செங்கல் சூளை தொழிலாளி சாவு

மனைவி யிடம் சண்டையிட்டு கொண்டு வீட்டை விட்டு சென்ற வீரமணி வீடு திரும்பவில்லை.இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல் சூளை தொழிலாளி சாவு
Published on

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை அடுத்துள்ள கே.என்.பாளையம் தெம்பினி காலனியை சேர்ந்தவர் வீரமணி (42). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். வீரமணியும், செல்வியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

இந்த நிலையில் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான வீரமணி வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு சென்று விடுவார். பின்னர் 2 நாளில் மீண்டும் திரும்பி வந்துவிடுவார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல மனைவி யிடம் சண்டையிட்டு கொண்டு வீட்டை விட்டு சென்ற வீரமணி வீடு திரும்பவில்லை.

சம்பவத்தன்று இரவு அதே ஊரை சேர்ந்த நபர் ஒருவர் செல்விக்கு போன் செய்து கணவர் வீரமணி சத்தியமங்கலம் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பாக மயங்கி கிடப்பதாகவும், அவரை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செல்வி உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது டாக்டர் வரும் வழியிலேயே வீரமணி இறந்து விட்டார் என தெரிவித்தார்.

இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com