முதியவர் மயங்கி விழுந்து சாவு

முகம் கழுவிவிட்டு வருவதற்காக சென்றபோது மாணிக்கம் திடீரென மயங்கி விழுந்தார்.மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதியவர் மயங்கி விழுந்து சாவு
Published on

ஈரோடு

ஈரோடு வீரப்பன் சத்திரம் பாரதி நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (86). இவர் தனது மகன் கோபாலகிருஷ்ணன் (46) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் தூங்கி எழுந்து முகம் கழுவிவிட்டு வருவதற்காக சென்றபோது மாணிக்கம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com