகளை, அடிவாரத்திற்கு அழைத்து வந்து. அங்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கும்.
அதைத்தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு மேல், சென்னிமலை நகரில் நான்கு ராஜா வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ விதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.
- பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.
மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 2500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சித்தோடு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோடு- சக்தி ரோடு, சித்தோடு ஸ்டேட் பேங்க் பின்புறம் ஒரு வாலிபர் இரவு 10.30 மணி அளவில் விதிமுறைகளை மீறி சரவெடி பட்டாசை வெடித்து கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
- கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.
மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விட ப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.தொடர்ந்து இன்று 10 -வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது
அணைக்கு வினாடிக்கு 2600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ள ளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
- போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன் உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூர் ஓடைப்பள்ளம் பாலம் அருகில் உள்ள நீரோடையில் கடந்த 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆணின் உடல் கிடப்பதாக பிரம்மதேசம் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார். அந்தியூர் போலீஸ்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இறந்தது யார் எந்த ஊர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் அந்தியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
இதனை அடுத்து சமூக வலைதளங்களில் இது குறித்து விவரங்களை பதிவிட்டு போலீசார் விசாரணையை தீவிர ப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சீரங்கன் (48) கால்நடை வியாபாரி கடந்த 22-ந் தேதி வியாபாரத்திற்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை இவர் எப்பொழுதும் வியாபாரத்திற்கு சென்றால் 4, 5 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்சமூக வலைதளங்களில் பதிவிட்ட அங்க அடையாளங்களை வைத்து இறந்தவர் தனது கணவர் என்பதை அவரது மனைவி பழனியம்மாள் உறுதி செய்தார்.
இதனை அடுத்து போலீசார் பெருந்துறையில் வைக்கப்பட்டுள்ள சீரங்கன்உடலை இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இறந்த சீரங்கனுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
- கந்த சஷ்டி தொடக்க விழா நாளன்று சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவி லுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
- மதியம் 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடை பெற்றது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை தொடங்கியது. கந்த சஷ்டி தொடக்க விழா நாளன்று சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு உற்ச மூர்த்திகள் புறப்பாடு தொடங்கி படி வழியாக மலை கோவிலை காலை 8.20 மணிக்கு சென்ற டைந்தது.
கந்தசஷ்டி விழாவின் தொடக்க நாளான இன்று காலை 10 மணிக்கு சென்னிமலை மலைமீது முருகன் கோவி லில் கலச ஸ்தாபனம், யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
மதியம் 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடை பெற்றது. மயில் வாகன த்திற்கு காப்பு கட்டிய பின்னர் முருகப்பெரு மானுக்கும் காப்பு கட்டப்பட்டது.
இதை தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவிலுக்கு முன்பு உள்ள இளைப்பாறும் மண்டபத்தில் பக்தர்களுக்கு கோவிலின் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவசச்சாரியார் காப்பு கட்டினார்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற கைகளில் காப்புக் கட்டிக் கொண்டனர்.காப்புக் கட்டிக் கொண்ட பக்தர்கள் அனைவரும் 6 நாட்களும் விரதம் மேற்கொள்கிறார்கள்.
தொடக்க நாளான இன்று உள்ளூர்,வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்ட ங்களில் இருந்தும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்தனர்.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா வரும் 30 -ந் தேதி இரவு நடக்கிறது. திருக்கல்யாண உற்சவம் 31 ந் தேதி சென்னிமலை டவுன், கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடக்கிறது.
- காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு அடக்கம் செய்யப்பட்ட துரைசாமியின் சடலம் மேலே வந்துள்ளது.
- உதயகுமார் தனது தந்தையின் உடலை பெற்றுக் கொண்டு மீண்டும் 2-வது முறையாக 6 அடி குழி தோண்டி முறையாக காரியங்கள் செய்து துரைசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் காவிரி ஆற்று தடுப்பணை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்து முதலில் யாரோ கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது. இதை அடுத்து பகுதி சேர்ந்த மக்கள் காவிரி ஆற்று தடுப்பணை பகுதியில் குவிந்தனர்.
இது குறித்து மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை செய்தபோது இறந்தவர் பற்றிய அடையாளம் தெரியவந்தது. பாசூர் அருகே உள்ள செங்கோடம் பாளையத்தை சேர்ந்த துரைசாமி (70) முதியவர் உடல் என தெரியவந்தது.
அவர் கடந்த மாதம் 25-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு முறையாக கைகட்டு, கால்கட்டு, வாய்க்கட்டு, வாய்க்கு அரிசி, காலில் மஞ்சள் கயிறு கட்டி காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள இடுகாட்டில் முறையாக அடக்கம் செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு அடக்கம் செய்யப்பட்ட துரைசாமியின் சடலம் மேலே வந்துள்ளது. ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு அருகே உள்ள முட்புதரில் உடல் சிக்கிக்கொண்டதால் தண்ணீர் வற்றிய பிறகு துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. போலீஸ் சார்பில் மேற்கண்ட தகவல் தெரிய வந்தது.
இதனை எடுத்து மலையம்பாளையம் போலீசார் இது குறித்து துரைசாமி மகன் உதயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். உதயகுமார் தனது தந்தையின் உடலை பெற்றுக் கொண்டு மீண்டும் 2-வது முறையாக 6 அடி குழி தோண்டி முறையாக காரியங்கள் செய்து துரைசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்து போன நபரை இரண்டு முறை அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






