search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "at Chennimalai Murugan temple"

    • இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.
    • முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிவில் ஒவ்வொரு வருடமும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழித்து சகல நன்மைகளும் எல்லோருக்கும் வேண்டி அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அக்னி நட்சத்திர விழா அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மாலை சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக்குடங்களுடன் தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பா ளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    தொடர்ந்து காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை மலை கோவிலில் கணபதி ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், அஸ்த்ர ஜபம் சாந்தி ேஹாமம் முதல்கால யாக வேள்வி, பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியாக 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர். பின்னர் அன்று காலை 7.30 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, ஸ்கந்த ஹோமம், பூர்ணாகுதி ஆகியவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாரா தனையும், அதைத்தொடர்ந்து 1 மணிக்கு உற்சவமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை முருகன் அடிமை சுப்புசாமி தலைமையில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது.
    • பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.

    சென்னிமலை:

    2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது.

    பின்னர் மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணி முதல் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அப்போது முருகப்பெருமான் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்ததால் மலை கோவிலில் மேல் வாகனங்கள் நிறுத்த இடம்பற்றாக்குறை ஏற்பட்டது.

    பின்னர் கார்கள் நிறுத்தப்பட்டு 10 கார்கள் மட்டும் அனுமதிக்கபட்டு மீண்டும் 10 கார்கள் கீழே வந்தால் மேலும் 10 கார்களை அனுப்புவது என பணியாளர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

    கோவில் வளாகத்தில் மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம் இருந்தது. சிறப்பு தரிசனத்தில் அரை மணி நேரமும், தர்ம தரிசனத்தில் ஒரு மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி, தெய்வானை, தன்னாசியப்பன், பின்னாக்கு சித்தர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.

    • கந்த சஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.
    • 31-ந் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ விதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு 7.30 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளை, 1320 படிக்கட்டுகள் வழியாக, மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அமைக்கப் பட்டிருந்த, யாக சாலையில் விநாயகர் வழிபாடு, யாக பூஜைகள் ஹோமங்கள் பூர்ணாகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், பன்னீர், தேன், சந்தனம் உட்பட 108 வகையான திரவியங்களுடன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிேஷகமும், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து சாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பிறகு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் பலர் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற, விழா நடைபெறும் ஆறு நாட்களும், விரதத்தை தொடங்கும் முகமாக கைகளில் காப்பு கட்டி கொண்டனர்.

    பக்தர்களுக்கு தலைமை குருக்கள் ராமநாதசிவம் காப்புகட்டிவிட்டார். கந்த சஷ்டி விழா, வருகிற 30-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    அப்போது, தினமும் காலை 9.30 மணி முதல், பகல் 12 மணி வரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக, விழா நடைபெறும் நாட்களில் அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    30-ந் தேதி மாலை, 5.30 மணிக்கு மேல் மலை கோவிலில் இருந்து, படிக் கட்டுகள் வழியாக, உற்சவமூர்த்திகளை, அடிவாரத்திற்கு அழைத்து வந்து. அங்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கும்.

    அதைத்தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு மேல், சென்னிமலை நகரில் நான்கு ராஜா வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ விதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்.

    ×