search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மூலம் 2,200 மெட்ரிக் டன் யூரியா உரம் ஈரோடு வந்தடைந்தது
    X

    ரெயில் மூலம் 2,200 மெட்ரிக் டன் யூரியா உரம் ஈரோடு வந்தடைந்தது

    • ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • குஜராத்தில் இருந்து யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குஜராத்தில் இருந்து கிரிப்கோ நிறுவனத்தின் மூலம் 2,200 மெட்ரிக் டன் பாரத் யூரியா உரம் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) கு.ஜெயசந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,347 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,585 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,400 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10,169 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 896 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படு த்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உரச்செலவை குறைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×