என் மலர்
ஈரோடு
- இன்று 2-வது நாளாக கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
- மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் வேகம் எடுத்து ள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 350-ஐ கடந்து விட்டது.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதை தடுக்க தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அரசு ஆஸ்பத்தி ரிகள் நகர, கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பி க்கப்பட்டது.
இந்த நடை முறை அமலுக்கு வந்து விட்டது. இதைபோல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள், உடன் கவனித்து கொள்பவர்களும் முககவசம் அணிய வேண்டும் என நடைமுறை வந்துவிட்டது.
இந்நிலையில் கொரோ னா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கை யாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் கொரோனா அவசர கால தடுப்பு ஒத்திகை 2 நாட்கள் நடைபெறும் என அறிவித்தி ருந்தனர்.
அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்திலும் நேற்று அரசு ஆஸ்பத்தி ரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்காக தனியாக 100 படுக்க வசதி கொண்ட வார்டு தயார் நிலையில் உள்ளது.
மருந்து, உள் கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் உறுதி செய்த னர். ஆக்சிஜன், படுக்கை வசதி மருந்து கையிருப்பு ஆகியவற்றையும் அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.
இதேபோல் கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி போன்ற அரசு ஆஸ்பத்திரி களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடை பெற்றது.
அதனை த்தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்ட த்தில் உள்ள அரசு ஆஸ்பத்தி ரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் வந்த நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி க்கப்பட்டு பதிவு செய்து பரிசோதனை முடிந்து ஆக்ஸிஜன் பொருத்துவது உள்ளிட்ட ஒத்திகைகள் செய்து பார்த்தனர்.
கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளை எவ்வாறு மருத்துவமனைக்குள் கொண்டு வருவது. அவருக்கு எவ்வாறு முறையாக சிகிச்சை அளிப்பது போன்ற ஒத்திகையும் நடைபெற்றது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 725 ஆக உயரந்துள்ளது.
மேலும் பாதிப்பில் இருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதனால் குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள னர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 5,431 தெரு விளக்குகள் புதியதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
- இதற்காக ரூ.15.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 60 வார்டுகளுக்குட்பட்ட முக்கிய சாலைகள், வீதிகள் என மாநகராட்சியில் தற்போது 23,721 எல்.ஈ.டி தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
இந்த தெரு விளக்குகள் அனைத்தும் 2,229 தானி யங்கி கட்டு ப்பாடு கருவி களுடன் இணைக்கப்பட்டு தினசரி இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த தெருவிளக்குகளின் செயல்பாடுகள் முழுமை யாக இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தெரு விளக்கு பழுதுகள் அனை த்தும் புகார் கிடைத்த சில நாட்களிலேயே சரி செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாநகரா ட்சி விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளில் புதியதாக 5,431 தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடை பெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 15-வது மத்திய நிதிக்குழு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டு ள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு நகராட்சியாக இருந்து கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அருகாமையில் இருந்த பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளில் அடிப்ப டை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வந்ததையடுத்து முன்னுரிமை அடிப்படை யில் விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர், சாலைகள், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
அந்த வகையில் ஏற்கனவே மாநகராட்சியில் 23 ஆயிரத்து 721 தெரு விளக்குகள் உள்ள நிலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கூடுதலாக 5,431 தெரு விளக்குகள் புதியதாக அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக ரூ.15.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.
இந்த புதிய தெரு விளக்குகள் அனைத்தும் மாநகரின் புறநகர் பகுதி களில் அமைக்கப்பட உள்ளது. மின் கட்டணத்தை குறைப்பதற்காக எல்.ஈ.டி. தெருவிளக்குகள் பொரு த்தப்பட உள்ளது.
புதியதாக பொருத்தப்பட உள்ள தெரு விளக்குகளின் கட்டுப்பாடு கருவிகள் அனைத்தும் இணைதளத்துடன் இணை க்கப்பட உள்ளதால் இயக்குவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது.
மேலும் பராமரிப்பு, பழுது தொடர்பான புகார்க ளையும் எளிதில் கையாள முடியும். ஈரோடு சத்தி சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிறுத்ததில் இருந்து சித்தோடு வரை சாலையின் மையப்பகு தியில் புதியதாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இது தவிர புதியதாக உருவான குடி யிருப்பு பகுதிகளிலும் தெருவிளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகி ன்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தோட்டத்திற்குள் சிறுத்தையின் கால்தடம் பதிவானதை கண்டு அச்சம் அடைந்தார்.
- கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி யில் சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை களை வேட்டை யாடுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியையொட்டி அமைந்துள்ள சித்தன் குட்டை கிராம த்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார்.
தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி தோட்டத்திற்குள் சிறுத்தையின் கால்தடம் பதிவானதை கண்டு அச்சம் அடைந்தார்.
இதுகுறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் பகுதியில் தானியங்கி கேமிரா பொருத்தி கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வரத்து குறைந்துள்ளதால் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
- இதுபோல் இஞ்சி விலையும் அதிகரித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.60-க்கு விற்ற பீன்ஸ் இன்று ஒரு கிலோ ரூ.120 ஆக அதிகரித்து விற்பனை ஆகிறது.
இதுபோல் வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்பனை ஆகிறது.
இஞ்சி பொறுத்தவரை பெ ங்களூரு, ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், தாளவாடி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு அதிக அளவில் வரத்தாகி வந்தது.
தற்போது கடந்த சில நாட்களாகவே வரத்து குறைந்ததால் இதன் எதிரொலியாக விலையும் கிடுகிடு வென உயர்ந்து உள்ளது. ஆனால் அதே நேரம் மற்ற காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலையும் ஓரளவு குறைந்துள்ளது.
இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:
கருப்பு அவரை-90, பட்ட அவரை-60, பச்சை மிளகாய்-80, பெரிய வெங்காயம்-15-20, சின்ன வெங்காயம்-40-50, முட்டைகோஸ்-20, காலிபிளவர்-30, பீட்ரூட்-50, கேரட்-60, முள்ள ங்கி-30, முருங்கைக்காய்-40, பீர்க்கங்காய்-70, பாவைக்காய்-55, புடலங்காய்-40, வெண்டை க்காய்-60, கத்திரிக்கா-60.
- துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் துரைசாமி (48). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளார்.
துரைசாமி மற்றும் பழனி யம்மாள் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் துரை சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக அவர் வயிற்று வலியால் அவதி ப்பட்டு அதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்ததா கவும் ஆனால் வயிற்று வலி குணமா கவில்லை என கூறப்படுகிறது.
வயிற்று வலி வரும்போ தெல்லாம் துரைசாமி செத்துவிடலாம் என்று புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு துரைசாமி, பழனியம்மாள், விஜய் 3 பேரும் சாப்பிட்டனர் .பின்னர் பழனியம்மாள் அவரது மகன் விஜய் வீட்டுக்குள் தூங்க சென்று விட்டனர். துரைசாமி வீட்டின் வெளியே தூங்க சென்றார்.
இரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்த பழனியம்மாள் கதவைத் திறக்க முயன்றார். ஆனால் கதவு வெளிப்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது.
உடனடியாக விஜய் அவரது நண்பருக்கு போன் செய்து தகவல் சொன்னார் . அவரது நண்பரும் விரைந்து வந்து கதவை திறந்தார். பழனியம்மாள், விஜய் வெளியே வந்து பார்த்த போது துரைசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே துரைசாமி இறந்துவிட்டதாக தெரிவித்த னர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று இரவு பாரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது.
- நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் பண்டிகை நிறைவடைகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பண்டிகை கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், தேர் இழுக்கும் நிகழ்வை தொடர்ந்து 4 நாட்கள் தேர் முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து நேற்று மாலை தேர் நிலையை வந்து அடைந்தது.
இதனை தொடர்ந்து இன்று இரவு பாரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் பண்டிகை நிறைவடைகிறது.
இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
- 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பல்வேறு இடங்களில் போக்கு வரத்து விதிமுறை களை மீறி வாகன ஓட்டிகள் செயல்படுவதால் விபத்து களும் ஏற்படுகிறது. இதை தடுக்கவும், கண்காணிக்கவும் ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் மாநகரின் பல்வேறு பகுதியில் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஈரோடு தெற்கு போக்கு வரத்து போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை ஈடுபட்டனர். இதில் மது அருந்து வாகனம் ஓட்டி வந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்ப ட்டுள்ளது.
இதேபோல் அதிவேகமாக வந்த ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 10 பேரின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்கு வரத்து போலீசார் பரிந்து ரை செய்துள்ளனர். இது தவிர அவர்களுக்கு அப ராதமும் விதிக்கப்படுகிறது.
- 3 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை மிதித்தும் சேதப்படுத்தின.
- விவசாயிகள் பட்டாசு வெடித்தும், தீபந்தம் காட்டியும் யானைகளை விரட்டினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதி யை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இதேபோல் சாலைகளில் நின்றும் வாகன ஓட்டிகளை அச்சு றுத்தி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவர் 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில் ஜீர் கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் உதயகுமாரின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு எழுந்து வந்த உதயகுமார் தோட்டத்துக்கு ஓடிவந்து பார்த்தார்.
அப்போது வாழைகளை யானைகள் சேதப்படுத்து வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்து விவசாயி களை செல்போனில் உதவிக்கு அழைத்தார். அதன் பெயரில் அங்கு வந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தீபந்தம் காட்டியும் யானைகளை விரட்டினர்.
அதிகாலை 3 மணி வரை அட்டகாசத்தில் ஈடுபட்ட யானைகள் அதன் பின்னரே அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.
யானை புகுந்ததால் சுமார் 500 வாழைகள் சேதம் அடைந்தன. இதனையடுத்து வனத்துறையினர் தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
- கோடை காலம் தொடங்கி உள்ளதால் காட்டன் துணிகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
- சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது. அதேப்போல் தினசரி கடைகளும் வாரச்சந்தை கடைகளும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஜவுளி சந்தை உலக புகழ்பெற்றது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை மொத்த விலைக்கு வாங்கி செல்வார்கள். இதனால் சந்தை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற இடங்களை விட இந்த துணிகள் மலிவாக கிடைப்பதால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் காட்டன் துணிகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காட்டன் வேஷ்டி, சட்டைகள், சேலைகள், துண்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
இன்று கூடிய சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர். இதுபோக வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான காட்டன் துணி ஆர்டர்கள் வந்துள்ளது.
இதனால் இன்று மொத்த வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று காட்டன் துண்டுகள் அதிக அளவில் விற்பனையாகின. இதேபோல் சில்லரை விற்பனையும் இன்று சுறுசுறுப்பாக நடைபெற்றது. இன்று 40 சதவீதம் சில்லரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி வரக்கூடிய நாட்களில் வியாபாரம் மேலும் சூடு பிடிக்கும் என ஜவுளி வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளார்.
- கவுசிகனை பவானிசாகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மாறுவாழ்வு முகாம் உள்ளது. இதில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாமை சேர்ந்தவர் கவுசிகன் (33). இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கவுசிகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சி மேற்கொண்டார். இதற்காக ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுப்பதற்காக போலி முகவரியை கொடுத்து விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்துக்கு வந்த போது தான் கவுசிகன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பதும், அவர் இலங்கை தமிழரும் என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த போது தனது முகவரிக்கு பதிலாக தனது நண்பரின் முகவரியை தனது முகவரியாக கொடுத்து ஏமாற்று வெளியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் தனது ஆதார் அட்டையையும் அந்த விண்ணப்பத்தில் இணைத்து இருந்தார். இது குற்றம் என்று தெரிந்தும் இந்த செயலில் அவர் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து கவுசிகனை பவானிசாகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் ரோட்டில் தவறி விழுந்தார்.
- சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வாய்க்கால்புதூரை சேர்த்தவர் உதயகுமார் (வயது 39). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை உதயகுமார் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெப்பிலி-அய்யம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது புதுவலசு பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் ரோட்டில் தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து விட்டார்.
இதுகுறித்து உதயகுமாரின் மனைவி நிர்மலா (35) கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது .
- முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கி ன்றன. வறட்சியால் வனப்பகுதியில் அவ்வ போது தீ விபத்துகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் தாளவாடி வனப்பகு தியில் உள்ள முதியனூர் என்ற இடத்தில் சாலையோர வனப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின் கசிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது . தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை காட்டு யானைகள் சேதப்படுத்து வதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது.
யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள மின்கம்பங்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மின்கம்பிகளில் முள் கம்பிகளை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.






