search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chariot stage"

    • பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.
    • சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது.

    சென்னிமலை

    ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழம் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தைப்பூச விழா தான் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

    15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் சுமந்து வந்து முருகனை வணங்கி செல்வர்.

    பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.

    இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேரோட்டம் கடந்த 5-ந் தேதி காலை தொடங்கி சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது. இந்த நிலையில் இன்று இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது.

    நாளை இரவு தெப்போற்சவம் பூதவாகனக்காட்சி நடக்கிறது. நாளை மறுநாள் மகாதரிசனம் அன்று காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது.

    அதை தொடர்ந்து இரவு 7.40 மணிக்கு நடராஜ பெருமானும். சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி இரவு முழுவதும் நடக்கும்.

    இதை காண சென்னிமலை நகரில் லட்சக்க னக்காண பக்தர்கள் கூடுவர். தொடர்ந்து 10-ந் தேதி அதிகாலை 5 மணி வரை சுவாமி திருவீதி நடக்கும். இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×