மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

காதல் ஜோடி பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.
போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.
Published on

ஈரோடு, ஏப். 9-

கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு ஸ்ரீ ராமபுரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் தினேஷ்குமார் (23). பி.காம் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் கம்பால குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் கோவர்ஷினி (20). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் தினேஷ்குமாரும், கோவர்ஷினியும் கோபி பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இரு விட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி இன்று காலை பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் நேரடியாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார், கோவர்ஷினி தஞ்சம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com