என் மலர்
ஈரோடு
- கொங்காலம்மன் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடை பெற்றது.
- இதைத்தொடர்ந்து நாளை அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும், 108 வலம்புரி சங்கு அபிஷேகம், தெப்ப உற்சவமும் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு கொங்காலம்மன் கோவில் தைப்பூச தேர் திருவிழா கடந்த 27-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி யது. 28-ந் தேதி கொடி யேற்றமும். கிராம சாந்தியும் நடை பெற்றது.
இதை தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது.
இதையொட்டி கொங்காலம்மன் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடை பெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கொங்காலம்மன் கோவிலில் இருந்து தொட ங்கிய தேரோட்டம் ஆர்.கே. வி. ரோடு, மணிக்கூண்டு, மண்டபம் வீதி, பெரியார் வீதி, காரை வாய்க்கால் கோவில் பகுதி, கச்சேரி வீதி, பன்னீர்செல்வம் பார்க் வழியாக கோவிலை வந்தடைந்தது.
தேரோட்ட விழாவில் இந்து அறநிலைய துறை உதவி ஆணையாளர் அன்ன க்கொடி, செயல் அலுவலர் முத்துசாமி. லட்சாதிபதி பூண்டு மண்டி சரவணகுமார், கார்த்திகேயன், பழனியப்பா செந்தில்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
லட்சாதிபதி பூண்டு மண்டி சார்பில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாளை அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும், 108 வலம்புரி சங்கு அபிஷேகம், தெப்ப உற்சவமும் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்
விழாவையொட்டி மாதுவின் கொங்கு ஆர்கெஸ்ட்ரா இசை கச்சேரி நடைபெற உள்ளது.
- கவின் கருங்கல்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த சிவகுமாரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம், வினாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கவின் (33).
இவர் கிருஷ்ணம்பாளையம், மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (52) என்பவர் வெள்ளைத் தாளில் எண்களை எழுதி தடை செய்யப்பட்டுள்ள கேரள லாட்டரி சீட்டு என கூறி ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து கவின் கருங்கல்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த சிவகுமாரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.400 மதிப்பிலான கேரள லாட்டரிகள் 10-ஐ பறிமுதல் செய்தனர்.
- தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்க ளில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
- அதிகாலை முருகனுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
ஈரோடு:
தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்க ளில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு அடுத்த திண்டல் மலை வேலாயுதசாமி சாமி கோவிலில் இன்று அதிகாலை முருகனுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
முன்னதாக பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் அதிகாலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதிகளை சேர்ந்த பெண்கள் பலர் திண்டல் மலைக்கு பாத யாத்திரை வந்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் பவள மலை முத்துக்குமார சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 2-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. விநாயகர் பூஜையும் கொடியேற்றமும், சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.
இதை தொடர்ந்து யாக சாலை பூஜை, தீபாரா தனை, யானை வாகனத்தில் முத்துக்குமாரசாமி திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை அபிஷேகமும், யாகசாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முத்துகுமாரசாமி கிரிவலம் வந்தார்.
தைப்பூச விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு முத்து விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பெண்கள் பலர் பதி மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.
இதையடுத்து காலை திருக்கல்யாண உற்சவம் நடை பெற்றது. இதை தொடர்ந்து மகா தீபாரா தனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது.
தொடர்ந்து நாளை காலை சண்முகசுப்பிரமணி யருக்கு அபிஷேகம், சிவப்பு சாற்றி அலங்காரமும் நடைபெற உள்ளது.
மேலும் கோபி பச்சை மலை சுப்பிரமணியசாமி கோவிலிலும் தைப்பூச திருவிழாவையொட்டி மலை அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறு கிறது.
இதேபோல் கோபி கடைவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில், மூல வாய்க்கால் சுப்ரமணியசாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தைப்பூச விழா நடந்தது.
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள இரப்பரை பகுதியில் ஓதிமலை ஆண்டவர் முருகன் கோவில் அமைந்து உள்ளது. தைப்பூச விழாவை யொட்டி 5 முகம் கொண்ட மலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.
முன்னதாக நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் இளநீர், பன்னீர் காவடிகளை எடுத்து வந்தனர். தொடர்ந்து இன்று காலை வரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் காவடி எடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. இதில் சின்ன தேர் மற்றும் பெரிய தேர் என 2 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கி றார்கள்.
பவானியில் உள்ள பழனியாண்டவர் கோவி லில் தைப்பூச திருவிழா கடந்த 27-ந் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் பழனி யாண்டவருக்கு நடை பெற்றது.
பழணியாண்டவர் கோவிலில் இருந்து கடந்த 31-ந் தேதி பவானியில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டுச் சென்றனர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான இன்று வள்ளி, தெய்வானை உடனமர் பழனியாண்டவருக்கு பக்தர்கள் முன்னிலையில் இன்று காலை பழனி யாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் நடை பெற்றது.
பின்னர் இன்று காலை பக்தர்கள் அேராகரா கோஷத்துடன் திருத்தேரோட்டம் நடந்தது. தேர் பவானி நகரில் முக்கிய வீதி வழியாக வலம் வந்து நிலை அடைந்தது.
ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற முருகன் கோவி லான சென்னிமலை முருகன் கோவிலில் தைப் பூச விழா கடந்த 28–-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக சிறப்பு பூஜை களுடன் விழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தினமும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை உடன் சமேதராக அலங்கார வாக னங்களில் காட்சி அளித்து அருள் பாலித்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு வசந்த மண்டபத்தில் திருக் கல்யாணம் நடந்தது. இதை யொட்டி முருகபெரு மானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று அதிகாலை முருகன், வள்ளி, தெய்வா னைக்கு சிறப்பு அபிஷேக மும் காலை 5.40 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. 5.55 மணிக்கு தேர் கொண்டு வரப்பட்டது.
பின்னர் உற்சவ மூர்த்தி கள் தேர் நிலையை மூன்று முறை வலம் வந்து சாமியை காலை 6.10-க்கு 3 தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்க ப்பட்டனர்.
முதல் தேரில் விநயாகப்பெருமானும், பெரிய தேரில் முருப்பெரு மான் அமர்தவள்ளி, சுந்தர வள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்திலும், 3-ம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினர்.
அதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவம் தலைமையில் சிறப்பு ஆராதனை நடை பெற்று சுவாமி தரிசனம் நடந்தது.
இதையடுத்து காலை 6.15-க்கு தேரோட்டம் தொடங்கியது. அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் தோப்பு. வெங்கடா ச்சலம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதை தொடந்து லட்சக்கண க்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் கந்தனுக்கு 'அரோகரா' முருகனுக்கு ''அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
வழி நெடுக திரண்டு இருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவியும், கடலைகாய், நெல் தூவியும் முருகப்பெரு மானை வழிபட்டனர்.
தேரோட்டத்தில் செயல் அலுவலர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ். செல்வம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செங்கோட்டையன், பிரபு, சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேவஸ்தான அலுவலக வளாகத்தில் தைப்பூச இசை விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கபட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பலர் அரோகரா கோஷத்துடன் காவடி சுமந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தேர் காலை 6.40 மணிக்கு தெற்கு ராஜா வீதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. தேர் தெற்கு, மேற்கு ரத வீதிகளில் வலம் வந்து வடக்கு ரத வீதியில் நிறுத்தப்படும், திருத்தேர் நாளை (திங்கட் கிழமை மாலை 5 மணிக்கு நிலை அடைகிறது.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் வரும் 9 -ந் தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணியளவில் நடராஜப்பெரு மானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்த ருளி திருவீதி உலா காட்சி நடைபெறும். இதை காண சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
அந்தியூரில் உள்ள சுப்பிர மணியர் கோவில் தைப்பூசத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
அந்தியூர் தேர்வீதியில் அமைந்துள்ள சுப்பிர மணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா விமரி சையாக நடந்தது. இன்று காலை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
விழாவையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, பால் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்த னர். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு தங்க கவச அலங்கார பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியை பால தண்டாயுதபாணி கிருத்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
- மதுவுக்கு அடிமையானதாலும், நோய் பாதிப்பு காரணமாகவும் பூபதி மனமுடைந்து காணப்பட்டார்.
- இதன் காரணமாக பூபதி சம்பவத்தன்று இரவு சாணிப்பவுடரை கரைத்து குடித்துவிட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது கணவர் ரவி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு ரேகா (25) என்ற மகளும், பூபதி (22) என்ற மகனும் உள்ளனர்.
11-ம் வகுப்பு வரை படித்துள்ள பூபதி செண்ட்ரிங் வேலை செய்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான பூபதிக்கு இதய நோய் பாதிப்பும் இருந்து வந்துள்ளது.
இதனால் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் மதுவுக்கு அடிமையானதாலும், நோய் பாதிப்பு காரணமாகவும் பூபதி மனமுடைந்து காணப்பட்டார். அதன் காரணமாக பூபதி சம்பவத்தன்று இரவு சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து குடித்துவிட்டார்.
இதனால் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- குஜராத்தில் இருந்து யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் இருந்து கிரிப்கோ நிறுவனத்தின் மூலம் 2,200 மெட்ரிக் டன் பாரத் யூரியா உரம் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) கு.ஜெயசந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்ததாவது:
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,347 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,585 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,400 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10,169 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 896 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படு த்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உரச்செலவை குறைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டி.என்.பாளையம் வண்ணார் கோவில் திருப்பம் வளைவில் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் நேருக்கு நேர் மோதி கொண்டது.
- இதில் வாகனங்களில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்த நாசர் (23), ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் டி.என். பாளை த்தில் இருந்து பங்களா புதூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
அதேபோல் பங்க ளாப்புதூர் உப்புபள்ளம் பகுதியை சேர்ந்த சதிஷ்குமார் (22), சத்தியமங்க லம் கெஞ்சனூர் பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் பங்களா ப்புதூரில் இருந்து டி.என்.பாளையத்துக்கு மொபட்டில் வந்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் சத்தியமங்க லம்- அத்தாணி ரோடு டி.என்.பாளையம் வண்ணார் கோவில் திருப்பம் வளைவில் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் வாகனங்களில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து, அவர்கள் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் சிறிய காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து பங்களாப் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். மனுவில் கட்சி என்ற இடத்தில் அ.தி.மு.க. என்றும் சின்னம் என்ற இடத்தில் நிரப்பாமலும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. எனவே ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர் முருகானந்தத்திடம் கேட்ட போது, வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்து கட்சி தலைமையிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை என்றார். எனவே வருகிற 10-ந் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். எனவே அன்றைய தினமே அவர் வாபஸ்பெறலாம் என்று கூறப்படுகிறது.
- கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
- ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனங்களில் செல்கின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் வீதி, வீதியாக, வீடு, வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு தொகுதி தேர்தலுக்காக தேர்தல் செலவினம் தணிக்கை செய்ய பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனங்களில் செல்கின்றனர். இவர்களது இயக்கத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
இது தவிர மாநகராட்சி வளாகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களை கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 180042594980 மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 122 புகார்கள் பெறப்பட்டு அதில் 115 புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நாங்கள் வாக்கு கேட்டு செல்லும்போது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
- ஈரோடு மாவட்ட வளர்ச்சிக்காக ரூ. 320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாங்கள் வாக்கு கேட்டு செல்லும்போது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பொதுமக்களிடம் பெரிய எழுச்சியை காண முடிகிறது. முதலமைச்சர் கடந்த 1½ ஆண்டு காலத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சிக்காக ரூ. 320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு 6 மாதத்திற்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.ஆகி ஒன்றை ஆண்டு காலத்திலேயே இறந்து விட்டார். அவருக்கு பதிலாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கிருஷ்ணம்பாளையம், வைராபாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* மாதாந்திர மின்கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வரும்.
* மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
* ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
* ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக சென்ற இந்த ரதத்திற்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
- இந்த ரதம் பிப்ரவரி 10-ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்த ஆதியோகி ரதம் கிராமங்கள்தோறும் பயணித்தது. இதன்மூலம், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளைப் பெற்றனர்.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் 'ஆதியோகி ரத யாத்திரை' ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய 5 ரதங்கள் கடந்த மாதம் கோவையில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் 4 திசைகளில் பயணத்தை தொடங்கின.
அதில் ஒரு ரதம் பொங்கல் தினத்தன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தது. பாரியூர், சூரம்பட்டி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், ஆப்பகூடல், கூகலூர் என பல்வேறு இடங்களுக்கு பயணித்து பிப்ரவரி 1-ம் தேதி கோபிக்கு வருகை தந்தது. பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக சென்ற இந்த ரதத்திற்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
குறிப்பாக, வெளியூர்களுக்கு அதிகம் பயணம் செய்யாத கிராமப்புற மக்கள், முதியவர்கள் என பல தரப்பட்ட மக்கள் தங்கள் வீட்டை தேடி ஆதியோகி வந்ததை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கோபியில் இருந்து கொடிவேரி, அரசூர், பெருந்துறை, பங்களா புதூர் போன்ற இடங்களுக்கு செல்லும் இந்த ரதம் பிப்ரவரி 10-ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும். பின்னர், அங்கிருந்து கோவைக்கு பயணிக்கும்.
இந்த யாத்திரையில் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், கோபியில் உள்ள லிங்கபைரவியிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
உலகில் தோன்றிய முதல் யோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு (அகத்தியர் உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். இது ஆன்மீகத்தில் மாபெரும் அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.
இதற்காக, ஆதியோகிக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் சத்குரு அவர்களால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இத்திருமேனியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
- தனுஷ் தனது மோட்டார் சைக்கிளில் பூதப்பாடியில் இருந்து கருங்கரடு சென்று கொண்டிருந்தார்.
- அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்து சென்று லாரிக்குள் விழுந்தார்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி கருங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன்.
இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களது மகன் தனுஷ் (26). டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் தனது மோட்டார் சைக்கிளில் பூதப்பாடியில் இருந்து கருங்கரடு சென்று கொண்டிருந்தார்.
அப்போது குருவரெட்டியூர் அக்னி மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது வளைவில் டிப்பர்லாரி ஒன்று வந்துள்ளது.
அதனை பார்த்த தனுஷ் பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்து சென்று லாரிக்குள் விழுந்தார்.
அப்போது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






