

பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், பாலன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சி (வயது 58).
சம்பவத்தன்று நாச்சி பெருந்துறை-பவானி ரோடு பகுதியில் தனது பேரன் மோகன்குமாருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நாச்சி மீது பலமாக மோதியது.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நாச்சி இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.