search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Man who"

    • மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாளவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிரு ந்தனர்.
    • அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 630 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    ஈரோடு

    ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதேபோல் நேற்றும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாளவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிரு ந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 630 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து காரில் இருந்தவரிடம் விசாரித்த போது அவர் தாளவாடி அடுத்த திப்புசர்க்கிள் பகுதியை சேர்ந்த சமியுல்லா (37) என்பது தெரிய வந்தது.

    ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் வாங்கி அதனை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் அதிக விலைக்கு விற்க கொண்டு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சமியுல்லாவை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 630 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 

    ×