தடையை மீறி மது விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது

போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.ஒரு பெண் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடையை மீறி மது விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தடையை மீறி மது விற்பனை நடைபெறுவதை தடுக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தடையை மீறி மது விற்றதாக ஈரோடு டவுன், வெள்ளித்திருப்பூர், அந்தியூர், சத்தியமங்கலம், மலையம்பாளையம், சென்னிமலை, பவானிசாகர், பவானி, தாளவாடி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஒரு பெண் உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 350 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com