அந்தியூர் அருகே மது பாட்டில் விற்றவர் கைது

மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது.மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது. தெரிய வந்தது.
அந்தியூர் அருகே மது பாட்டில் விற்றவர் கைது
Published on

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில்அந்தியூர் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் மூலக்கடை பள்ளியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது

இந்த நிலையில் இன்று மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று கடைகளில் மது பாட்டிலை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக அந்தியூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதனை அடுத்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போதுபள்ளிபாளையம் பகுதியில் சுப்பிரமணியம் (52) என்பவர் கைகளில் வைத்துக்கொண்டு மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது

அவரை பிடித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் வைத்திருந்த மது பாட்டலையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com