search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "V.U.C."

    • வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி வட்டார வெள்ளாளர் வ.உ.சி அறக் கட்டளை மற்றும் காரைக் குடி வட்டார வெள்ளாளர் சங்கம் இணைந்து நடத்தும் 37-ஆம் ஆண்டு விழா மற்றும் தியாகச்செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்தநாள் விழா காரைக்குடியில் நடைபெற்றது. வ.உ.சி அறக்கட்டளை பொருளாளர் ராஜமாணிக்கம்பிள்ளை வரவேற்றார். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங் கத்தின் தலைவர் சேவுகன் பிள்ளை தலைமை வகித்தார்.

    மதுரை மாருதி குரூப்ஸ் நிறுவனர் மாருதி பாலகிருஷ்ணன் பிள்ளை வ.உ. சிதம்பரனார் படத்தை திறந்து வைத்து பேசினார். திருச்சி இந்தியன் வங்கியின் மேனாள் மண்டல மேலாளர் சோமையா பாரதி பிள்ளை பரிசுகளை வழங்கினார். வ.உ.சி அறக்கட்டளையின் தலைவர் சபாபதி பிள்ளை, செயலாளர் முத்து ராமலிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மணிசங்கர் பிள்ளை, முல்லை கொடி உள்ளிட்டோர் பலர் பேசினர். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    • வரத்து குறைந்துள்ளதால் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • இதுபோல் இஞ்சி விலையும் அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களாக பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.60-க்கு விற்ற பீன்ஸ் இன்று ஒரு கிலோ ரூ.120 ஆக அதிகரித்து விற்பனை ஆகிறது.

    இதுபோல் வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்பனை ஆகிறது.

    இஞ்சி பொறுத்தவரை பெ ங்களூரு, ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், தாளவாடி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு அதிக அளவில் வரத்தாகி வந்தது.

    தற்போது கடந்த சில நாட்களாகவே வரத்து குறைந்ததால் இதன் எதிரொலியாக விலையும் கிடுகிடு வென உயர்ந்து உள்ளது. ஆனால் அதே நேரம் மற்ற காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலையும் ஓரளவு குறைந்துள்ளது.

    இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    கருப்பு அவரை-90, பட்ட அவரை-60, பச்சை மிளகாய்-80, பெரிய வெங்காயம்-15-20, சின்ன வெங்காயம்-40-50, முட்டைகோஸ்-20, காலிபிளவர்-30, பீட்ரூட்-50, கேரட்-60, முள்ள ங்கி-30, முருங்கைக்காய்-40, பீர்க்கங்காய்-70, பாவைக்காய்-55, புடலங்காய்-40, வெண்டை க்காய்-60, கத்திரிக்கா-60.

    • ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகின்றன. ஒட்டன் சத்திரம், மேச்சேரி, தாளவாடி, ஊட்டி, மேட்டு ப்பாளையம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தினமும் 20 டன் காய்கறிகள் விற்பனை க்கு வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

    கேரட்டை பொருத்த வரை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் 70 ரூபாய் வரை விற்ற கத்திரிக்காய் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    பீன்ஸ்-80, பீட்ரூட்-50-70, சவ்சவ்-30, குடைமிளகா-60, கோவக்காய்-40, கருணைக்கிழங்கு-40, தக்காளி-40, பீர்க்கங்காய்-60, முள்ளங்கி, பாவக்காய், புடலங்காய், வெண்டைக்காய்-40, முருங்கைக்காய் -60, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-40, இஞ்சி-70, முட்டைகோஸ்-25, கருப்பு அவரைக்காய்-90, பட்டை அவரைக்காய்-60, காளிப்ளவர்-50.

    இன்னும் சில நாட்கள் காய்கறிகள் விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு சரியாகிவிடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×