என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு
    X

    காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • பின்னர் வேலூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நெட்டையம்பாளையம், பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் ( வயது 65). கூலித்தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து காணாமல் போன தந்தையை, அவரது மகன் ஈஸ்வரன் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.

    பின்னர் வேலூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்வதை தேடி வந்தனர். இந்த நிலையில் சேளூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள விஸ்வநாதன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசா–ருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    தகவலின் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தினர்.

    இதில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன செல்வம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×