சட்டவிரோத மது விற்ற பெண் உள்பட 9 பேர் கைது

ஒரு பெண் உள்பட 9 பேர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
சட்டவிரோத மது விற்ற பெண் உள்பட 9 பேர் கைது
Published on

ஈரோடு

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு டவுன், ஈரோடு தெற்கு, கருங்கல்பாளையம், கடத்தூர், சத்தியமங்கலம்,

கவுந்தப்பாடி, சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

அதில் ஒரு பெண் உள்பட 9 பேர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 67 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com