என் மலர்
ஈரோடு
- ஈரோடு கிழக்கு தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.
- தொழிலாளர்களை கவர அரசியல் கட்சியினர் தினமும் ஒவ்வொரு வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல்வேறு இடங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்து உள்ளனர்.
தினமும் காலை 6மணி முதல் இரவு 10 மணி வரை அவர்கள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த தேர்தலில் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்த மாவட்டத்தில் இருந்து கட்சியினரை வரவழைத்து உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். எப்படியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் அதிக ஓட்டுகள் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர்.
இதனால் குறிப்பிட்ட பகுதிக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தினமும் அந்த பகுதியை சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இதனால் தொழிலாளர்களை கவர அரசியல் கட்சியினர் தினமும் ஒவ்வொரு வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்துக்கு வரும் அனைத்து கட்சியினரையும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். குறிப்பாக சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை ஓட்டு கேட்டு வரும் பிரமுகர்களுக்கு கும்பமரியாதை, மலர் தூவ, ஆரத்தி எடுத்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் இதற்காக பெண்கள் தயாராக இருக்கிறார்கள். மேலும் எந்த அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்ய வருகிறார்களோ அவர்களை வரவேற்க அந்த கட்சிகளின் சின்னத்தையும் வரைந்து அரசியல் கட்சியினரையே பிரமிக்க வைக்கின்றனர்.
எந்த கட்சியினர் வந்தாலும் பொதுமக்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்று வருகிறார்கள். மொத்தத்தில் இடைத்தேர்தல் பொதுமக்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்து இருக்கிறது.
ஒரு சிலர் பிரசாரத்துக்கு கூட்டத்தை காட்ட வித்யாசமான முறையை கையாண்டு வருகின்றனர். பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு முதலில் புதிய 20 ரூபாய் டோக்கனாக கொடுக்கப்படுகிறது. பின்னர் அவர்களிடம் கட்சி கொடி, சின்னம் கொடுக்கப்பட்டு பிரசாரத்துக்கு அழைத்து செல்கிறார்கள்.
சுமார் 30 நிமிட நேரத்தில் பிரசாரம் முடிந்ததும் மீண்டும் அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். தொடர்ந்து பிரசாரத்துக்கு வந்த பொதுமக்களின் வீடுகளுக்கு செல்லும் வெளியூர் கட்சியினர், உள்ளுர் பிரமுகர்களுடன் டோக்கனாக கொடுத்த புதிய 20 ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்டு ரூ.300 கொடுத்து வருகிறார்கள்.
அரசியல் கட்சியினரின் வருகையால் டீக்கடைகளில் டீ, போண்டா, வடை விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. இதேபோல் அசைவ ஓட்டல்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தோட்டத்துக்குள் கிராமிய சமையல்கள் செய்யப்படுகிறது. அங்கும் அரசியல் கட்சியினர் கூட்டம் அலைமோதுகிறது.
ஈரோடு மாநகரில் எங்கு பார்த்தாலும் சொகுசு கார்களாவே தென்படுகிறது. இதனால் மாநகர் பகுதியில் எப்போது பார்த்தாலும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படுகிறது.
- அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 132 ஒப்பந்த பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒப்பந்தம் பெறும்போது அரசுக்கு உறுதியளித்த படியும், ஈரோடு கலெக்டர் நிர்ண யித்து, அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707 வீதம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் ஒப்பந்த நிறுவனமோ நாளொன்று க்கு ரூ.310 வீதம் மட்டுமே ஊதியம் வழங்கி வந்தது. எனவே கலெக்டர் நிர்ண யித்த குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707 வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் போராடி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை மீண்டும் பணியில் அனுமதிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஊதி யத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த ஜனவரி 21-ந் தேதி முதல் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 25-ந் தேதி ஒப்பந்த நிறுவனம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கள், வருவாய்க் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாள ர்களுக்கு கடந்த ஜனவரி 30-ந் தேதி முதல் மீண்டும் பணி வழங்குவதாக ஒப்பந்த நிறுவனம் உறுதியளித்தது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால் உறுதியளித்தபடி ஒப்பந்த நிறுவனம் தொழி லாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வில்லை. ஒப்பந்த நிறுவனத்தின் இந்த நியாயமற்ற தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், வேலை மறுக்கப்பட்ட தொழிலா ளர்கள் 6 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
தொழிலாளர் நலச் சட்டங்களின் படியான பலன்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி யும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மருத்துவத்துறை பணியாள ர்கள் சங்கத்தினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
- ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 2ஆயிரம் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
- இந்த பருத்தி மூட்டைகளின் ஏலம் இன்று நடந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடை பெறும்.
அந்த வகையில் தற்போது அந்தியூர் தவிட்டுப்பாளை யம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்தி நகர், சங்கரா பாளை யம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம்பாளையம், கள்ளி மடை, குட்டை ஆகிய பகுதி விவசாயிகள் பயிரிட்ட பருத்தி மூட்டைகளை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வருவார்கள்.
அந்த பருத்தி மூட்டைகள் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஒழுங்கு முறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டு அதன் ஏலம் செவ்வாய்கிழமை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.
இந்த ஏலத்தில் புளியம் பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவினாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்படும்.
கடந்த சில மாதங்களாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 2,500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த வாரம் 2 ஆயிரம் மூட்டைகள் பருத்தி மட்டும் வரத்து வந்தது. இந்த பருத்தி மூட்டைகளின் ஏலம் இன்று நடந்தது.
- இதையடுத்து குப்புலட்சுமி நகையை எடுத்து கொண்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.
- இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
கோபி
கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் குப்புலட்சுமி (70). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு நகைகள் விற்பனை செய்ய வந்தார். தொடர்ந்து அவர் 1¼ பவுன் நகைைய விற்பனை செய்ய கொடுத்தார்.
அப்போது அந்த நகை தரம் குறைவாக இருப்பதாக கூறி கடைக்காரர் நகையை திருப்பி கொடுத்து விட்டார்.
இதையடுத்து குப்புலட்சுமி நகையை எடுத்து கொண்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.
அப்போது தான் கொண்டு வந்த பையை பார்த்த போது அதில் வைத்து இருந்த நகை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
நகை திருடப்பட்டது தெரிய வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் தேடி பார்த்தும், விசாரித்தும் நகை கிடைக்கவில்லை.
இது குறித்து குப்புலட்சுமி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- லாரன்ஸ் பிரேம்குமார் மீண்டும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார்.
- இன்று காலை அரக்கன்கோட்டை வாய்க்காலில் லாரன்ஸ் பிரேம்குமார் பிணமாக மீட்கப்பட்டார்.
டி.என்.பாளையம்:
கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள காந்தி நகர் மேட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லார ன்ஸ் பிரேம்குமார் (40). இவர் கோவையில் கார் பெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திரு மணமாகி ரீனா என்ற மனைவியும் மற்றும் 2 குழ ந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சத்திய மங்கலம் வடக்கு பேட்டை யில் உள்ள உறவி னர் வீட்டுக்கு லாரன்ஸ் பிரேம்குமார் குடும்பத்துடன் வந்தார். தொடர்ந்து லாரன்ஸ் பிரேம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் கொடிவேரி அணைக்கு குளிக்க சென்றனர்.
இதை தொடர்ந்து அவர்கள் கொடிவேரி அணைப்பகுதியில் குளித்து விட்டு கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்கால் பகுதி யில் மீன் சாப்பிட்டனர்.
தொடர்ந்து லாரன்ஸ் பிரேம்குமார் மீண்டும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதையடுத்து நீண்ட நேரமாகியும் லாரன்ஸ் பிரேம்குமார் வராததால் அவரது குடும்பத்தினர் கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்காலில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் மற்றும் சத்திய மங்கலம் தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட லாரன்ஸ் பிரேம்குமாரை நேற்று தேடினர்.
ஆனால் அவர் கிடைக்கவில்லை. இரவு நீண்ட நேரம் ஆனதால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் லாரன்ஸ் பிரேம்குமாரை, கொடிவேரி மீனவர்கள் உதவியுடன் சத்தியமங்கலம் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்காலில் தேடினர்.
அப்போது இன்று காலை அரக்கன்கோட்டை வாய்க்காலில் லாரன்ஸ் பிரேம்குமார் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரேநகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம்,
தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம்,
தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்ட செல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி,
மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு,
மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- மூதாட்டி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
- இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் ரோடு பகுதியில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை அந்த மூதாட்டி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது கவுரி மீனா துப்பட்டாவால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்கியுள்ளார்.
- தகவல் அறிந்த அவரது தாய் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள கம்பிளியம்பட்டி, காசிலிங்க கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி கவுரி மீனா (வயது 27). இவர்களுக்கு தரணிகா (3) மற்றும் பிறந்து 45 நாட்களே ஆன தக்ஷிதா என்று பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் கவுரி மீனா தனக்கு குழந்தை பிறந்ததால் தனது தாய் வீடான சக்கரைகவுண்டன் பாளையம் பகுதியில் இருந்துவிட்டு கடந்த வாரம் கணவர் வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்கியுள்ளார்.
தகவல் அறிந்த அவரது தாய் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த நிலையில் இது தொடர்பாக பெருந்துறை டி.எஸ்பி. (பொறுப்பு) அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
- சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.
கோபி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியம் பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர்.
- திருத்தேரோட்டமும் அதேபோல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.
- கோவில் பணியாளர்களுக்கு போலீஸ் நிலையத்தில் இனிப்பு, காரம், டீ கொடுத்து மாரியாதை செய்வார்கள்.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தான் நடக்கும். திருத்தேரோட்டமும் அதேபோல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.
சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலைய த்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.
இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். எந்த வி.ஐ.பி. கலந்து கொண்டா லும் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ் பெக்டருக்கு தான் இங்கு மரியாதை.
மேலும், ஊர்வலமாக போலீஸ் நிலையம் செல்லும் தேரோட்டி, கோவில் பணியாளர்களுக்கு போலீஸ் நிலையத்தில் இனிப்பு, காரம், டீ கொடுத்து மாரியாதை செய்வார்கள்.
இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருட ங்களுக்கு மேல் இந்த பாரம்பரிய மரியாதை தொடர்வதாக பெரியவ ர்கள் கூறு கிறார்கள். இந்த மரியாதை மாறாமல் இந்த ஆண்டும் நடைபெற்றது.
- பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.
- சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது.
சென்னிமலை
ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழம் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தைப்பூச விழா தான் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் சுமந்து வந்து முருகனை வணங்கி செல்வர்.
பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.
இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டம் கடந்த 5-ந் தேதி காலை தொடங்கி சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது. இந்த நிலையில் இன்று இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது.
நாளை இரவு தெப்போற்சவம் பூதவாகனக்காட்சி நடக்கிறது. நாளை மறுநாள் மகாதரிசனம் அன்று காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது.
அதை தொடர்ந்து இரவு 7.40 மணிக்கு நடராஜ பெருமானும். சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி இரவு முழுவதும் நடக்கும்.
இதை காண சென்னிமலை நகரில் லட்சக்க னக்காண பக்தர்கள் கூடுவர். தொடர்ந்து 10-ந் தேதி அதிகாலை 5 மணி வரை சுவாமி திருவீதி நடக்கும். இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாளவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிரு ந்தனர்.
- அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 630 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் நேற்றும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாளவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிரு ந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 630 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து காரில் இருந்தவரிடம் விசாரித்த போது அவர் தாளவாடி அடுத்த திப்புசர்க்கிள் பகுதியை சேர்ந்த சமியுல்லா (37) என்பது தெரிய வந்தது.
ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் வாங்கி அதனை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் அதிக விலைக்கு விற்க கொண்டு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சமியுல்லாவை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 630 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.






