என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிதம் எழுதி வைத்துவிட்டு"

    • சுகுணாவுக்கு கடந்த சில நாட்களாக காது வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • வீட்டை விட்டு மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     ஈரோடு, அக். 27-

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள வீரணம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா (23). இவர், பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையத்தில் கடந்த 6 மாதங்களாக ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    சுகுணாவுக்கு கடந்த சில நாட்களாக காது வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மதியம் சுகுணா வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததை அவரது சகோதரி மாலதி பார்த்துள்ளார். அதன்பின் சுகுணாவை காணவில்லை. அக்கம் பக்கம், உறவினர் வீடுகள் என எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    வீட்டில் உள்ளவர்கள் டி.வி.ஸ்டேண்டில் பார்த்தபோது ஒரு கடிதம் இருந்தது. அதில், தனக்கு காதுவலி அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் சுகுணா எழுதி வைத்துச் சென்ற கடிதம் கிடைத்தது.

    இதுகுறித்து சுகுணாவின் அக்கா மாலதி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வந்தனர். இந்நிலையில் வீரணம் புதூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சுகுணா பிணமாக மிதப்பதாக பெருந்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில்கயிறு கட்டி இறங்கி சுகுணாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து பெருந்துறை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுகுணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை விட்டு வெளி யேறிய சுகுணா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டை விட்டு மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ×