மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி வாலிபர் பலி

சரவணன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவயிடத்திலேயே பலியானார்.ரங்கசாமி என்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி வாலிபர் பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறை சிலேட்டர்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் சம்பவத்தன்று பெருந்துறையில் இருந்து சேனிடோரியம் செல்லும் வழியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரங்குசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரத விதமாக ரங்குசாமியின் மோட்டார்சைக்கிள் சரவணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவயிடத்திலேயே பலியானார்.

ரங்கசாமி என்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com