என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சென்னை ஆவடி, வேலூரில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 160 பேர் கடந்த 8-ந் தேதி ஈரோடு வந்தனர்.
    • வாக்கு எண்ணிக்கையின் மறுநாளான வரும் மார்ச் மாதம் 3-ந் தேதி வரை ஈரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக கூடுதல் பாதுகாப்பு பணிகளில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், துணை ராணுவத்தினர், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை ஆவடி, வேலூரில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 160 பேர் கடந்த 8-ந் தேதி ஈரோடு வந்தனர். இந்த நிலையில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    இதற்காக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2 கம்பெனி துணை ராணுவத்தினர் 184 பேர் ரெயில் மூலமாக நேற்று இரவும், இன்று காலையும் ஈரோடு வந்தடைந்தனர். இது தவிர இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் வருகை தந்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து நாளைக்குள் மேலும் 2 கம்பெனி துணை ராணுவ படைவீரர்கள் ஈரோடுக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பெட்டிகள் மீண்டும் தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

    இதற்காக அவர்கள் வாக்கு எண்ணிக்கையின் மறுநாளான வரும் மார்ச் மாதம் 3-ந் தேதி வரை ஈரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். குறிப்பாக துணை ராணுவத்தினர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் முழுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    • புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், தாசில்தார் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • ஆசிரியர் பாலசுப்பிரமணியனை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(வயது 47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் மாணவிகளிடம் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்களிலும் பேசி வருவதாக அடிக்கடி புகார் எழுந்து வந்தது. சமீபகாலமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் அவதூறாக பேசியதாக அந்த மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளனர்.

    ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததாக கூறி நேற்று முன்தினம் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    உடனடியாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், தாசில்தார் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், ஆசிரியர் பாலசுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும். பணியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து பாலசுப்பிரமணியனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.
    • அ.ம.மு.க வேட்பாளர் சிவப்பிரசாத் உள்பட 6 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 96 வேட்பாளர்கள் 121 மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து கடந்த 8-ந் தேதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது 13 பேரின் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

    மேலும் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அ.ம.மு.க வேட்பாளர் சிவப்பிரசாத் உள்பட 6 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். நேற்று மாலை 3 மணிக்கு பின் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. இந்த பணி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

    இதனையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க வேட்பாளர் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் வாக்களிக்கும் வசதியாக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் இடம் பெறலாம்.

    தற்போது 77 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் 77 வேட்பாளர்கள் பெயருக்கு பின் கடைசியாக நோட்டா இடம்பெறும்.

    5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தினாலும் கட்டுப்பாட்டு எந்திரம் ஓட்டுச்சாவடிக்கு ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும். ஒரு கட்டுப்பாடு எந்திரத்தில் 24 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வரை இணைக்க முடியும். தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நசியனூர் சாலையின் இருபுறமும் தே.மு.தி.க. கொடி கம்பங்கள் நடப்பட்டு இருந்தது.
    • போலீசார் அனுமதியின்றி கொடி, கம்பங்கள் அமைத்த தே.மு.தி.க. மாவட்ட துணைச்செயலாளர் ரங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    தே.மு.தி.க. பணிமனை திறப்பு விழா நேற்று நசியனூர் ரோட்டில் நடைபெற்றது. தே.மு.தி.க துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிமனையை திறந்து வைத்தார்.

    இதற்காக நசியனூர் சாலையின் இருபுறமும் தே.மு.தி.க. கொடி கம்பங்கள் நடப்பட்டு இருந்தது. இதற்கான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

    இதனையடுத்து அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வீரப்பன்சத்திரம் போலீசார் கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தினர். அதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து பறக்கும் படை சார்பில் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் அனுமதியின்றி கொடி, கம்பங்கள் அமைத்த தே.மு.தி.க. மாவட்ட துணைச்செயலாளர் ரங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் வகையில் அக்கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் சந்தித்து விட்டார்.

    ஆனால் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் வகையில் அக்கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

    தனித்து போட்டியிட்டு மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும்படி வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கும் கமல்ஹாசனின் கவனம் கூட்டணி அரசியலை நோக்கி நகர்ந்து உள்ளது.

    இதை தொடர்ந்தே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    அதன்படி, பிப்ரவரி முதல் அல்லது 2வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டுள்ளைதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும் 19ம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

    • பணிமனை அமைத்த போது அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்றும், திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைத்தனர்.
    • அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அதையும் அகற்றிவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என மாற்றினர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் மேற்கொள்ள பெருந்துறை சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனை திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பணிமனை அமைத்த போது அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்றும், திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைத்தனர். அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அதையும் அகற்றிவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என மாற்றினர்.

    இந்த 4 பேனர்களிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெரிய படங்களும், கூட்டணி கட்சி என்ற முறையில் த.மா.கா. ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் மீண்டும் 5-வது முறையாக புதிதாக பிளக்ஸ் பேனர் மாற்றி வைத்துள்ளனர். அதில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் என மாற்றி பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் படமும், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர் படமும் இடம் பெற்றுள்ளது.

    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ‘கை’ சின்னமும், கே.எஸ்.தென்னரசுவுக்கு ‘இரட்டை இலை’ சின்னமும் ஒதுக்கீடு.
    • தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ‘முரசு’ சின்னம் ஒதுக்கீடு.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்பு மனுத்தாகல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

    இந்நிலையில் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறப்பட்டது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    77 வேட்பாளர்கள் + நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளது.

    ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு 'கை' சின்னமும் கே.எஸ்.தென்னரசுவுக்கு 'இரட்டை இலை' சின்னமும் ஒதுக்கீடு.

    தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு 'முரசு' சின்னம் ஒதுக்கீடு.

    டார்ச் லைட், குக்கர் சின்னங்கள் சுயேட்சைகளுக்கான சின்னம் பட்டியலில் உள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் செலவினப்பார்வையாளர் கவுதம் குமார் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • தேர்தல் தொடர்பாக வந்துள்ள 218 புகார்களின் மேல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் கவுதம் குமார் இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்களுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    சட்டமன்றத் தொகுதியில் வாகனங்கள் அதிக அளவு செல்லக்கூடிய முக்கிய சாலை சந்திப்புகள் அதிக தேர்தல் செலவினங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ள பகுதிகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்க ளுடன் கலந்தா லோசித்து அங்கு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும், வாகன சோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

    வாகன சோதனை யின் போது பணம், மதுபானங்கள், ஆயுதங்கள், வாக்காளர்க ளைக வரும் வகையிலான பொருட்கள் ஆகியவை கொண்டு செல்லபடுகிறதா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறதா?

    தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை எவ்வித ஆவணங்களும் இன்றி பணத்தை கொண்டு செல்லலாம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் ரொக்கமாக கொண்டு செல்லும் பட்சத்தில் உரியஆவணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதிப்புடைய பொருட்கள், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படின் அவற்றை பறிமுதல் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும்,

    ரூ10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்படும் நேர்வுகளில் அலுவலர்கள் தாங்கள் வழக்கு பதிவு செய்யாமல் அதனை வருமானத் துறையினருக்குத் தெரிவித்து அவர்கள் மூலமாக வழக்கு பதிவு செய்யப்படுகிறதா? என்பது குறித்தும்,

    வங்கிகளில் பணம் நிரப்புவதற்காக வங்கியி லிருந்து பணத்தினை வங்கிகளால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் உரிய அனுமதியுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்.

    அவ்வாறு எடுத்து செல்லும் போது அந்த வாகனத்தில் உள்ள அனைவரும் அடையாள அட்டையினை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

    அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளில் உள்ள கொடிகள், சின்னங்கள் மற்றும் கட்சிகளின் பெயர்களை மறைத்துள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    அனைத்து வாகனங்களிலும் ஏதாவது கட்சியின் பெயர் சின்னம் மற்றும் கொடி ஆகியவை இருப்பின் அவை அகற்றப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டும் ஏதேனும் ஒரு கொடி, பேனர், பதாகை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல் கூட்டம், ஊர்வலம் ஆகியவை நடத்தப்படாமல் இருப்பதை கண்காணித்தல் பிரச்சார கூட்டங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முன் அனுமதி பெறாமல் வாகனங்கள் பங்கேற்பதை கண்காணித்தல்,

    பிரச்சாரத்தின் போது 10வாகனங்களுக்கு மேல் தொடர்ச்சியாக செல்லும் சமயங்களில் 100 மீட்டர் இடைவெளி விட்டு செல்வதை உறுதி செய்தல்.

    எந்த ஒரு மத வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளாமல் இருத்தலை கண்காணித்தல். அரசியல் கட்சிகளால் விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அச்சக உரிமையாளர்கள் மூலம் கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

    மேலும் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள், அன்பளிப்புகள், மதுவகைகள் விநியோகம் செய்வதாக புகார்கள் வரப்பெறும் பட்சத்தில் பறக்கும் படையினரால் மேற்படி சம்பவ இடத்திற்கு உடனடி யாக செல்ல இயலாத நிலை ஏற்படும் பட்சத்தில்,

    அருகில் இருக்கும் நிலையான கண்காணிப்பு குழுவின ருக்கோ அல்லது சம்பவ இடத்திற்கு அருகில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வுமேற்கொண்டார்.

    தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அதில் பெறப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான புகார்கள் தொடர்பாக பதியப்பட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேர்தல் தொடர்பாக வந்துள்ள 218 புகார்களின் மேல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் ஈரோடு மாநகராட்சி 2-ம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றழிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு அறையினில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான விளம்பர செலவினங்கள் குறித்து தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், வானொலி மூலமாகவும் கண்காணி க்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுகளின் போது தேர்தல் நடத்தும் அலுவலர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) குருநாதன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • வனப்பகுதியில் இருந்து யானைகள் தண்ணீரை தேடி வெளியேறி கூட்டமாக பவானிசாகர் அணைக்கு வந்தது.
    • இந்த யானைகள் கூட்டமாக வந்ததை கண்ட அந்த பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், பண்ணாரி மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானைகள் உள்பட பல வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வெளியேறி அடிக்கடி கூட்டமாக ரோட்டில் உலாவி வருகிறது. மேலும் அருகே உள்ள கிராம பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.

    இதே போல் பவானி சாகருக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் யானைகள் பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு தண்ணீரை தேடி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த யானைகள் கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீரை தேடி வெளியேறி கூட்டமாக பவானிசாகர் அணைக்கு வந்தது. அந்த யானைகள் அணை பகுதி யில் சிறுது நேரம் உலாவி கொண்டே இருந்தது.

    இந்த யானைகள் கூட்ட மாக வந்ததை கண்ட அந்த பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அருகே உள்ள பூங்கார் கிராம குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுமோ என ஒரு வித அச்சத்துடன் இருந்தனர்.

    யானைகள் ஊருக்குள் புகாதவாறு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானைகளை பவானிசாகர் வனப்பகுதிக்கு விரட்டுமாறு பவானிசாகர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம் என தொடர்ந்து விழா நடந்தது.

    தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக காலை 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து மலர் அபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது 4 ஆயிரம் கிலோ மலர்களாகல் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் சமேதராக வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் 4 ராஜா வீதிகளிலும் சாமிகள் வலம் வந்து அதிகாலையில் கைலாசநாதர் கோவி லுக்குள் சென்றடைந்தது.

    தொடர்ந்து இன்று மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் தேர் திருவிழா நிறை வடைக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன், கோவில் தலைமை எழுத்தர் பால சுப்பிரமணியம், மற்றும் பணியாளர்கள், அர்ச்ச கர்கள் செய்திருந்தனர்.

    • நாச்சி பெருந்துறை-பவானி ரோடு பகுதியில் தனது பேரனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நாச்சி மீது பலமாக மோதியது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், பாலன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சி (வயது 58).

    சம்பவத்தன்று நாச்சி பெருந்துறை-பவானி ரோடு பகுதியில் தனது பேரன் மோகன்குமாருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நாச்சி மீது பலமாக மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நாச்சி இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.‌
    • இதில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    கோவில் பின் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி மற்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழா க்கள் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கை செலுத்திட வசதிக்காக ராஜ கோபுரம், பெருமாள் சன்னதி, பசு பராமரிப்பு, அன்னதானம், சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி சன்னதி உள்பட பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணடியல்களில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

    இந்த உண்டி யல்கள் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்கள், தன்னார்வ லர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் காணிக்கைகள் எண்ணப் படுவது வழக்கம்.

    அதேபோல் பெருமாள் கோவில் சன்னதியில் இந்து அறநிலையத்துறை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    இதில் ரூ.27 லட்சத்து 33 ஆயிரத்து 842 பணம் மற்றும் 35 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக சங்க மேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    ×