நெஞ்சுவலியால் கூலித்தொழிலாளி சாவு

ஒருவரது வீட்டில் தாமோதரனும் மற்றொரு நபரும் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
நெஞ்சுவலியால் கூலித்தொழிலாளி சாவு
Published on

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை அடுத்துள்ள பெ.வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (40). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாமோதரன் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் தாமோதரனும் மற்றொரு நபரும் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றனர்.

வேலை செய்து கொண்டிருந்தபோது தாமோதரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து விட்டார்.

உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தாமோதரனின் தந்தை ராஜன் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com