கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா

பெருந்துறை கோட்டை மாரியம்மன், கோட்டை முனியப்ப சாமி கோவில் பொங்கல் திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.இன்று காலை முதல் ஏராள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா
Published on

பெருந்துறை:

பெருந்துறை கோட்டை மாரியம்மன், கோட்டை முனியப்ப சாமி கோவில் பொங்கல் திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.

இந்த கோட்டை மாரியம்மன் மற்றும் முனியசாமி கோவில் சோழர்கால முதற்கொண்டு பல சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரக்கூடிய முதல் புதன்கிழமை அன்று சுவாமிக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் திருவிழாவாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இன்று காலை முதல் ஏராள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் விழாவிற்கு பெருந்துறை போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.

மேலும் தீ விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பெருந்துறை தீயணைப்பு நிலையத்தினர் தீயணைப்பு வாகனத்தை கோவில் வளாகத்தில் நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com