2 வாலிபர்கள் தூக்குபோட்டு தற்கொலை

கார்த்திக் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வாலிபர்கள் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மன்னதபாளையம், குருசாமி நகரை சேர்ந்தவர் கார்த்தி (28). இவரது மனைவி அகல்யா. கார்த்தி ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக கார்த்திக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு கிளம்பும்போது மீண்டும் வயிற்று வலி வந்துள்ளது.

மதியம் 12 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர் கார்த்திக் வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது கார்த்திக் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்தி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் ஈரோடு கொல்லம்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதாப் (28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.

மேலும் குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் பிரதாப் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரதாப் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com