என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 971 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோ தனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரி க்கை வைத்துள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ள னர்.

    • கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் மார்ச் மாதம் முதல் வேகமாக பரவ தொடங்கி யது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே 2 இலக்கில் பதிவாகி வந்த கொரோனோ பாதிப்பு தற்போது 3 இலக்கில் பதிவாகி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்புபோல் முககவசம் அணிய வேண்டும். கை கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 வாரத்திற்கு மேலாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவ மனைகள்,அரசு மருத்துவ மனை, நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்று ம் நர்சுகள், மருத்துவர்கள், நோயாளிகள், நோயாளி களை பார்க்கும் வரும் உறவினர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற புதிய உத்தரவு அமலுக்கு வந்தது.

    இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வா ய்க்கிழமை) கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி போன்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்க வசதி உள்ளதா? ஆக்சிஜன் வசதி உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேப்போல் மருத்துவ மனைகளில் போதிய மருந்துகள் கையிருப்பு உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தை பொறுத்த வரை தினமும் 2, 3 பேர் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்.

    ஒரு வாரத்திற்கு 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளையும் ஈரோடு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இந்த வாரம் கால்நடை சந்தை கூடியது.
    • ஏராளமான வியாபாரிகள் கால்நடைகள் வாங்க வந்திருந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இந்த வாரம் கால்நடை சந்தை கூடியது.

    இந்த கால்நடை சந்தைக்கு அந்தியூர், பர்கூர், கோபிசெட்டிபாளையம். பவானி அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் இருந்து மாடுகளும், எருமை மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் மற்றும் கர்நாடக, கேரளா மாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகள் சந்தையில் கால்நடைகள் வாங்க வந்திருந்தனர்.

    சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்ட நிலையில், மாடுகள் ரூ. 3 ஆயிரத்தில் ரூ.45 ஆயிரம் வரையிலும், எருமை மாடுகள் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்கள் நடை பெற்ற கால்நடை சந்தையில் சுமார் ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் கூறினர்.

    • பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி குன்றி மலையடி வாரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம், கடம்பூர் உள்ளிட்ட மலை கிராமங்க ளில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்தடைகிறது.

    42 அடி உயரமுள்ள இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மூலவா ய்க்கால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு தோறும் இரு போக பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அணை நிரம்பி உபரி நீரானது நேற்றைய நிலவரப்படி 8 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொ டர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தன கிரி விவசாயிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அணையில் இருந்து இடது மற்றும் வலது என இரு மதகுகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விட்டனர்.

    இன்று முதல் 57 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளதாகவும், இரு வாய்க்கால்களிலும் வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    • மீண்டும் தேர் இழுக்கப்பட்டு தேர் நிலையை வந்து அடைகின்றது.
    • ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது இந்தக் கோtpலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் வெகு விமர்சியாக குண்டம்-தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுடன் குண்டம- தேர் திரவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    இதை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 7-ந் தேதி தேர் இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையடுத்த இன்று (திங்கட்கிழமை) மாலை மீண்டும் தேர் இழுக்கப்பட்டு தேர் நிலையை வந்து அடைகின்றது.

    மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு பாரிவேட்டையும், அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் வசந்தோற்சவம் (மஞ்சள் நீராட்டு) விழாவும் நடக்கிறது

    விழாவையொட்டி அந்தியூர், தவுட்டுப்பாளையம், வெள்ளைய ம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கரா பாளையம்,எண்ண மங்க லம், செல்லம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்க ள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சூதாட்டம் நடந்த இடத்திற்கு ஈரோடு தெற்கு போலீசார் சென்று நடவடிக்கை எடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் சாலை மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு தெற்கு போலீசார் அப்பகுதிக்கு சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 7 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஈரோடு சாஸ்திரி சாலையை சேர்ந்த குழந்தை சாமி (62), அதேபகுதியை சேர்ந்த ராஜா (47), சூரம்பட்டியை சேர்ந்த எஸ்.குழந்தைசாமி (70), பொன்னுசாமி (67), அருணாசலம் (60), பெருமாள் (70), பூபதி (60) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டுகட்டு மற்றும் ரூ.390 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை மீண்டும் வெளியேறியது.
    • தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    கருப்பன் இந்த பெயரை கேட்டாலே தாளவாடி மற்றும் சுற்று வட்டார மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். காரணம் கடந்த ஒரு வருடமாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மட்டும் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய கருப்பன் என்ற காட்டு யானை அருகே உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் தோட்டத்தில் காவல் காத்த 2 விவசாயிகளையும் கொன்றுள்ளது.

    இதனைத்தொடர்ந்து கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அதன்படி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து முதல் முறை ராமு, சின்னத்தம்பி என்ற கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டன. அதன் பின்னர் சலீம், அரிசி ராஜா, கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.

    இந்த கும்கிகளின் உதவியுடன் வனத்துறையினர் மருத்துவ குழுவினர் தோட்ட பகுதிகளுக்கு சென்று கருப்பன் யானைக்கு இதுவரை 7 முறை மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் மயக்க ஊசிக்கு மயங்காமல் கருப்பன் யானை ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் தப்பி சென்றுவிட்டது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வந்த கும்கி யானைகளும் டாப்சிலிப்புக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் கொஞ்ச நாள் கருப்பன் தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    இந்நிலையில் மீண்டும் கருப்பன் யானை தோட்டத்துக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்து மீண்டும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முறையும் கருப்பன் யானை வனத்து றையினருக்கு போக்கு காட்டி விட்டு தப்பியது.

    இதனால் கருப்பனை பிடிக்க வந்த 2 கும்கி யானைகளும் முதுமலை தெப்பகாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. எப்படியாவது கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை மீண்டும் வெளியேறியது. பின்னர் மாதள்ளி கிராமத்து க்குள் புகுந்த அங்குள்ள விவசாயி சுட்பண்ணா என்பவ ரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தது அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் சேதப்படுத்தியது.

    அதன் பின்னர் விவசாயிகள் ஒன்றிணைந்து சுமார் 2 மணி நேரம் போராட்ட த்திற்கு பிறகு மீண்டும் கருப்பன் யானையை வனப்பகு திக்குள் விரட்டினர். தொட ர்ந்து கருப்பன் யானை அங்கு பயிரிடப்ப ட்டிருந்த முட்டைக்கோஸ் தோட்டத்து க்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளது. இதன் சேதம் மதிப்பே லட்சக்கணக்கில் இருக்கும். பின்னர் மீண்டும் கருப்பன் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உடைந்துள்ளனர்.

    வனத்துறையினர் எப்படியாவது கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஒரு வருடமாக கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர். அதே சமயம் எப்படியாவது கருப்பன் யானையை பிடித்து விடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என 3 தொகுதிகளில் கிட்டத்தட்ட 3.50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
    • டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். தேர்தல்போது இரட்டை இலை சின்னம் கிடைத்தது. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு, அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது.

    தற்போது அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் இந்த படிவங்கள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என 3 தொகுதிகளில் கிட்டத்தட்ட 3.50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்காக அ.தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அ.தி.மு.க. அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். 2024 தேர்தல் திருப்புமுனையாக அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாக அ.தி.மு.க. இருந்தது. 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன்.

    கூட்டணி குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே முரண்பாடுகள் இல்லை. நேர சூழல் காரணமாக பிரதமர்- இ.பி.எஸ். சந்திப்பு நடைபெறவில்லை. பிரதமரை எங்கு எப்போது சந்திக்க வேண்டுமோ அப்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணையின் நீர்மட்டம் 87.17 அடியாக குறைந்து உள்ளது.
    • அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர். அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.17 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 429 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.2,800 கன அடி நீர் வெளியேற்றம்

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • காதல் ஜோடி பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு, ஏப். 9-

    கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு ஸ்ரீ ராமபுரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் தினேஷ்குமார் (23). பி.காம் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    திருப்பூர் மாவட்டம் கம்பால குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் கோவர்ஷினி (20). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் தினேஷ்குமாரும், கோவர்ஷினியும் கோபி பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இரு விட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி இன்று காலை பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் நேரடியாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார், கோவர்ஷினி தஞ்சம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • கயிறு திரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட அசோகபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் சின்னசாமி (53).

    இவர் மொடக்குறிச்சி அருகே வெண்டிபாளையம் அடுத்த காந்திபுரம் அருகில் உள்ள பால தண்டாயுதபாணி வீதியில் கயிறு திரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கயிறு திரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 9 பேர் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    இந்த தீ விபத்தில் கயிறு திரிக்கும் நார்கள் மற்றும் மிஷின்கள் எரிந்து சேதமாகி யது. தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி னர்.

    தீயணைப்புத் துறையின் முதல் கட்ட விசாரணையில் அருகிலுள்ள நிலத்தில் புற்கள் மற்றும் செடி, கொடிகள் பற்றி தீ எரிந்ததால் அருகில் உள்ள கயிறு திரிக்கும் கம்பெ னிக்கு தீ பரவி பற்றி கொண்டது என தெரிவித்தனர்.

    தீயில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நார்கள் மற்றும் மிஷின்கள் சேதம் அடைந்ததாக பாதிக்க ப்பட்டவர் தெரிவித்தார்.

    • மணிகண்டன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோபி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. இவரது மகன் மணிகண்டன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டன் அந்த மில்லில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×