விஷம் குடித்து பெண் தற்கொலை

மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

பவானி

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கல்பாவி, பெரியகுரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல்.

இவரது மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்லவேல் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது.

இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லையாம். இதனால் சுகன்யா மன முடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

இதையறிந்த சுகன்யாவின் அக்கா சத்யா அளித்த தகவலின் பேரில் உடனடியாக அவரை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com