என் மலர்
ஈரோடு
- போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
- ஒரு பெண் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தடையை மீறி மது விற்பனை நடைபெறுவதை தடுக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தடையை மீறி மது விற்றதாக ஈரோடு டவுன், வெள்ளித்திருப்பூர், அந்தியூர், சத்தியமங்கலம், மலையம்பாளையம், சென்னிமலை, பவானிசாகர், பவானி, தாளவாடி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஒரு பெண் உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 350 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
- காடையாம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் புழுக்கம் போன்றவற்றால் குழந்தைகள், பெரியவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5 மணிக்கு திடீரென வானங்களில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதன் பின்னர் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக கோபி, கவுந்தப்பாடி, பவானி, சென்னிமலை, சத்தியமங்கலம் போன்ற பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

தரைமட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது
ஈரோடு மாநகர பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன் பின்னரும் விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. திடீர் மழையால் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் ரோடுகளில் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், குருப்பநாயக்கன் பாளையம், ஊராட்சி கோட்டை, காடையாம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
பவானி அருகே உள்ள பெரியபுலியூர் பகுதியில் இருந்து செல்லும் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதியான பூலாம்பாளையம், ஆலங்காட்டு வலசு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்தப் பகுதியில் உள்ள சிறு பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியது.
அப்பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் தங்கி இருந்த குடியிருப்பிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்து அவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். பவானி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்டு மேடான பகுதிக்கு அழைத்து சென்றனர்.
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 90 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கோவை கோபி டவுன் பகுதியில் நேற்று மாலை 6:45 முதல் இரவு 10 மணி வரை மின்தடை ஏற்பட்டது. அதன் பின்னரும் இரவு முதல் காலை வரை அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்பு
சென்னிமலையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஆப்பகூடல், அந்தியூர் பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது.
இதேபோல் கவுந்தபாடி பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரியபுலியூர் பஞ்சாயத்து, மேட்டுநவிதன் பாளையம் பகுதியில் உள்ள வளையகாரர் பாளையம்குளம், பெரியபுலியூர் குளம், ராசங்காட்டு குளம், எல்லப்பாளையம் குளம் உள்ளிட்ட 5 குளங்கள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூலபாளையத்தில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக எல்லப்பாளையம் பகுதியில் உள்ள 60 வீடுகளில் இரவு 8 மணி அளவில் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள உடைமைகள் நீரில் நனைந்தது. இது குறித்து பவானி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் இருந்த பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். கால்நடைகள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டன.
இதேபோல் சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தாளவாடியில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை-90, சென்னிமலை-88, தாளவாடி-78, பவானி-55.80, குண்டேரிபள்ளம் அணை-51.20, கவுந்தப்பாடி-50.20, கோபி-38.20, கொடிவேரி அணை-33, ஈரோடு-22, அம்மாபேட்டை-21, மொடக்குறிச்சி-14, நம்பியூர்-13, சத்தியமங்கலம்-12, கொடுமுடி-8.20, பவானிசாகர்-5.80, வரட்டுபள்ளம்-3.60. இன்றும் ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கோவில் திருவிழாவுக்கு சென்று வீட்டு சிறுமியின் தாய் வீடு திரும்பி உள்ளார்.
- சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அழுதவாறு கூறியுள்ளார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கவுந்தப்பாடி அருகே ஈஞ்சரம்மேடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சம்பவத்தன்று இந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அந்த 35 வயது பெண் தனது மகனை அழைத்து கொண்டு சென்றார். வீட்டில் 7 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன், சிவக்குமார், வாசுதேவன் மற்றும் அந்த சிறுமியின் உறவினர் குணசேகரன் ஆகியோர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுமியிடம் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று கூறி சிறுமியை மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
கோவில் திருவிழாவுக்கு சென்று வீட்டு சிறுமியின் தாய் வீடு திரும்பி உள்ளார். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அழுதவாறு கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மோகன், சிவக்குமார் வாசுதேவன் மற்றும் குணசேகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.
- சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ரா ஜனை பிணமாக மீட்டனர்.
ஈரோடு,
ஈரோடு அக்ரஹாரம் அடுத்துள்ள மணியகாரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(50). கூலி தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் மாலை நஞ்சப்பாநகரில் உள்ள தனது மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அளவுக்கு அதிகமாக மதுஅருந்தியதால் சுந்தர்ராஜ் பேரேஜ் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த வர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தீயணைப்பு துறையினர் சென்று வாய்க்காலில் தேடினர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ராஜனை பிணமாக மீட்டனர்.
இது குறித்து கருங்க ல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை அடித்து கொன்றனர்.
- சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டிவலசு பாரதிநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று இரவு சூரம்பட்டி வலசில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றார்.
பின்னர் மது குடித்து விட்டு டாஸ்மாக் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்(35) கட்டிட தொழிலாளி தனது நண்பர்கள் இருவருடன் மது குடிக்க வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ண குமாரை, கோபால கிருஷ்ணன் குடிபோதையில் இடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிருஷ்ண குமார் கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை அடித்து கொன்றனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொன்று சென்றனர்.
இது தொடர்பாக சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது.
- காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி. மேட்டுப்பாளையம் வெங்கம்மேடு, நேரு தெருவை சேர்ந்தவர் அருள்குமார். கடந்த நாலு வருடங்களுக்கு முன்பு காமாட்சி (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது. இதற்கு சிகிச்சைக்காக அருள்குமார் தான் வேலை பார்க்கும் கடையில் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார்.
வீட்டில் இருந்த காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காமாட்சி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல் மாடியில் கவின்ராஜ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
- வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை அதிர்ச்சி அடைந்தார்.
ஈரோடு, மே.1-
ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி- 3 சேர்ந்தவர் தமிழரசு. பால் வண்டி டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கவின்ராஜ் (32) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். கவின்ராஜ் கோத்தகிரியில் நில அளவையாளராக பயிற்சி பெற்று வருகிறார்.
முத்தம்பாளையத்தில் கவின்ராஜ் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் வீட்டின் உரிமையாளரும், முதல் மாடியில் கவின்ராஜ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஹாலில் கவின்ராஜ், தமிழரசு, அபிராமி ஆகியோர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். கடும் வெயிலின் தாக்கம் காரணமாக காற்றுக்காக சுமதி மொட்டை மாடிக்கு தூக்க சென்றார். அவர் செல்லும் போது கதவை தாழ்படாமல் திறந்து வைத்து சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இன்று நள்ளிரவு கவின் ராஜ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டின் அறையில் உள்ள பீரோ அருகே சாவி இருந்தது. சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 11 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். போகும்போது கவின்ராஜ் வீட்டில் இருந்த இரண்டு விலை உயர்ந்த ஸ்மார்ட் போனையும் திருடி கொண்டு சென்றனர்.
இன்று காலை கவின்ராஜ் எழுந்து பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை அதிர்ச்சி அடைந்தார். அப்போது பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு பீரோவை பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கவின்ராஜ் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது.
அது சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டில் ஆள் இருக்கும்போதே நடந்த இந்த துணிகர திருட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
- பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.
பவானி,
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது. 12 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் தினசரி காலை மற்றும் மாலை வேளையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
5-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் மற்றும் 63 நாயன்மார்கள் உட்பட பல்வேறு சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் இரவு விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப்பெருமாள் கருட வாகனத்திலும், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சுவாமிக்கு முன்னர் 63 நாயன்மார்கள் 51 பல்லக்கில் சிவனடியார்கள் சுமந்து பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.
வருகின்ற 4-ந் தேதி சங்கமேஸ்வரர் திரு தேரோட்டமும் 5-ம் தேதி ஆதி கேசவ பெருமாள் திரு தேரோட்டமும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவுக்கு வருகிறது.
- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- மே தின விடுமுறை என்பதால் கூட்டம் காலையில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது.
கோபி:
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல்காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக நீர்நிலைகள் மற்றும் குளுகுளு பிரதேசங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சுற்றுலா பயணிகள் கார், பஸ், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரிக்கு வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக கொடிவேரி பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் சுமார் 17 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.
அருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் நுழைவு கட்டணமாக ரூ.85 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதன் காரணமாக கடுமையான கூட்டம் அலைமோதியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று மே தின விடுமுறை என்பதால் கூட்டம் காலையில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுடச்சுட மீன்களையும் வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.
பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டே இருந்தது.
- மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது.
- மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது. தெரிய வந்தது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில்அந்தியூர் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் மூலக்கடை பள்ளியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது
இந்த நிலையில் இன்று மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று கடைகளில் மது பாட்டிலை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக அந்தியூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதனை அடுத்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போதுபள்ளிபாளையம் பகுதியில் சுப்பிரமணியம் (52) என்பவர் கைகளில் வைத்துக்கொண்டு மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது
அவரை பிடித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் வைத்திருந்த மது பாட்டலையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்
- 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்கள்.
- 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.
மொடக்குறிச்சி, மே.1-
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்களுக்கான பொது ஏலம் விட தயார் செய்ய ப்பட்டது.
இதில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமை யாளர்களே ஏலத்தொ கையை செலுத்தி பெற்று க்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து மீதமுள்ள 42 வாகனங்கள் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் வாகனங்களை எடுப்பதற்காக முன்பணம் செலுத்தியிருந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர்.
ஏலத்தினை ஈரோடு மது விலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இதில் ஒரு நான்கு சக்கர வாகனம், 26 இரண்டு சக்கர வாகனங்கள் ரூ.4லட்சத்து 66ஆயிரத்து 336க்கு ஏலம் போனது. அதேபோல், வாகன உரிமையாளர்கள் பெற்று சென்றதுடன் சேர்த்து மொத்தம் 57 வாகனங்கள் ரூ.15 லட்சத்து 64 ஆயிரத்து 960க்கு ஏலம் போனது.
ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 14 இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
- அணையில் இருந்து பாசனத்திற்காக 1,050 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,054 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 900 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 1,050 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.56 அடியாக உள்ளது.
30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.51 அடியாக உள்ளது.
33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.79 அடியாக உள்ளது.






