என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்கள், சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் அதிமுக சார்பில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக 20 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தி.மு.க.வுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்தும் வகையில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

    இதற்காக ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்கள், சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் அதிமுக சார்பில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் என 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் அவர்கள் வித்தியாசமான முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை அதிமுக வேட்பாளர் கே .எஸ். தென்னரசு மணல்மேடு பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர் ஆகியோரும் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பொதுமக்களை கவரும் வகையில் எம்.ஜி.ஆர். வேடத்துடன் நிர்வாகிகள் சிலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    • மின்னணு எந்திரங்கள் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 21 கட்டுப்பாடு கருவிகள், 8 வி.வி.பேட் எந்திரங்கள் மாநகராட்சி பள்ளியில் இருந்து ஆர்.டி.ஓ அலுவலக வளாக எந்திரக்கிடங்கில் வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலுக்காக 1,500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாடு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவிகள் அனைத்தும் ஆர்.டி.ஓ. அலுவலக வளாக எந்திரக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. பெல் நிறுவனத்தை சேர்ந்த 8 பொறியாளர்கள் அந்த கருவிகளில் பழுது ஏற்பட்டுள்ளதா? என்று சரி பார்த்தனர்.

    இந்த பணி முடிந்ததும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவும் நடைபெற்றது. அதன் பின்னர் மின்னணு எந்திரங்கள் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை மாநகராட்சி பள்ளியில் இருந்து எடுத்து ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள எந்திரக்கிடங்கில் வைக்கும் பணி நடந்தது. தேர்தல் காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் சந்தேவ் இந்த பணிகளை பார்வையிட்டார்.

    ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர். ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 21 கட்டுப்பாடு கருவிகள், 8 வி.வி.பேட் எந்திரங்கள் மாநகராட்சி பள்ளியில் இருந்து ஆர்.டி.ஓ அலுவலக வளாக எந்திரக்கிடங்கில் வைக்கப்பட்டது.

    • அனல்பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மனம் இரட்டை இலை பக்கம் உள்ளது.
    • தி.மு.க.வின் 2 ஆண்டுகளில் நகர் மன்ற உறுப்பினர்களின் அராஜகம், மக்களை திரும்பி பார்க்காத செயல்கள் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம் துரிதமாக நடக்கிறது. அனல்பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மனம் இரட்டை இலை பக்கம் உள்ளது. இன்றைக்கு கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கின்ற ஆட்சிக்கு கடிவாளம் போன்று அ.தி.மு.க. வெற்றி இருக்க வேண்டும். கண்முன் தெரியாமல் போகக்கூடிய ஆட்சிக்கு வேகத்தடை வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

    கடந்த அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகளில் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க.வின் 2 ஆண்டுகளில் நகர் மன்ற உறுப்பினர்களின் அராஜகம், மக்களை திரும்பி பார்க்காத செயல்கள் உள்ளது.

    பேரறிஞர் அண்ணா சொன்னது போல் இந்த ஆட்சியின் அவலங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியின் தெருவோரங்களிலும், டீக்கடைகளிலும் பேசப்பட்டு வாக்குச்சாவடியில் முடிவடைகின்ற போது இரட்டை இலை வெற்றி பெறும்.

    இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு தி.மு.க. வரிந்து கட்டிக்கொண்டு ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்றுவிடும் என்ற தேர்தல் பயத்தை தேர்தல் ஜூரத்தில் இருப்பதையும் காண முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.80 கோடி மதிப்பில் பேனா சின்னம் வைப்பது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பேனாவை சட்டை பாக்கெட்டில் தான் வைக்க வேண்டும். அதை தாண்டி வேறு எங்கு வைத்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்றார்.

    • காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி நிறைவடைந்தது.

    இதில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர், ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி. தினகரன் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க. நாம்தமிழர் கட்சி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மனு வாபஸ் பெறுவதற்கு முன்பாகவே ஓ.பி.எஸ்.அணி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாளாகும். இதையடுத்து அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதேபோல் சுயேச்சை வேட்பாளர்கள் சிலரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

    மாலை 3 மணிக்கு பின்னர் தான் வேட்பு மனுக்களை எத்தனை பேர் வாபஸ் பெற்றனர் என்ற முழு விபரமும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பிரசார தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பா.ஜனதாவினர் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு நாள் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளார். மேலும் அவர் 5 இடங்களில் பேசவும் சுற்றுப்பயண விபரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரசார தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பா.ஜனதாவினர் தெரிவித்தனர்.

    • தமிழக இளைஞர்களுக்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.
    • இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு புதியது அல்ல.

    ஈரோடு:

    தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் உள்பட அரசு எந்திரமே இங்கு தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்கு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. எனவே பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படை வர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

    இதேபோல் பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக இளைஞர்களுக்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் இங்கு உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தால் வடமாநிலத்தவர்கள் எதற்காக இங்கே வரப்போகிறார்கள்.

    இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு புதியது அல்ல. அவர்களுக்கு பழக்கப்பட்டது தான். ஆளும் கட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவதை எதிர்த்து தான் இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
    • உள்ளூர் மக்களின் ஆதரவு தி.மு.க.விற்கு இல்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செம்மலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து மக்களை சந்தித்து வருகிறோம். இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. அதற்கு தி.மு.க.வின் கடந்த 22 மாத ஆட்சி தான் காரணம். சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் , பால் விலை உள்ளிட்ட வரிகளையும், கட்டணத்தையும் உயர்த்தி உள்ளனர். தனி நபர் வருமானம் கூடவில்லை. ஆனால் விலைவாசி விண்ணை முட்டுகிறது.

    மக்களின் வேதனை இந்த தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க. எதை சொல்லி வாக்கு கேட்பார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது. மக்களை சந்தித்து பேச தயங்குகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் செய்து காட்டிய நலத்திட்டங்களை சுட்டி காட்டி வாக்கு சேகரிக்கிறோம். இரட்டை இலை வெற்றி பெறுவது உறுதி.

    மக்களின் ஆதரவு பெருகிக்கொண்டு இருக்கிறது. பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மக்கள் செல்வாக்கு எங்களுக்கு கூடினால் அதை தடுக்க எந்த வழியையும் கடைபிடிப்பார்கள். அது தி.மு.வின் கைவந்த கலை. மக்களின் ஆதரவு பெருகுவதை தடுப்பார்கள். மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.

    நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக ஆயிரகணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். உள்ளூர் மக்களின் ஆதரவு தி.மு.க.விற்கு இல்லை. இந்த ஆட்சியின் மீது வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் மதுபானங்கள், பரிசுப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது.

    அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர். இதேபோல் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் மதுபானங்கள், பரிசுப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மேலும் பறிமுதல் செய்யும் பணம் அனைத்தும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.24 லட்சத்து 70 ஆயிரத்து 870 நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர்.

    இதேபோல் ஹான்ஸ், பான்பராக், கஞ்சா என இதுவரை 1,650 கிராம் மதிப்பிலான புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.18,653 ஆகும். இதுவரை 77 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.53 ஆயிரத்து 850 ஆகும்.

    தொடர்ந்து நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் ஈரோட்டுக்கு கிள்ளி கூட போடவில்லை.
    • நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகி விட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை. நமது ஆட்சியில் கொண்டு வந்த ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் ஈரோட்டுக்கு கிள்ளி கூட போடவில்லை. காரில் பவனி வருகிறார்கள்.

    சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் கட்டண வரி என பல்வேறு வரி உயர்வினாலும், விலைவாசி ஏற்றத்தாலும் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    விடியல் தருவேன் என கூறி மக்களை ஏமாற்றி 505 வாக்குறுதிகளை தந்து எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு மக்கள் இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தொகுதியெங்கும் தி.மு.க. காரர்கள் தான் உள்ளனர். கண்ணுக்கெட்டிய தூரம் காங்கிரஸ்காரர்களை காணவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புஞ்சைபுளியம்பட்டி அருகே அணையபாளையத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது.
    • இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு நவ காளியம்மன் அருள் பெற அழைக்கிறோம்.

    புஞ்சைபுளியம்பட்டி அருகே அணையபாளையத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவிலில் தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு 71 அடி உயரத்தில் நவ காளியம்மன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கோவிலில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஆதி கருப்பண்ணசாமி, வராகி அம்மன், காலபைரவர், சப்த கன்னிமார்கள், பூவாடகாரி அம்மன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனியே சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நவ காளியம்மன் அறக்கட்டளை நிறுவனர் அய்யாகண்ணு சாமி கூறியதாவது:-

    நவ காளியம்மன் என்னுடைய கனவில் தனக்கு 71 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதின் பேரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிலை அமைக்கும் பணி தொடங்கியது.

    தமிழ்நாட்டில் எங்கும் காணாத அளவுக்கு 8 கைகளுடன் வீற்றிருக்கும் நவ காளியம்மன் கோவில் பணிகள் நடைபெற்று தற்போது முடிவுற்ற நிலையில் உள்ளது. இதேபோல் மற்ற சாமிகளுக்கும் தனித்தனி சன்னதி அமைக்கப்பட்டு வருகிறது.

    வருகிற ஏப்ரல் மாதம் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கிறது. அவினாசி ஆதினம் காமாட்சி தாசர் சாமி தலைமையில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயம் ராமனந்த குமரகுருபர அடிகளார், ஆனமலை தேவனாந்த சரஸ்வதி சாமி, ஸ்வத சிகாநந்த சரஸ்வதி சாமி, திருவண்ணாமலை சிவமணி சாமி ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு நவ காளியம்மன் அருள் பெற அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

    சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஈரோடு முருகனடியார் திருப்பணி குழு சார்பில் மலை மேல் உள்ள முருகன் கோவிலில் தொடர்ந்து 5 நாட்கள் அன்னதானம் நடைபெற்றது.

    தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை 9 மணிக்கு மேல் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வகைகளை கொண்ட மலர்கள் டன் கணக்கில் கொண்டு வரப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர்கள் மற்றும் அனைத்து வகை கனிகள், திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நாதஸ்வர தவிழிசை கச்சேரியுடன் 4 ராஜ வீதிகளிலும் சாமிகள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர் திருவிழாவுக்காக ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை (பெருந்துறை), கோபாலகிருஷ்ணன் (திருப்பூர்) ஆகியோர் மேற்பார்வையில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட 9 இன்ஸ்பெக்டர்கள், 30-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் என 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு விஸ்வகர்ம சமுதாய விழா குழு சார்பில் பக்தி இசை நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு கைலாசநாதர் கோவில் வளாகத்தில் பாரம்பரிய கலை குழுவினரின் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
    • திருமகன் ஈவெரா தொகுதியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை-கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ஈரோடு மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். மாநகர பகுதிகளில் பழுதடைந்துள்ள ரோடுகள் அனைத்தும் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக சீரமைக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும். திருமகன் ஈவெரா இந்த தொகுதியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

    மகன் விட்டு சென்ற பணியை நிச்சயமாக அவருடைய தந்தை செயல்படுத்தி காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×