என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலம் அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுக்க முயன்ற இலங்கை தமிழர் கைது
    X

    சத்தியமங்கலம் அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுக்க முயன்ற இலங்கை தமிழர் கைது

    • போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளார்.
    • கவுசிகனை பவானிசாகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மாறுவாழ்வு முகாம் உள்ளது. இதில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாமை சேர்ந்தவர் கவுசிகன் (33). இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கவுசிகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சி மேற்கொண்டார். இதற்காக ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் எடுப்பதற்காக போலி முகவரியை கொடுத்து விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்துக்கு வந்த போது தான் கவுசிகன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பதும், அவர் இலங்கை தமிழரும் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த போது தனது முகவரிக்கு பதிலாக தனது நண்பரின் முகவரியை தனது முகவரியாக கொடுத்து ஏமாற்று வெளியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் தனது ஆதார் அட்டையையும் அந்த விண்ணப்பத்தில் இணைத்து இருந்தார். இது குற்றம் என்று தெரிந்தும் இந்த செயலில் அவர் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து கவுசிகனை பவானிசாகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×