என் மலர்tooltip icon

    ஈரோடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
    • ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமியும், எம்.பி.ஏ. பட்டதாரியான செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளராக அறிவித்தனர்.

    இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அ.தி.மு.க. பொதுக்குழு மூலமாகவே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அணியை பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் கூறியது.

    தற்போது, அ.தி.மு.க.வில் 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில், 2,662 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். மீதமுள்ள 148 பேர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ் பெற்றுள்ளார்.

    இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ் பெற்றுள்ளார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளோம்.

    எங்கள் நோக்கம் இரட்டை இலை சின்னம் முடங்க கூடாது என்பதுதான். ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம் என்றும் அவர் கூறினார்.

    • ஒரு பெண் உள்பட 9 பேர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன், ஈரோடு தெற்கு, கருங்கல்பாளையம், கடத்தூர், சத்தியமங்கலம்,

    கவுந்தப்பாடி, சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் ஒரு பெண் உள்பட 9 பேர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 67 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.

    சென்னிமலை

    சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரிவலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (68). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி யில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஈங்கூர் ரோட்டில் வந்த போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மணப்பாறையை சேர்ந்த கிருஷ்ணனை பிடித்து விசாரித்து வரு கிறனர்.

    • சூர்யா என்கிற ஆசிக் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
    • மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    ஈரோடு

    ஈரோடு தெற்கு போலீசார் சூரம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூரம்பட்டி நேதாஜி வீதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற ஆசிக் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 125 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல கொல்லம்பாளையம் ரவுண்டான அருகில் ஈரோடு தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக மோட்டார் சைக்களில் வந்த நபரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், நஞ்சப்பகவுண்டர் வலசு பகுதியை சேர்ந்த சுதர்சன் (26) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ரூ.2,200 மதிப்பிலான 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • இவரது வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.
    • உடனடியாக குருசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    பெருந்துறை

    பெருந்துறையை அடுத்துள்ள ஈரோடு ரோடு, வண்ணாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் குருசாமி வயது (67).

    இவர் அதே பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். மாட்டு தீவனமாக சோளத்தட்டு போரை வீட்டின் அருகில் அமைத்திருந்தார்.

    இந்நிலையில் அணைக்காத தீ காரணமாக இந்த சோளத்தட்டு போர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    உடனடியாக குருசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    நிலைய அலுவலர் (பொறுப்பு) நாகேஸ்வரன் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    • கோவை, தர்மபுரி சேலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் கேரளா மாநிலத்தி லிருந்தும் வந்து மாடுகளை வாங்கி செல்லும் வியாபாரிகள்.
    • அந்தியூர் வாரச்சந்தையில் மாடுகள் மற்றும் இன்று நடை பெறும் வணிக பொருட்களின் வியாபாரமும் மந்த நிலையில் காணப்பட்டது.

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்கு ஈரோடு, அந்தியூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தல் நடைபெறுவதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஈரோடு பகுதியில் யாராது பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வியாபாரிகள் தாங்கள் விலை பொருட்களை வாங்கு வதற்கு கொண்டு வரும் பணம் தேர்தல் அலுவலர்களால் பிடிபட்டு விட்டால் சிரமம் ஏற்படும் என்று எண்ணி தயக்கம் காட்டி வருகிறார்கள்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவை, தர்மபுரி சேலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் கேரளா மாநிலத்தி லிருந்தும் வந்து மாடுகளை வாங்கி செல்லும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளும் வருவதற்கு அச்சப்படுவதால் அந்தியூர் சந்தை வியாபாரிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதில் வெளிமாவட்ட த்தில் இருந்து வரும் வியாபாரிகளின் கூட்டம் குறை வாகவே காணப்பட்டதால் அந்தியூர் வாரச்சந்தையில் மாடுகள் மற்றும் இன்று நடை பெறும் வணிக பொருட்களின் வியாபாரமும் மந்த நிலையில் காணப்பட்டது.

    மேலும் இன்று நடை பெறும் வாரச்சந்தையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுக்காடு, காந்திநகர், எண்ணமங்கலம், செல்லம்பாளையம், அண்ணா மடுவு, காட்டூர், கந்தம்பாளையம், பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த னர்.

    அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் மட்டும் சந்தைக்கு வந்து அவர்கள் வீட்டுக்குத் தேவையான மற்ற வணிகப் பொருட்களையும் வாங்கிச் சென்றார்கள். இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்த அளவிற்கு அந்தியூர் வார சந்தையில் வியாபாரிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    • ஈரோடு இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 238 வாக்குச்சாவடி மையங்கள் 52 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
    • முதல்கட்ட பயிற்சியில் முதன்மை வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 1,206 பேர் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 238 வாக்குச்சாவடி மையங்கள் 52 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளார்கள். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஓட்டுப்பதிவு அன்று செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இன்று முதல்கட்ட பயிற்சி ரங்கம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.

    இந்த பயிற்சியில் முதன்மை வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 1,206 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எப்படி கையாள்வது, பழுது ஏற்பட்டால் அவற்றை எப்படி சரி செய்வது மற்றும் வாக்காளர் பட்டியல் போன்றவற்றை எவ்வாறு கையாளுவது என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதேபோன்று அடுத்த வாரம் 2-வது கட்ட பயிற்சியும், வரும் 26-ந் தேதி 3-ம் கட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இறுதி பயிற்சி நாளன்று ஒவ்வொரு பணியாளர்களுக்கும் எந்தந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆணை வழங்கப்படும்.

    • மது அருந்தும் பழக்கமுடைய வினோத்குமாருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • அதனால் தான் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாதத்தவணை செலுத்த தனது தந்தை கோவிந்தராஜிடம் பணம் கேட்டுள்ளார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் வேட்டைக்காரன் கோயில் மேற்கு கரடு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (23).

    இவர் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள ஒரு பீட்சா, பர்கர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    மது அருந்தும் பழக்கமுடைய வினோத்குமாருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    இதற்காக அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக வினோத்குமார் வேலைக்கு செல்லவில்லை. அதனால் தான் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாதத்தவணை செலுத்த தனது தந்தை கோவிந்தராஜிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் ஒரு வாரத்தில் தருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் சாப்பிட்டு விட்டு தூங்க செல்வதாக தனது தாயாரிடம் கூறி சென்ற வினோத்குமார் படுக்கை அறைக்குள் சென்று சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.

    சற்று நேரம் கழித்து அதை பார்த்த அவரது தாயார் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வினோத்குமாரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே வினோத்குமார் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து வினோத்குமாரின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இவர்க ளுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
    • நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    அம்மாபேட்டை

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அடுத்த பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (35).

    இவர் சேலம் ரெயில்வே துறையில் ஆப் ரேட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (32).

    இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தை பிறந்தது முதலே கிருஷ்ணவேணி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் 2 குழந்தை களையும் வைத்து பராமரிக்க முடியவில்லை.

    நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    இதையடுத்து அவர் தனது மனைவியை குருவரெட்டியூர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணியின் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணியின் சகோதரர் செல்வராஜிக்கு போன் செய்து கிருஷ்ணவேணி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொள்கிறார். எனவே அவரை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து விடு முறை கிடைத்தவுடன் வந்து அழைத்து செல்வதாக செல்வராஜ் கூறினார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணி வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி கொண்டார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு இலவச பயணம், புதுமை பெண் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • இலவச பேருந்து பயண திட்டம் ஏழை பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு கேட்டு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு இலவச பயணம், புதுமை பெண் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இலவச பேருந்து திட்டத்தில் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர்.

    இலவச பேருந்து பயண திட்டம் ஏழை பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம் 800 முதல் ஆயிரம் ரூபாய் வரை குடும்பத்திற்கு மிச்சப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஸ்சை வழிமறித்து செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.
    • மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது41). இவர் ஈரோட்டில் இருந்து குமாரபாளையத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்சில், கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை அந்த பஸ் பள்ளிப்பாளையம் வந்ததும், ஒரு மாணவி குமாரபாளையம் கல்லூரிக்கு செல்ல ஏறினார்.

    பஸ் புறப்பட்டதும் அவரது காதை பிடித்து செல்லத்துரை திருகியுள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான மாணவி தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த உறவினர்கள், ஒட்டமெத்தை பகுதியில் பஸ்சை வழிமறித்து, செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது, மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது.
    • தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு மகத்தான வெற்றியாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமையும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த 1½ ஆண்டு கால சாதனையாக கைச்சின்னம் மாபெரும் வெற்றி பெறும்.

    மேற்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறான கருத்து. முதலமைச்சரின் கோட்டை. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    ஈரோடு அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறு. இது தி.மு.க.வின் எக்கு கோட்டை. பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    அவங்க கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரிடம் கேளுங்கள். பா.ஜ.க. ஒரு மிஸ்டு கால் பார்ட்டி. பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. இல்லாத ஒரு நபரை இருப்பதை போல் காட்டி அவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர்.

    மின்சார கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை பொருத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

    விசைத்தறி இந்த பகுதியில் மிக அதிகமாக இருக்கிறது. அ.தி.மு.க. கடந்த 10 ஆண்டு காலத்தில் மின் கட்டணம் ஏற்றாததை போல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். 2010-ல் இருந்த மின்கட்டனத்தை விட கூடுதலாக அ.தி.மு.க. ஆட்சியில் 117 விழுக்காடு உயர்த்தப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. விசைத்தறிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் 120 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் விரைவில் 1000 யூனிட் ஆக உயர்த்தப்படும்.

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு மகத்தான வெற்றியாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×