கொரோனாவுக்கு ஈரோட்டை சேர்ந்த முதியவர் பலி

கொரோனா பாதிப்புடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
கொரோனாவுக்கு ஈரோட்டை சேர்ந்த முதியவர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

நேற்றும் சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாவ ட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 8 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 072 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை விட சிகிச்சை பெற்று குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்பால் கோவையில் உள்ள அரசு மருத்து கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி அந்த முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் கடந்த மாதம் 29-ந் தேதி உயிரிழந்தார்.

இதனால் ஈரோடு மாவ ட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 736 ஆக உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com