என் மலர்
ஈரோடு
- மூதாட்டி சேலையில் தீ பற்றிக்கொண்டது.
- இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாராள் இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்துள்ள எலத்தூர் புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் மாராள் (74).
தனியாக வசித்து வந்த மாராள் சம்பவத்தன்று இரவு வீட்டில் கொசுவர்த்தி பற்ற வைப்பதற்காக தீ குச்சியை உரசி உள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி மாராள் சேலையில் தீ பற்றிக்கொண்டது.
பின்னர் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மாராள் இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மண்ணை புழுதிபட உழுது துகள்களாக மாற்றுவதால் காற்றோட்டம் அதிகரிக்கும்.
- நிலத்தின் செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாகும்.
ஈரோடு:
கொடுமுடி வேளாண் உதவி இயக்குனர் யசோதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மண்ணை புழுதிபட உழுது, துகள்களாக மாற்றுவதால் காற்றோட்டம் அதிகரிக்கும். மண்ணில் நுண்ணுயிர்கள் நன்கு வளரும். நிலத்தின் செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாகும்.
களை கொல்லி, பூச்சி கொல்லி மருந்துகளின் வீரியம் குறைந்து, மண்ணின் விஷத்தன்மை குறையும். கோடை உழவால் மண் நன்றாக நயமாகிறது. நீர் ஊடுருவி செல்லும் தன்மை அதிகரித்து, பயிருக்கு நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.
நிலத்தின் சரிவுக்கு குறுக்காக வயலை நன்கு பல முறை புழுதிபட உழுதால், மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 முதல் 15 செ.மீ. ஆழம் உட்செல்லும்.
நீர் ஆவியாவதை தடுக்கும். வறட்சியிலும் பயிருக்கு தேவையான நீர் கிடைக்கும். பயிர் அறுவடை செய்த பின், பயிரின் தாள்கள் நிலத்தில் தேங்கும்.
அது பெரும்பாலான பூச்சிகளுக்கு உணவாக, தங்குமிடமாகி, முட்டைகள் இட்டு, பாதுகாக்கும் இடமாகும். இதனால், கோடை உழவால் களை செடிகள் மக்கி உரமாகும். களை விதை உற்பத்தி தடுக்கப்படும்.
பூச்சிகளின் முட்டைகள், கூண்டு புழுக்கள் அழிக்கப்படும். உழவின்போது வெளி வரும் புழு, முட்டைகளை உணவாக பறவைகள் உட்கொள்வதால் பூச்சிகளின் தாக்கம் குறையும்.
தாவர கழிவின் மக்கும் தன்மை அதிகரித்து மண் வளமாகும். எனவே கோடை மழை நீர் சிறிதும் வீணாகாமல் பயிருக்கு கிடைக்க ஏதுவாகும். மழை நீர் சேகரிப்பு திறன் அதிகரித்து சிறந்த மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றைக்கடந்து செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னிமலை:
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் ஒரத்துப்பாளையம் அணையில் 3 அடி தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது.
அப்போது அணைக்கு வினாடிக்கு 98 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 99 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று காலை 6 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 617 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையில் 9 அடி தண்ணீர் தேங்கி இருந்தது. அணையிலிருந்து 346 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி சென்னிமலை பகுதியில் 88 மி.மீ மழையளவும், அணைப்பகுதியில் 126 மி.மீ மழையளவும் பதிவாகியது.
நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரில் 1550 டி.டி.எஸ். என்ற அளவில் இருந்த உப்புத்தன்மை வெள்ளத்தால் குறைந்து இன்று காலை 980 டி.டி.எஸ். என பதிவானது. ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றைக்கடந்து செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.
- கொரோனா பாதிப்புடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்றும் சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாவ ட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 8 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 072 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை விட சிகிச்சை பெற்று குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்பால் கோவையில் உள்ள அரசு மருத்து கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி அந்த முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் கடந்த மாதம் 29-ந் தேதி உயிரிழந்தார்.
இதனால் ஈரோடு மாவ ட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 736 ஆக உயர்ந்துள்ளது.
- உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலுச்சம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஊரின் நடுவில் இந்த மாரியம்மன் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இரவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் ரூ.ஆயிரத்தை கொள்ளையடித்து எடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பூசாரி வந்து பார்த்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர்.
மேலும் அங்கு பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
உண்டியலில் மேலும் ரூபாய் நாணயங்கள் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த கோவிலின் திருவிழா நடந்து முடிந்தது.
இதையொட்டி உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் பணம் கொள்ளையிலிருந்து தப்பியது.
- ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஈரோடு:
பா.ஜ.க.பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை சம்பவத்தை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அய்யாசாமி முன்னிலை வகித்தார்.
இதில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி னார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கர் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவா ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னதுரை, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாவட்ட தலைவர் செல்வமணி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஏ.கே.மகேஷ் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
- கிணற்றுக்குள் காட்டுப்பன்றி தவறி விழுந்தது தெரிய வந்தது.
- தீயணைப்பு வீரர்கள் காட்டுப்பன்றியை உயிருடன் மீட்டனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைக் கருப்புசாமி கோவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் மான், காட்டு பன்றிகள் உள்பட பல வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியை யொட்டி விவசாய நிலங்களும் உள்ளது.
இந்த பகுதியில் சுந்தர் என்பவரது விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து கிணற்றில் நேற்று இரவு ஒரு காட்டு பன்றி தவறி விழுந்தது.
இதையடுத்து இன்று காலை சுந்தர் தோட்டத்தை சுற்றி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டது.
இதையடுத்து அவர் கிண்ற்றுக்கு அருகே சென்று பார்த்தார். அப்போது அதில் காட்டு பன்றி தவறி விழுந்தது தெரிய வந்தது.
இத குறித்து அவர் அந்தியூர் ரேஞ்சர் உத்தரசாமிக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு உத்ரசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
மேலும் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்த காட்டு பன்றியை உயிருடன் மீட்டனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட காட்டு பன்றியை வனப்பகுதியில் விடப்பட்டது.
- கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.
- இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.
மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொழிலாளர் தினம் (மே-1) என தெடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடந்த 3 நாட்களாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதே போல் கடந்த சனிக்கிழக்கிழமை பொதுமக்களின் கூட்டம் ஓரளவுக்கு இருந்தது.ஆனால் ஞாயிற்றுக்கிழமை கொடிவேரி தடுப்பணைக்கு ஆயிரக்கணக்காக பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்
காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது.
மேலும் நேற்று மே தினம் என்பதால் பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்று கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக கார், வேன், இரு சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.
தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் சிறுவர்- சிறுமிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
இதனால் இன்று கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.
இதனால் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் கொடிவேரி அணைக்கு செல்லும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் அணி வகுத்து சென்றன. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.
கெடிவேரி அணைக்கு கடந்த 3 நாட்களாக சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து குளித்து மகிழ்ந்தனர். கடந்த சனிக்கிழமை 7 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்து 500 பேரும்,
நேற்று திங்கட்கிழமை 14 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 34 ஆயிரம் பேர் வந்திருந்தனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் கொடிவேரி அணை மூலம் ரூ1 லட்சத்து 70 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மணிகண்டன் என்பவர் கேபிள் வயர் திருடியது தெரியவந்தது.
- அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர் மீட்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஈஸ்வரன் (63) என்பவர் மண்டல பொருப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டவர் அமைத்துள்ளார்.
அதை பராமரிக்க ஜோதிநாத் என்பவரை நியமித்துள்ளார். இதையடுத்து அவர் டவரை பராமரித்து கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டவர் லைன் அமைக்க வைத்திருந்த 20 மீட்டர் கேபிள் வயர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதை யரோ திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் ஈஸ்வரனுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து ஈஸ்வரன் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (39) என்பவர் கேபிள் வயர் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரிதது அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர் மீட்கப்பட்டது
இதையடுத்து பெருந்துறை போலீசார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார்.
- தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.
ஈரோடு:
கர்நாடகா மாநிலம் மார்ட்டல்லி, கொல்லேகால் தாலுகா, ஒட்டரெதொட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (38). லாரி கிளீனர். இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலம் மேட்டூர் சேத்தான் கோட்டாயை சேர்ந்த தனது தாய் மாமன் பாலசுப்பிர–மணியம் என்பவருக்கு சொந்தமான லாரியில் கிளீனராக வேலைக்கு சேர்ந்து உள்ளார்.
இந்நிலையில் சம்பத்தன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி கைகாட்டி அருகே உள்ள ஒரு தனியார் ரைஸ் மில்லுக்கு மாதேஷ் வந்துள்ளார்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நெல் மூட்டைகளை இறக்காமல் நெல் மூட்டைகளுடன் தலைய நல்லூர் ஈஸ்வரன் கோவில் அருகே லாரியை நிறுத்திவிட்டு பாலசுப்பிரமணி மற்றும் மாதேஷ் இருவரும் படுத்து தூங்கினர்.
பின்னர் காலை 8 மணி அளவில் மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோத்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரவணன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவயிடத்திலேயே பலியானார்.
- ரங்கசாமி என்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை சிலேட்டர்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் சம்பவத்தன்று பெருந்துறையில் இருந்து சேனிடோரியம் செல்லும் வழியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரங்குசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாரத விதமாக ரங்குசாமியின் மோட்டார்சைக்கிள் சரவணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவயிடத்திலேயே பலியானார்.
ரங்கசாமி என்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- கார்த்திக் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மன்னதபாளையம், குருசாமி நகரை சேர்ந்தவர் கார்த்தி (28). இவரது மனைவி அகல்யா. கார்த்தி ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 மாதமாக கார்த்திக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு கிளம்பும்போது மீண்டும் வயிற்று வலி வந்துள்ளது.
மதியம் 12 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர் கார்த்திக் வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது கார்த்திக் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்தி இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் ஈரோடு கொல்லம்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதாப் (28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.
மேலும் குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் பிரதாப் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரதாப் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






