என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் பிணமாக மீட்பு"

    • சுகுணாவுக்கு கடந்த சில நாட்களாக காது வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • வீட்டை விட்டு மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     ஈரோடு, அக். 27-

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள வீரணம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா (23). இவர், பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையத்தில் கடந்த 6 மாதங்களாக ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    சுகுணாவுக்கு கடந்த சில நாட்களாக காது வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மதியம் சுகுணா வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததை அவரது சகோதரி மாலதி பார்த்துள்ளார். அதன்பின் சுகுணாவை காணவில்லை. அக்கம் பக்கம், உறவினர் வீடுகள் என எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    வீட்டில் உள்ளவர்கள் டி.வி.ஸ்டேண்டில் பார்த்தபோது ஒரு கடிதம் இருந்தது. அதில், தனக்கு காதுவலி அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் சுகுணா எழுதி வைத்துச் சென்ற கடிதம் கிடைத்தது.

    இதுகுறித்து சுகுணாவின் அக்கா மாலதி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வந்தனர். இந்நிலையில் வீரணம் புதூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சுகுணா பிணமாக மிதப்பதாக பெருந்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில்கயிறு கட்டி இறங்கி சுகுணாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து பெருந்துறை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுகுணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை விட்டு வெளி யேறிய சுகுணா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டை விட்டு மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • பின்னர் வேலூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நெட்டையம்பாளையம், பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் ( வயது 65). கூலித்தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து காணாமல் போன தந்தையை, அவரது மகன் ஈஸ்வரன் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.

    பின்னர் வேலூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்வதை தேடி வந்தனர். இந்த நிலையில் சேளூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள விஸ்வநாதன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசா–ருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    தகவலின் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தினர்.

    இதில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன செல்வம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). கூலித் தொழிலாளி.
    • அனிச்சம்பாளையத்தில் உள்ள தனது மருமகள் முத்துலட்சுமியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு சோமசுந்தரம் (34) என்ற ஒரு மகனும், புஷ்பவள்ளி (28) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    குப்புசாமி நேற்று அனிச்சம்பாளையத்தில் உள்ள தனது மருமகள் முத்துலட்சுமியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது, இந்த விஷேசத்திற்காக வாழை இலை அறுப்பதற்கு அனிச்சம்பாளையத்தில் உள்ள மணல்மேடு பகு திக்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் குப்புசாமி வீட்டுக்கு வரவில்லை.

    இதனால் சந்தேக மடைந்த உறவினர்கள், அப்பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது அங்கிருந்த கிணற்றில், குப்புசாமி பிணமாக மிதந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ னைக்கு அனுப்பி வைத்த னர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குப்புசாமி தவறி விழுந்த இறந்தாரா? வேறு ஏதும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சாவில் சந்தேகம் என புகார்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த புதிய அத்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (வயது 34) கட்டிட உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (47) என்பவருக்கும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரகு (40) இவருக்கும் திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர்.

    ரகுக்கும் இந்துமதிக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பெங்களூருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 15, நாட்களுக்கு முன்பு ரகு முதல் மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முதல் மனைவி உடன் வாழ்வதாக ரகு சம்மதம் தெரிவித்ததின் பேரில் இந்துமதியை தனது கணவருடன் வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 31ஆம் தேதி இந்துமதி காணவில்லை இது குறித்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று கிணற்றில் இந்துமதி பிணமாக மிதப்பதை பார்த்த அவரது உறவினர்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசில் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அங்கு வந்த போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்துமதியின் உறவினர்கள் தாலுகா போலீஸ் நிலையத்தில் இந்துமதி சாவிற்கு ரகு தான் காரணம் என கூறி புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் சந்தியா (வயது23). இவருக்கும் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    மேலும் இவர்களுக்கு கவின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் சந்தியா திடீரென சுயநினைவு மாறி மாறி பேசி வந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் தீய அமானுஷ சக்தி தாக்கப்பட்டுள்ளதாக கருதி கோவிலுக்குச் சென்றும், மந்திரம் போட்டும் வந்துள்ளனர்.

    ஆனால் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் பிரபாகரன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதால் நேற்று முன்தினம் பிரபாகரன் புதுக்கோட்டையில் உள்ள தனது வீட்டிலிருந்து குழந்தையையும், சந்தியாவையும் அவரது தாய் வீடான மண்டலவாடியில் விட்டு விட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை சந்தியா வீட்டில் இருந்தவர் திடீரென காணாமல் சென்றுள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தியாவின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் அரை மணி நேரம் போராடி பாதாள சங்கிலி போட்டு சோதனை செய்தனர். அப்போது சங்கிலியில் மாட்டிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் சந்தியாவை பிணமாக மீட்டனர்.

    இதனையெடுத்து ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×