search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for Zonal Officers"

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    • வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஈரோடு

    ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 20 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் ஆகியோர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

    தங்கள் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பல்வேறு வழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் விரைந்து வாக்குச்சாவடிகளுக்குச் செல்லக்கூடிய வழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தணிக்கை செய்து வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்தின் நிலை, வாக்குச்சாவடிக்கட்டிடம், தளவாடங்கள், அடிப்படை வசதிகள் (குடிநீர் வசதி, சாய்வுதளவசதி, மின் வசதி, கழிப்பறை வசதி, தொலைபேசி வசதி) மற்றும் பாதுகா ப்பு தொடர்பான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    பிரச்சினைக்குரிய மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழக்கூடிய வாக்குச்சாவடிகள் இருப்பின் அது குறித்து ஆய்வு செய்து முந்தைய காலத்தில் ஏதாவது சம்பவங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும், ஜாதி, இன கலவரங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும்,

    தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடைபெற்று ள்ளதா என்பது குறித்தும் விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மண்டல அலுவலர் மற்றும் உதவி மண்டல அலுவலர் ஆகியோர் மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை

    தங்களது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் இது குறித்து விரிவான விளம்பரத்தை அந்தப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஏற்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் பணிபுரிகின்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கத்தக்க வகையில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குப்பதியும் நாளுக்கு முந்தைய நாளில் செய்ய வேண்டியவை தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் உரியஅனைத்து படிவங்கள், கவர்கள், இதரபொருட்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பச்சைநிற முத்திரைத் தாள்கள உலோக முத்திரை அழியாமைக்குப்பிகள் வாக்காளர் பட்டியல்கள், தேவையான அளவு உபரி படிவங்கள், கவர்கள், பொருட்கள் ஆகியவற்றை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று உரிய பொருட்களை கொடுத்த பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் வருகை புரிந்து உள்ளார்களா என்பதை சரிபார்த்து கொள்ளவேண்டும்.

    அலுவலர்கள் பணிக்கு வராத நேர்வுகளில் மாற்று ஏற்பாடு உடனே செய்யப்பட வேண்டும். இதற்கு வசதியாக தேவை யான அளவு ரிசர்வ் வாக்குப்பதிவு அலுவலர்களை நீங்கள் கைவசம் வைத்திருப்பது அவசியம்.

    தாலூகா வட்டார தலைமையிடத்தில் இருந்து தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகள் அடங்கிய மண்டல அலுவலர்கள் கட்டாயம் ரிசர்வ் பணியாளர்களை தேவையான அளவு தங்களது வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும்.

    தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி களுக்கும் 100 மீட்டர்சுற்று எல்லைக்குள் எவ்வித சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருக்கக்கூடாது என்பதும், வேட்பாளர்களின் தேர்தல் சாவடிகள் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும்.

    மேலும் வாக்குச்சாவடி அமையப்பெற்றுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்து மேற்படி இனங்களை உடனடியாக அகற்றுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறு இயக்குவதுஎன்பதை அவர்களை செய்து காட்டச் சொல்ல வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று செய்ய வேண்டியவை காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி அதனை உடனே தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தொலைபேசி மூலமாக தெரிவிக்க வேண்டும்.

    மாதிரி வாக்குப்பதிவு தேர்தல் மின்னணுவாக்குப்பதிவு எந்திரத்தில் ஏஜெண்ட்டுகளுக்கு செய்து காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஏதாவதொரு வாக்குச்சாவடியில் தாமதம் காணப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலருக்கு உரிய உதவிகள் செய்து, வாக்குப்பதிவினை தாமதம் இன்றி ஆரம்பித்து வைக்கஆவண செய்ய வேண்டும்.

    வாக்குச்சாவடிகளில் இருப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்க ப்பட்ட நபர்களை தவிரவேறு எவரும் வாக்குச்சாவடிகளில் இருப்பார்களே யானால் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று குறைந்தபட்சம் 3 தடவையாவது ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பார்வையிட வேண்டும். 2 மணிக்கொரு ஒருமுறை பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    வாக்குப்பதிவு முடியற்ற பின்பு பட்டியலில் கண்டமுறைப்படி தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடமிருந்து பெற்று, அவருக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு, வாக்குச்சீட்டுகணக்கு, பேப்பர்சீல் கணக்கு மற்றும் டிக்ளரேசன் ஆகியவற்றை தனியாகப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்ட ல அலுவலர்களுக்கு மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது தொ டர்பான செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×