search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Departure of Pancha"

    • வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
    • பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.

    பவானி, 

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது. 12 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் தினசரி காலை மற்றும் மாலை வேளையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    5-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் மற்றும் 63 நாயன்மார்கள் உட்பட பல்வேறு சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் இரவு விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப்பெருமாள் கருட வாகனத்திலும், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    சுவாமிக்கு முன்னர் 63 நாயன்மார்கள் 51 பல்லக்கில் சிவனடியார்கள் சுமந்து பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.

    வருகின்ற 4-ந் தேதி சங்கமேஸ்வரர் திரு தேரோட்டமும் 5-ம் தேதி ஆதி கேசவ பெருமாள் திரு தேரோட்டமும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவுக்கு வருகிறது.

    ×