search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confectionery"

    • சென்னிமலை பகுதியில் உள்ள இனிப்பு, கார வகைகள் கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.
    • பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலத்தின் அளவு, சைவ மற்றும் அசைவ குறியீடு அவசியம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு கடைகளில் சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வில் இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பத ற்கான தரமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

    உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகி க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மறுமுறை சூடுபடுத்தி உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச் சீட்டில் முழு முகவரி, உணவு பொருட்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலத்தின் அளவு, சைவ மற்றும் அசைவ குறியீடு அவசியம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    ×