search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Specialist Seed Production Area"

    • பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல்-கோ55 ரகத்தில் வல்லுநர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.
    • மேலும் இந்த ரகமானது 66 சதவீதம் அரவைத்திறன் கொண்டது.

    ஈரோடு:

    தமிழ்நாடு வேளாண்மை ப்பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களை கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.

    அவ்வாறு வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளைக்கொண்டு தமிழ்நாடு வேளாண்மை ப்பல்கலைக்கழகம், கோவை மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப் பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணைகளுக்கு விதை பெருக்கத்திற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழுவானது விதைப்பயிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத்தரத்தினை உறுதி செய்கின்றது.

    இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல்-கோ55 ரகத்தில் வல்லுநர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.

    இந்த ரகமானது தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தால் 2022-ம் ஆண்டு ஆர்என்ஆர் ரகத்திற்க்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது. 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய சன்ன ரகமாகும். ஒரு எக்டருக்கு சராசரியாக 6500 கிலோ தர வல்லது.

    மேலும் இந்த ரகமானது 66 சதவீதம் அரவைத்திறன் கொண்டது.

    இந்த ரகத்தின் சான்று பெற்ற விதைகள் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைலர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு, அமுதா, மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் மற்றும் பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் மாரிமுத்து அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது. ஆய்வின் போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள் , பயிர் விலகு தூரம், குறித்தறி–விக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவை–யான அனைத்து நடைமுறை–களையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ×