என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஒருவரது வீட்டில் தாமோதரனும் மற்றொரு நபரும் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றனர்.
    • அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை அடுத்துள்ள பெ.வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (40). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாமோதரன் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் தாமோதரனும் மற்றொரு நபரும் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றனர்.

    வேலை செய்து கொண்டிருந்தபோது தாமோதரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து விட்டார்.

    உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து தாமோதரனின் தந்தை ராஜன் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமணமாகி சில மாதங்களி லேயே இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.
    • இந்த நிலையில் பொலவ காளி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நந்தினி விஷம் குடித்து விட்டார்.

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளி பாளையம் பகுதியை சேர்ந்த வர் நந்தினி (வயது 24). இவருக்கும் கோவையை சேர்ந்த வேலுமணி என்பவ ருக்கும் கடந்த 4 ஆண்டுக ளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமாகி சில மாதங்களி லேயே இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நந்தினி மனம் உடைந்து காண ப்பட்டார்.

    இந்த நிலையில் பொலவ காளி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நந்தினி விஷம் குடித்து விட்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாப மாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கோபிசெட்டி பாளையம் ஆர்.டி.ஓ. திவ்யா பிரியதர்சினி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நீலகண்டன் ஆகியோரும் தொடர்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • மனைவி யிடம் சண்டையிட்டு கொண்டு வீட்டை விட்டு சென்ற வீரமணி வீடு திரும்பவில்லை.
    • இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை அடுத்துள்ள கே.என்.பாளையம் தெம்பினி காலனியை சேர்ந்தவர் வீரமணி (42). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். வீரமணியும், செல்வியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

    இந்த நிலையில் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான வீரமணி வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு சென்று விடுவார். பின்னர் 2 நாளில் மீண்டும் திரும்பி வந்துவிடுவார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல மனைவி யிடம் சண்டையிட்டு கொண்டு வீட்டை விட்டு சென்ற வீரமணி வீடு திரும்பவில்லை.

    சம்பவத்தன்று இரவு அதே ஊரை சேர்ந்த நபர் ஒருவர் செல்விக்கு போன் செய்து கணவர் வீரமணி சத்தியமங்கலம் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பாக மயங்கி கிடப்பதாகவும், அவரை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து செல்வி உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது டாக்டர் வரும் வழியிலேயே வீரமணி இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    • வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஈரோடு

    ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 20 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் ஆகியோர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

    தங்கள் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பல்வேறு வழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் விரைந்து வாக்குச்சாவடிகளுக்குச் செல்லக்கூடிய வழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தணிக்கை செய்து வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்தின் நிலை, வாக்குச்சாவடிக்கட்டிடம், தளவாடங்கள், அடிப்படை வசதிகள் (குடிநீர் வசதி, சாய்வுதளவசதி, மின் வசதி, கழிப்பறை வசதி, தொலைபேசி வசதி) மற்றும் பாதுகா ப்பு தொடர்பான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    பிரச்சினைக்குரிய மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழக்கூடிய வாக்குச்சாவடிகள் இருப்பின் அது குறித்து ஆய்வு செய்து முந்தைய காலத்தில் ஏதாவது சம்பவங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும், ஜாதி, இன கலவரங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும்,

    தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடைபெற்று ள்ளதா என்பது குறித்தும் விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மண்டல அலுவலர் மற்றும் உதவி மண்டல அலுவலர் ஆகியோர் மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை

    தங்களது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் இது குறித்து விரிவான விளம்பரத்தை அந்தப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஏற்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் பணிபுரிகின்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கத்தக்க வகையில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குப்பதியும் நாளுக்கு முந்தைய நாளில் செய்ய வேண்டியவை தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் உரியஅனைத்து படிவங்கள், கவர்கள், இதரபொருட்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பச்சைநிற முத்திரைத் தாள்கள உலோக முத்திரை அழியாமைக்குப்பிகள் வாக்காளர் பட்டியல்கள், தேவையான அளவு உபரி படிவங்கள், கவர்கள், பொருட்கள் ஆகியவற்றை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று உரிய பொருட்களை கொடுத்த பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் வருகை புரிந்து உள்ளார்களா என்பதை சரிபார்த்து கொள்ளவேண்டும்.

    அலுவலர்கள் பணிக்கு வராத நேர்வுகளில் மாற்று ஏற்பாடு உடனே செய்யப்பட வேண்டும். இதற்கு வசதியாக தேவை யான அளவு ரிசர்வ் வாக்குப்பதிவு அலுவலர்களை நீங்கள் கைவசம் வைத்திருப்பது அவசியம்.

    தாலூகா வட்டார தலைமையிடத்தில் இருந்து தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகள் அடங்கிய மண்டல அலுவலர்கள் கட்டாயம் ரிசர்வ் பணியாளர்களை தேவையான அளவு தங்களது வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும்.

    தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி களுக்கும் 100 மீட்டர்சுற்று எல்லைக்குள் எவ்வித சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருக்கக்கூடாது என்பதும், வேட்பாளர்களின் தேர்தல் சாவடிகள் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும்.

    மேலும் வாக்குச்சாவடி அமையப்பெற்றுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்து மேற்படி இனங்களை உடனடியாக அகற்றுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறு இயக்குவதுஎன்பதை அவர்களை செய்து காட்டச் சொல்ல வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று செய்ய வேண்டியவை காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி அதனை உடனே தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தொலைபேசி மூலமாக தெரிவிக்க வேண்டும்.

    மாதிரி வாக்குப்பதிவு தேர்தல் மின்னணுவாக்குப்பதிவு எந்திரத்தில் ஏஜெண்ட்டுகளுக்கு செய்து காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஏதாவதொரு வாக்குச்சாவடியில் தாமதம் காணப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலருக்கு உரிய உதவிகள் செய்து, வாக்குப்பதிவினை தாமதம் இன்றி ஆரம்பித்து வைக்கஆவண செய்ய வேண்டும்.

    வாக்குச்சாவடிகளில் இருப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்க ப்பட்ட நபர்களை தவிரவேறு எவரும் வாக்குச்சாவடிகளில் இருப்பார்களே யானால் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று குறைந்தபட்சம் 3 தடவையாவது ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பார்வையிட வேண்டும். 2 மணிக்கொரு ஒருமுறை பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    வாக்குப்பதிவு முடியற்ற பின்பு பட்டியலில் கண்டமுறைப்படி தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடமிருந்து பெற்று, அவருக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு, வாக்குச்சீட்டுகணக்கு, பேப்பர்சீல் கணக்கு மற்றும் டிக்ளரேசன் ஆகியவற்றை தனியாகப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்ட ல அலுவலர்களுக்கு மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது தொ டர்பான செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • அதில் மின்கசிவு இருந்துள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் மரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (43). கட்டுமான தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் நள்ளிரவில் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த துணை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. இதனால் மோகனசுந்தரம் தூக்கி வீசப்பட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இது குறித்து வெள்ளித்திருப்பூர் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டிவலசு சாஸ்திரி சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). பெயிண்டர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் காணப்பட்டார். சம்பவத்தன்று வெங்கடாசலத்தின் மனைவி வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடாசலம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 98.90 அடியாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 98.90 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 733 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 1,800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 2,950 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

    • மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    பவானி

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கல்பாவி, பெரியகுரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல்.

    இவரது மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்லவேல் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது.

    இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லையாம். இதனால் சுகன்யா மன முடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    இதையறிந்த சுகன்யாவின் அக்கா சத்யா அளித்த தகவலின் பேரில் உடனடியாக அவரை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இன்று 5-வது நாளாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் நடைபெற்றது.
    • தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளேன்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். சில சுயேச்சைகள் வினோதமான முறையில் வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 5-வது நாளாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் நடைபெற்றது.

    அப்போது சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவாயிலில் அவரை தடுத்து நிறுத்தி இதே கோலத்தில் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். இதனை எடுத்து அவர் சாதாரண உடை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது,

    நான் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக பாட்டில் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். எதற்காக விதவை கோலத்தில் வந்தேன் என்றால் கரூரில் குடியரசு தின விழா அன்று டாஸ்மாக் கடையில் அதிக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களைவிட மது குடித்து இறந்தவர்களின் விதவை மனைவிகள் எண்ணிக்கை அதிகம். மது குடிப்பவர்கள் எப்பவும் தெளிவாக இருப்பார்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள். தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளேன்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் எனது மனுவை நான் வாபஸ் பெறுவேன் என்றார்.

    இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • குழந்தைகளுக்கான ஜவுளிகள் முதல் இளைஞர்கள், வயதானவர்கள் வரை ஜவுளிகள் உள்ளன.
    • பொதுவாக வெளி மாநில வியாபாரிகள் ரூ.5 லட்சம் வரை ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் புகழ்பெற்ற ஜவுளி சந்தை (கனி) மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 236 தினசரி கடைகளும், 720 வார சந்தை கடைகளும் செயல்பட்டு வருகின்றன. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜவுளி சந்தை உலகப்புகழ் பெற்றது.

    வாரச்சந்தைக்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள். மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளிகளின் விலை குறைவாக இருப்பதால் இங்கு எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குழந்தைகளுக்கான ஜவுளிகள் முதல் இளைஞர்கள், வயதானவர்கள் வரை ஜவுளிகள் உள்ளன. வாரச்சந்தை நடைபெறும் அன்று ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். விசேஷ நாட்களில் மட்டும் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். உள்ளூர் வியாபாரிகளும், வெளி மாவட்ட வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள்.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஈரோடு ஜவுளி சந்தை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால் கடந்த 2 வாரமாக வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    இதனால் மொத்த வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

    பொதுவாக வெளி மாநில வியாபாரிகள் ரூ.5 லட்சம் வரை ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதேபோல் வெளி மாவட்ட வியாபாரிகளும் குறைந்த அளவே வருகின்றனர். இதனால் ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறும்போது,

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில வெளிமாநில வியாபாரிகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். அவர்கள் முகவரிக்கு துணிகளை அனுப்பி வருகிறோம். ஆனாலும் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறவில்லை என்றனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
    • வாகன சோதனையில் இதுவரை 17 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான 25,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் ரொக்க பணம், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பரிசுப்பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை 10 பேரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.13 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தப் பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர போலீசார் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 17 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான 25,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேப்போல் 4,800 ரூபாய் மதிப்பிலான கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர்.
    • குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றோம். இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள்.

    இந்த ஆட்சியின் திட்டங்களும் முதல்-அமைச்சரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ ரூ.400 கோடி மதிப்பில் ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாநகராட்சியில் எந்த பகுதிக்கு சென்றாலும் மழை நீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை விரிவாக்க பணி என ஏராளமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதனால் சாலைகள் கூட சில இடங்களில் சேதம் அடைந்திருக்கின்றன.

    பாதாள சாக்கடையும், புதிய மழைநீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்த சாலைகள் புதுப்பித்து தரப்படும். அந்த பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் செய்யப்படும்.

    ஈரோடு மாநகராட்சி ஒரு மிகச்சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த முதல்-அமைச்சர் ரூ.400 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர். குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    அதனால் 7.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு உரியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், ஆண் வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தாலும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், நிறுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் சுப்பிரமணியனை வரவேற்க பெண்கள் ஆரத்தி மற்றும் திருஷ் தேங்காயுடன் வீடுகளில் நின்று இருந்தனர். அப்போது அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடம் இருந்து ஆரத்தியை வாங்கி வாக்காளர்களுக்கே ஆரத்தி எடுத்தார். மேலும் அவர்களது தலையை தேங்காயால் சுற்றி உடைத்தார்.

    ×