மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டெய்லர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் ரோட்டில் தவறி விழுந்தார்.சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டெய்லர் சாவு
Published on

சென்னிமலை:

சென்னிமலை அருகே வாய்க்கால்புதூரை சேர்த்தவர் உதயகுமார் (வயது 39). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை உதயகுமார் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெப்பிலி-அய்யம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுவலசு பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் ரோட்டில் தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து விட்டார்.

இதுகுறித்து உதயகுமாரின் மனைவி நிர்மலா (35) கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com