என் மலர்
நீங்கள் தேடியது "அந்தியூர் வார சந்தை Erode News"
- கோவை, தர்மபுரி சேலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் கேரளா மாநிலத்தி லிருந்தும் வந்து மாடுகளை வாங்கி செல்லும் வியாபாரிகள்.
- அந்தியூர் வாரச்சந்தையில் மாடுகள் மற்றும் இன்று நடை பெறும் வணிக பொருட்களின் வியாபாரமும் மந்த நிலையில் காணப்பட்டது.
அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு ஈரோடு, அந்தியூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தல் நடைபெறுவதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஈரோடு பகுதியில் யாராது பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வியாபாரிகள் தாங்கள் விலை பொருட்களை வாங்கு வதற்கு கொண்டு வரும் பணம் தேர்தல் அலுவலர்களால் பிடிபட்டு விட்டால் சிரமம் ஏற்படும் என்று எண்ணி தயக்கம் காட்டி வருகிறார்கள்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவை, தர்மபுரி சேலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் கேரளா மாநிலத்தி லிருந்தும் வந்து மாடுகளை வாங்கி செல்லும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளும் வருவதற்கு அச்சப்படுவதால் அந்தியூர் சந்தை வியாபாரிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதில் வெளிமாவட்ட த்தில் இருந்து வரும் வியாபாரிகளின் கூட்டம் குறை வாகவே காணப்பட்டதால் அந்தியூர் வாரச்சந்தையில் மாடுகள் மற்றும் இன்று நடை பெறும் வணிக பொருட்களின் வியாபாரமும் மந்த நிலையில் காணப்பட்டது.
மேலும் இன்று நடை பெறும் வாரச்சந்தையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுக்காடு, காந்திநகர், எண்ணமங்கலம், செல்லம்பாளையம், அண்ணா மடுவு, காட்டூர், கந்தம்பாளையம், பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த னர்.
அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் மட்டும் சந்தைக்கு வந்து அவர்கள் வீட்டுக்குத் தேவையான மற்ற வணிகப் பொருட்களையும் வாங்கிச் சென்றார்கள். இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்த அளவிற்கு அந்தியூர் வார சந்தையில் வியாபாரிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.






