என் மலர்
நீங்கள் தேடியது "Adiyogi Rath Yatra"
- பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக சென்ற இந்த ரதத்திற்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
- இந்த ரதம் பிப்ரவரி 10-ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்த ஆதியோகி ரதம் கிராமங்கள்தோறும் பயணித்தது. இதன்மூலம், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளைப் பெற்றனர்.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் 'ஆதியோகி ரத யாத்திரை' ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய 5 ரதங்கள் கடந்த மாதம் கோவையில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் 4 திசைகளில் பயணத்தை தொடங்கின.
அதில் ஒரு ரதம் பொங்கல் தினத்தன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தது. பாரியூர், சூரம்பட்டி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், ஆப்பகூடல், கூகலூர் என பல்வேறு இடங்களுக்கு பயணித்து பிப்ரவரி 1-ம் தேதி கோபிக்கு வருகை தந்தது. பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக சென்ற இந்த ரதத்திற்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
குறிப்பாக, வெளியூர்களுக்கு அதிகம் பயணம் செய்யாத கிராமப்புற மக்கள், முதியவர்கள் என பல தரப்பட்ட மக்கள் தங்கள் வீட்டை தேடி ஆதியோகி வந்ததை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கோபியில் இருந்து கொடிவேரி, அரசூர், பெருந்துறை, பங்களா புதூர் போன்ற இடங்களுக்கு செல்லும் இந்த ரதம் பிப்ரவரி 10-ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும். பின்னர், அங்கிருந்து கோவைக்கு பயணிக்கும்.
இந்த யாத்திரையில் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், கோபியில் உள்ள லிங்கபைரவியிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
உலகில் தோன்றிய முதல் யோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு (அகத்தியர் உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். இது ஆன்மீகத்தில் மாபெரும் அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.
இதற்காக, ஆதியோகிக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் சத்குரு அவர்களால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இத்திருமேனியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப் பேரவை சிவாங்கா யாத்திரை நடத்துகிறது
- பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர்.
அன்பு மிகுதியான நிலையே பக்தி. கடவுளின் மீதான அன்பு பக்தியாக மாறுவதும், அந்த பக்தி காதலாக மாறுவதும் நாம் பல பக்தர்களிடம் கண்டதும் கேள்விப்பட்டதும் உண்டு. அப்படி சிவனின் மீது காதல்கொண்ட தென் தமிழகத்தைச்சேர்ந்த ஒரு பெண், 'மணந்தால் சிவனைத் தான் மணப்பெண் இல்லையேல் உயிர் துறப்பேன்' எனத் தவமிருந்தாள். அவளது பக்தியின் தீவிரம் கண்டு மனமிறங்கிய சிவன், தென்னகத்தை நோக்கி வருகிறார். சூரிய அஸ்தமனத்திற்குள்ளாக வராவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்ற அந்தப்பெண்ணைக் காண அவர் வந்துகொண்டிருந்தபோது, சுற்றத்தார் இவளிடம் சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டதாக காண்பித்து உயிரை மாய்த்து கொள்ளச் செய்தார்கள்.
இத்தனை அன்பாக இருந்த ஒரு உயிர் போக காரணமாகிவிட்டோமென்ற மன வருத்தத்தில் அவர் அமர்ந்த மலை வெள்ளியங்கிரி மலை. அப்படி சிவபெருமான் அமர்ந்து சென்றதால் இந்த வெள்ளியங்கிரி மலை, 'தென்கயிலாயம்' என்றழைக்கப்பட்டு சக்திமிக்க திருத்தலமாக, திருக்கோயிலாக வீற்றிருக்கிறது.
இந்த மலைக்கு ஒவ்வொரு வருடமும் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால் இத்தகைய சக்திமிக்க தலத்திற்கு சுற்றுலா செல்வதைப்போல் சென்று வராமல் தகுந்த உடல். மன நிலையோடு அருளை உள்வாங்கிக் கொள்ள ஏதுவாய் மலை ஏறி வரும்போது, தங்களின் வாழ்க்கையே மாறுகிறது என்று பலரும் ஆனந்த கண்ணீரோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப் பேரவை நடத்தும் இந்த சிவாங்கா யாத்திரையில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவ நமஸ்காரம் எனும் யோகப் பயிற்சிஉள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர்.
வழக்கமாக புனித தலங்களுக்கு செல்லும்போது இரண்டு நாள் தினசரி வேலைகளுக்கு விடுப்பு கொடுத்து பேருந்து, கார் என எதிலாவது பயணித்து அரக்கப்பரக்க கோயில்களுக்கு சென்றுவிட்டு திரும்புவது வாடிக்கை. ஆனால் திருத்தலங்களுக்கு செல்வதற்குமுன் முறையாக விரதமிருந்து, அருளைப் பெற நம்மை நாமே தயார் செய்துகொண்டு வேலை, தொழில், குடும்பம் என எல்லோருக்கும் போல கடமைகள் இருந்தாலும், அவற்றை இரண்டாம்பட்சமாக்கி, பல நாட்கள் பாத யாத்திரையாக கோயில்களுக்கு செல்வதும் நமது கலாச்சாரத்தில் இருக்கின்றது.
சிவாங்கா விரதத்தில் பாதயாத்திரை என்பது கட்டாயம் இல்லை என்றாலும் பலரும் எதற்காக விரும்பி பாத யாத்திரையை தேர்ந்தெடுக்கிறார்கள்?
பாத யாத்திரை என்பது மிகுந்த தொலைவை நடந்து கடக்கும்போது ஏற்படும் உடல் வலி, 12 மணிக்கு மேல் தான், அதுவும் இருவேளை உணவுதான் உண்ணவேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்றி பசி, வலி உள்ளிட்ட உடல் தேவைகளை தாண்டிச் செல்வது, வாழ்க்கையை முற்றிலும் வேறு பரிமாணத்தில் பார்க்க வழிசெய்கிறது.
அவர்களுக்கும் நம்மைப்போல சாதாரண வாழ்க்கை சூழல்தான் என்றாலும் 500 முதல் 700 கிலோ மீட்டர்கள் 20 நாட்கள், 30 நாட்கள் என நடந்தே வருவது. நம்மால் முடியாது என ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் நம்மை மனித இனத்திற்கான உச்சபட்ச சாத்தியங்களை நோக்கி நகர்த்துகிறது இந்த ஆன்மீக சாதனை. இதுவே நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது நலம், வளம் என நமக்கு தேவையான எல்லாமே கிடைக்கவும் துணைபுரிகிறது.
நம் அன்றாட வாழ்க்கைக்காக நாம் வாழ்க்கை முழுக்க இயங்கிக்கொண்டே தான் இருக்கிறோம். அதிலேயே நமது மன நலம், உடல் நலத்தை இழந்து கடமையே என்று வாழ்ந்துவருகிறோம். அறுபது எழுபது வருடங்கள் இப்படியே ஓடியோடி இறுதியில் ஒன்றுமே கிடைக்காதைப் போல வருந்தி வாழ்க்கையை நிறைவுசெய்கிறோம்.
காலகாலமாய் கூட்டம் கூட்டமாக செய்துகொண்டிருக்கும் இந்த சடங்கு போலான சலிப்பான வாழ்க்கையிலிருந்து பாதையை மாற்றி நமது உள்நிலையை கவனித்தால்தான் புறச்சூழலும் நன்றாக அமையும் என்பதை உணர்ந்த பலரும் இந்த சிவாங்கா விரதத்தை மேற்கொண்டு, அளப்பரிய பலன்களை பெறுகிறார்கள். பல நாட்களாக இருந்த உடல் உபாதைகள், குடும்ப வாழ்வின் குழப்பங்கள், பொருளாதாரம் என எல்லாமே நமக்கு வேண்டியதைப்போல கிடைத்தன என்று பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனை உணர்ந்து அனுபவித்த அவர்கள் ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப சிவாங்கா யாத்திரை வருவதைப் பார்ப்பதே சிலிர்ப்பானதொரு பக்தி அனுபவமாக இருக்கிறது.
சிவாங்கா யாத்திரை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், info@shivanga.org என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்
- 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் 2017-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற வாய்ப்பளிக்கும் ஆதியோகி ரத யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையின் மூலம் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை நேரில் தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகில் தோன்றிய முதல் யோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு (அகத்தியர் உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். இது ஆன்மீகத்தில் மாபெரும் அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.
யோக கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முழுமுதற்காரணமாக இருக்கும் ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் சத்குரு அவர்களால் 2017-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் செயல்படும் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாமல் இருக்கும் மக்கள் தங்கள் ஊர்களிலேயே அவரை தரிசிப்பதற்கு இந்த யாத்திரை வாய்ப்பளிக்கிறது.
அதன்படி, 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகத்தின் 4 திசைகளிலும் பயணித்து கொண்டு இருக்கின்றன. கோவையில் இருந்து கடந்த மாதம் புறப்பட்ட 5 ஆதியோகி ரதங்கள் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 25 ஆயிரம் கி.மீ பயணித்து மஹாசிவராத்திரியன்று மீண்டும் கோவைக்கு திரும்பும் வகையில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையில் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், அந்தந்த மாவட்டங்களிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- தென்கைலாய பக்திப்பேரவை மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரையை நடத்துகிறது.
- பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர்.
ஒரு மனிதன் தன்னையும் தனது தேவைகளையும் முன்னிலைப்படுத்தாமல் சரணடையும் இடம்தான் பக்தி. எம்மதமாயினும், கலாச்சாரமாயினும் பக்தி என்பது எல்லா மனிதர்களையும் கரைக்கும் தீ. நமது கலாச்சாரத்தின் சிவபக்தி என்பது பாரதத்தின் கடைக்கோடி கிராமங்களின் எளிமையான மனிதர்களிடம் கூட சகஜமாக காணமுடியும். ஆனால் காலமாற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகும் பல புனிதங்களில் பக்தியும் ஒன்று என நாம் வருந்தும் இந்த சூழலில், பக்தி என்பது இப்போதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த பக்தர் கூட்டத்திடம் கண்கூடாகக் காணமுடிகிறது.
தென்கைலாய பக்திப்பேரவை ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரையை நடத்துகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களின் வயது, பாலினம், பணி மற்றும் பொருளாதார சூழ்நிலை என அனைத்தையும் கடந்து சிவனின் அருள் பெற, 42 நாட்கள் விரதமிருந்து தென்கயிலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்கின்றனர். ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் இந்த யாத்திரை நடைபெற்றாலும், வருடத்தில் ஒருமுறை வரும் மஹாசிவராத்திரியின்போது இந்த சிவாங்கா யாத்திரை, ஆதியோகி ரத யாத்திரையோடு இணைந்து மிக விமரிசையாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவநமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி, 21 பேரிடம் பிச்சை எடுத்தல் உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர்.
நாம் புராண கதைகளில் படித்த ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்றோர் அவர்களது பக்திக்கு பெயர் போனவர்கள். கடவுள்களையே அவர்கள் முன் இறங்கி வரச்செய்யும் அளவிற்கான தீவிரமான பக்தர்களான ஆண்டாள், பூசலார் உள்ளிட்ட பலரை நாம் அவர்களை கடவுளாகவே பார்த்து வணங்கவும் செய்கிறோம். இந்த தலைமுறையினரான நாம் அத்தகைய தீவிரமான மனிதர்களை பற்றி படித்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் நம் சமகாலத்தில் நம்மைப்போலவே சமூக வாழ்க்கையில் இருந்துகொண்டே அப்படிப்பட்ட தீவிரமான பக்தர்களாகவும் இருக்கிறார்கள் இந்த சிவாங்கா சாதகர்கள்.
இந்த தீவிரம் எந்த அளவிற்கெனில், சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட தொலைவான ஊர்களிலிருந்தும்கூட கோவை ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்தியில் கலந்துகொள்ள பாதயாத்திரையாக நடந்தே வருகின்றனர். அதிலும் அவர்கள் ஆதியோகி, நாயன்மார்கள் ஆகியோர் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் எனும் அசாத்திய தூரங்களை கடந்து இழுத்து வருகின்றனர். அவர்களும் அனைவரையும் போல பணி, தொழில் செய்பவர்கள்தான் எனினும், தங்களின் பக்தியின் தீவிரத்தால் உந்தப்பட்டு இப்படிப்பட்ட கடுமையான செயல்களையும் அன்பாக கசிந்துருகி செய்வது மிகுந்த வியப்பை தருகிறது.
ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் முதல் 64 வயதுள்ள பெரியவர் வரை பலரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டு 20 நாட்களுக்கும் மேலாக இந்த தொலைதூரப்பயணத்தை அற்புதமாக நிறைவுசெய்கின்றனர். நிறைவு செய்வதோடு நின்றுவிடாமல், 7 மலைத்தொடர்களையுடைய தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி அங்குள்ள சுயம்புவாக வீற்றிருக்கும் ஈசனை கண்டுருகி மலை இறங்குகின்றனர். அதனைத்தொடர்ந்து அன்று இரவு முழுக்க சத்குரு அவர்களின் முன்னிலையில் நிகழும் மஹாசிவராத்திரி நிகழ்விலும் பங்கேற்கின்றனர்.
இப்படி தொடர்ந்து 6 வருடங்கள், 7 வருடங்கள் என தொடர்ந்து வருகின்றனர். நம்முடன் வீட்டில் இருக்கும் நமது பெரியவர்கள், சமூகத்தில் இருக்கும் அந்த வயதுடையவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், எத்தனை அவஸ்தைகளோடு வாழ்க்கையை கழிக்கிறார்கள் என்று பார்க்கையில், இந்த சாதகர்கள் தங்கள் உச்சகட்ட பக்தியின் தீவிரத்தில் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட பெருஞ்செயலை அனாசயமாக செய்வதில் அந்த பக்தியின் வீச்சு எத்தனை அற்புதமானது என்பதை உணரமுடிகிறது.
- மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை குறிக்கும் வகையில் ஏழு அடுக்கு மலையாக அமைந்துள்ளது வெள்ளியங்கிரி.
- மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதை போலவே சிவன் அமர்ந்த மலையெல்லாம் கைலாயம் என்பது பொது மொழி. அதன் அடிப்படையில் வெள்ளியங்கிரி மலையை தென் கைலாயம் என்றழைக்கிறோம். முன்பொரு காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு சிவ பெருமான் மீது தீராத பக்தி. ஆனால் அந்த பக்தி நாம் நினைப்பது போல் சிவபெருமான் பாதம் பணியும் பக்தி அல்ல. அவர் கரம் பற்றும் பக்தி. பக்தியின் தீவிரத்தில் அவள் யோக நிலையில் சிவபெருமானுக்காக காத்திருந்தாள். சிவபெருமானை அடைய விரும்பிய அப்பெண், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சிவபெருமான் வந்து தன்னை ஆட்கொள்ளா விட்டால் உயிர் துறப்பேன் என உறுதி பூண்டிருந்தாள்.
அப்பெண்ணின் பக்தியை அறிந்த சிவபெருமான், அவள் கரம் பற்ற வட திசையில் இருந்து தென் திசை நோக்கி வந்தார். "விடிவதற்குள் சிவபெருமான் வர வேண்டும். இல்லையென்றால் நான் உயிர் துறப்பேன்" என்று சூளுரைத்திருந்தாள். ஆனால் இருவரும் இணைவதை மற்ற கடவுளர்கள் வேறு சில காரணங்களுக்காக விரும்பவில்லை. சிவபெருமான் அப்பெண்ணை மணப்பதை தடுக்க எண்ணிய அவர்கள் சதி செய்ய திட்டமிட்டனர்.
சிவபெருமான் வரும் வழியில் சூரியன் உதிப்பதை போன்று தவறாக சித்தரித்தனர். "சூரியன் உதித்து விட்டது என நம்பி, இனி தம்மால் அப்பெண்ணை அடைய முடியாது" என்று விரக்தி அடைந்தார் சிவபெருமான்; அப்பெண்ணோ குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமான் வராததால், யோக நிலையின் தீவிரத்தில் உயிர் துறந்தாள். இப்போதும் அப்பெண்ணை நாம் கன்னியாகுமரியில் குமரிப் பெண்ணாக தரிசிக்க முடியும்.
ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்த சிவபெருமான் தனக்குள் எழுந்த மனச்சோர்வுடன் வந்தமர்ந்த இடம்தான் வெள்ளியங்கிரி. பனி போர்த்தப்பட்டு கைலாயத்தை பிரதியெடுத்தது போல் வெள்ளை நிறத்தில் மிளிரும் வெள்ளியங்கிரியில் ஈசன் அமர்ந்த அதிர்வுகளை இன்றும் மலை ஏறுவோர் உணர்கின்றனர்.
மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை குறிக்கும் வகையில் ஏழு அடுக்கு மலையாக அமைந்துள்ளது வெள்ளியங்கிரி. இம்மலையில் இருக்கும் நல்லதிர்வுகளை உள்வாங்கவும், தெய்வீகத்தில் திளைத்திருக்கவும் இன்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசிக்கின்றனர். குறிப்பாக ஈஷாவின் சிவாங்கா யாத்திரிகள் 42 நாட்கள் விரதமிருந்து, கடைசி நாளில் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் நிறைவு செய்கின்றனர். மலையில் இருக்கும் ஈசனை உயிர் இனிக்க தரிசித்து திரும்புகின்றனர்.
மேலும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதியோகியை அனைவரும் தரிசிக்கும் வண்ணம் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. ஈஷா யோக மையத்திலிருந்து கடந்த டிசம்பரில் புறப்பட்ட 5 ரதங்கள் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 25000 கி.மீ தூரம் வலம் வந்து மகாசிவராத்திரிக்கு முந்தைய நாளான பிப்ரவரி 14 அன்று ஈஷா யோக மையத்தை வந்தடையும். இந்த ரத யாத்திரையில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.