என் மலர்
ஈரோடு
- இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.
- வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனு தாக்கல் கிடையாது.
இந்தநிலையில் 6-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக பவானி அருகே உள்ள ஓடத்துறையை சேர்ந்த சீதாலட்சுமி (47), அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கட்சி சார்பில் ஈரோடு 46 புதூரை சேர்ந்த சுந்தராஜன் (32), கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி சார்பில் கே.பி.எம்.ராஜா (45), அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்த பிரேம்நாத் (41), இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்த மணி (65) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.மேலும் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள் (52) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். இதேபோல் சுயேச்சையாக 7 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள்.
எனவே நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள். இதுவரை மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள்.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.
இந்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிவித்த தென்னரசு மனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (புதன்கிழமை) செய்யப்படுகிறது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
- முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.
- வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, ஓ.பி.எஸ் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதன் காரணமாக கடந்த 3-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் பிரச்சாரத்தையும் தொடங்காமல் இருந்து வந்தனர். எனினும் முக்கிய அமைப்பினர், விசைத்தறியாளர்கள், வணிகர் சங்க பேரமைப்பினரை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.வி. ராமலிங்கம், கருப்பணன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியது.
பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை அவைத்தலைவர் தலைமை தேர்தல் கமிஷனில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் 2501 பேர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர்.
அந்த கடிதத்தை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்று டெல்லி தேர்தல் கமிஷனில் வழங்கினார். இந்நிலையில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினர். இதனால் நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.
இதையடுத்து இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார்.
முதலில் அந்த பகுதியில் உள்ள முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு அ.தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கினர். வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். மற்ற அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
- மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ரூ.64,500 இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 11.10 மணியளவில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி யுவராஜ் தலைமையில் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு நோக்கி ஒரு கார் வந்து கொண்டு இருந்தது.
அந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.2 லட்சம் ரொக்க பணம் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து காரில் வந்த நபரிடம் விசாரித்த போது அவர் ஈரோடு மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த நவநீதன் (35) என்பதும் ஒப்பந்ததாரர் என்பதும் தெரிய வந்தது.
அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் இன்று காலை நிலை கண்காணிப்பு குழுவினர் அக்ரஹாரம் ரோடு, ரவி மஹால் அருகே சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ரூ.64,500 இருந்தது தெரியவந்தது. இது குறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் விஜய் ரித்திக் (30) என்பதும் சிவில் என்ஜினீயர் என்பதும் தெரியவந்தது.
அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
மொத்தம் இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரால் 19 லட்சத்து 61 ஆயிரத்து 840 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.
- நாளை மறுதினம் (9-ந்தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டு உள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும்.
திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். நாளை மறுதினம் (9-ந்தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது.
அ.தி.மு.க வெற்றி யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதுவரை 59 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும்.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனு தாக்கல் கிடையாது.
இந்தநிலையில் 6-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக பவானி அருகே உள்ள ஓடத்துறையை சேர்ந்த சீதாலட்சுமி (47), அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கட்சி சார்பில் ஈரோடு 46 புதூரை சேர்ந்த சுந்தராஜன் (32), கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி சார்பில் கே.பி.எம்.ராஜா (45), அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்த பிரேம்நாத் (41), இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்த மணி (65) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.மேலும் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள் (52) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.இதேபோல் சுயேச்சையாக 7 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள்.
எனவே நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள். இதுவரை மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள்.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனுக்கள் நாளை (புதன்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
- கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி ரூபாய் நோட்டு வடிவிலான விழிப்புணர்வு பிரசுரங்களை பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ், அ.தி.மு.க, அ.ம.மு.க, தே.மு.தி.க உள்பட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நாம் தமிழர் கட்சியினர் அக்ரஹாரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது நூதனமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதாவது ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி ரூபாய் நோட்டு வடிவிலான விழிப்புணர்வு பிரசுரங்களை பிரச்சாரத்தின் போது அக்கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
அந்த ரூபாய் நோட்டு பிரசுரத்தில் மகாத்மா காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், சீமான் படங்கள் இடம் பெற்றுள்ளன. லஞ்சம் தவிர், லஞ்சம் தராமல் நெஞ்சம் நிமிர் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
- ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்க சாமி (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ரங்கசாமி நேற்று இரவு வேலைக்கு சென்றார். இதையடுத்து அவர் வேலை முடிந்து இன்று காலை 5.45 மணிக்கு வீட்டுக்கு மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சத்திய மங்கலத்தில் இருந்து பவானிசாகருக்கு ஒரு அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது.
தொடர்ந்து அவர் சத்திய மங்கலம் பவானிசாகர் ரோட்டில் வந்தார். அப்போது அந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார்.
இதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியி லேயே ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் மீண்டும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது
- வீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.
பவானி
பவானி அருகே உள்ள காடையாம்பட்டி முருகன் கோவில் வீதியில் வசிப்பவர் ஆனந்த் (21). கட்டிட தொழிலாளி.
மது பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆனந்தின் தாய் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டின் கதவை சாத்திக்கொண்டு வெகு நேரம் ஆகியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அவர்கள் வந்து பார்த்த போது ஆனந்த் இறந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பவானி சப்இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து கிடந்த ஆனந்த் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மற்ற அரசியல் கட்சியினர் மக்கள் யாரும் வீடுகளில் இல்லாததால் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு தொகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிமனையில் தேர்தல் பொறுப்பாளர்கள், பணிக்குழுவினர், உள்ளுர் மற்றும் வெளியூர் நிர்வாகிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கட்சியின் கொடி, சின்னத்துடன் சென்று வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினராகவே உள்ளனர்.
இதற்கிைடயே ஒரு அரசியல் கட்சி சார்பில் வீடுகளின் முன்பு தங்களது கட்சி சின்னம் கோலம் போடப்பட்டு இருந்தால் 500 வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதே போல் தினமும் மாலையில் 6 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் பணிமனையில் பெண்கள் அமர்ந்து இருந்தால் அவர்களுக்கு 500 ரூபாயும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை அமர்ந்து இருக்கும் அண்களுக்கு ரூ.500 மற்றும் மதுவும் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எந்த வேலையும் செய்யாமல் தேர்தல் பணிமனையிலேயே அமர்ந்து இருந்தாலே பணம் வழங்கப்படுவதால் மாலை நேரங்களில் பொதுமக்கள் தேர்தல் பணிமனைகளில் குவிந்து வருகிறார்கள். அவர்களுக்கு டீ மற்றும் சுடச்சுட வடை, போண்டா ஆகியவையும் வழங்கப்படுகிறது.
மாலை நேரங்களில் எந்த வேலையும் செய்யாமல் தேர்தல் பணிமனையில் அமர்ந்தாலே பணம் என்பதால் மாலை நேரத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தேர்தல் பணிமனையிலேயே இருக்கிறார்கள். இதனால் மற்ற அரசியல் கட்சியினர் மக்கள் யாரும் வீடுகளில் இல்லாததால் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசியல் கட்சியினர் சிலர் கூறும்போது, இந்த தொகுதியில் பெரும்பாலானோர் தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் காலையில் வேலைக்கு சென்று விடுகிறார்கள். எனவே மாலை நேரத்தில் பிரசாரம் செய்யலாம் என்று இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தேர்தல்பணிமனையில் அமர்ந்து உள்ளனர். அங்கு சென்று அவர்களிடம் வாக்கு சேகரிக்க முடியாது. எனவே மற்ற வேட்பாளர்கள் பிரசாரமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முகம் கழுவிவிட்டு வருவதற்காக சென்றபோது மாணிக்கம் திடீரென மயங்கி விழுந்தார்.
- மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு
ஈரோடு வீரப்பன் சத்திரம் பாரதி நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (86). இவர் தனது மகன் கோபாலகிருஷ்ணன் (46) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் தூங்கி எழுந்து முகம் கழுவிவிட்டு வருவதற்காக சென்றபோது மாணிக்கம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பிரேம்குமார் அவரது மாமாவுக்கு சொந்தமான வேனை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தார்.
- ஒரு கார் பிரேம்குமார் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
மொடக்குறிச்சி
கோவை பெரிய பஜார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பிரேம் குமார் (32). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவரது உறவினர்கள் மொடக்குறிச்சி அருகே முத்து கவுண்டன் பாளையம் பகுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர்.
அவர்களை அழைத்து வருவதற்காக பிரேம்குமார் அவரது மாமாவுக்கு சொந்தமான வேனை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தார்.
தொடர்ந்து அவர் முத்து கவுண்டம்பாளையம் ரிங்ரோடு பகுதியில் வேனில் வந்தார்.
அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது அந்த வழியாக பின்னால் வந்த ஒரு கார் பிரேம்குமார் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பிரேம்குமார் படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரேம்குமாரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் காரில் வந்த கார் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் ராஜேந்திரனின் சகோதரி வளர்மதி ஆகிய 2 பேரும் படுகாயம் அடை ந்தனர்.
அவர்கள் ஈரோடு மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மொட க்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 500 இருந்தது.
- பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
திருமகன் ஈவெரா மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அறிவிப்பு வெளியான மறு நிமிடமே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. ரூ.50,000-க்கு மேல் ரொக்க பணம், 10 ஆயிரத்து ரூபாய்க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு மரப்பாலம் அருகே கள்ளுக்கடை மேடு பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ருத்ரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 500 இருந்தது. அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லை.
இதுகுறித்து காரில் வந்த நபரிடம விசாரித்த போது அவர் ஈரோடு கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தேவகுமார் (51) என்பதும், கள்ளுக்கடை மேடு பகுதியில் சொந்தமாக எலக்ட்ரிக் கடை வைத்திருப்பதும் தெரிய வந்தது.
அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதேபோல் ஈரோடு ஜி.எச். ரவுண்டானா பகுதியில் பறக்கும் படை அதிகாரி மெய்யப்பன் தலைமையில் குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் சோதனை செய்தபோது ரூ.1 லட்சத்து 40ஆயிரத்து 500 இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அப்புக்குட்டி (40) என்பதும் மருந்து விற்பனை பிரதிநிதி என்பதும் தெரிய வந்தது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். இன்று ஒரே நாளில் ரூ.2 லட்சத்து 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






