search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிவகிரியில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்சோவில் கைது
    X

    சிவகிரியில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்சோவில் கைது

    • புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், தாசில்தார் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • ஆசிரியர் பாலசுப்பிரமணியனை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(வயது 47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் மாணவிகளிடம் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்களிலும் பேசி வருவதாக அடிக்கடி புகார் எழுந்து வந்தது. சமீபகாலமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் அவதூறாக பேசியதாக அந்த மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளனர்.

    ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததாக கூறி நேற்று முன்தினம் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    உடனடியாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், தாசில்தார் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், ஆசிரியர் பாலசுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும். பணியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து பாலசுப்பிரமணியனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×