தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலி

மூதாட்டி சேலையில் தீ பற்றிக்கொண்டது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாராள் இறந்தார்.
தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்துள்ள எலத்தூர் புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் மாராள் (74).

தனியாக வசித்து வந்த மாராள் சம்பவத்தன்று இரவு வீட்டில் கொசுவர்த்தி பற்ற வைப்பதற்காக தீ குச்சியை உரசி உள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி மாராள் சேலையில் தீ பற்றிக்கொண்டது.

பின்னர் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மாராள் இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com