என் மலர்
நீங்கள் தேடியது "Recovery of a corpse in a well"
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- பின்னர் வேலூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நெட்டையம்பாளையம், பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் ( வயது 65). கூலித்தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து காணாமல் போன தந்தையை, அவரது மகன் ஈஸ்வரன் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.
பின்னர் வேலூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்வதை தேடி வந்தனர். இந்த நிலையில் சேளூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள விஸ்வநாதன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசா–ருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தினர்.
இதில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன செல்வம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). கூலித் தொழிலாளி.
- அனிச்சம்பாளையத்தில் உள்ள தனது மருமகள் முத்துலட்சுமியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு சோமசுந்தரம் (34) என்ற ஒரு மகனும், புஷ்பவள்ளி (28) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
குப்புசாமி நேற்று அனிச்சம்பாளையத்தில் உள்ள தனது மருமகள் முத்துலட்சுமியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது, இந்த விஷேசத்திற்காக வாழை இலை அறுப்பதற்கு அனிச்சம்பாளையத்தில் உள்ள மணல்மேடு பகு திக்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் குப்புசாமி வீட்டுக்கு வரவில்லை.
இதனால் சந்தேக மடைந்த உறவினர்கள், அப்பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது அங்கிருந்த கிணற்றில், குப்புசாமி பிணமாக மிதந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ னைக்கு அனுப்பி வைத்த னர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குப்புசாமி தவறி விழுந்த இறந்தாரா? வேறு ஏதும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.






