என் மலர்
ஈரோடு
- பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.
ஈரோடு,
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 81.43 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 368 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.98 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக குண்டேரி பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.
இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.54 அடியாக உள்ளது. இதேப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 24.15 அடியாக உள்ளது.
- புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
- கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 893 ஆக உள்ளது.
இதுவரை மாவட்டத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 156 ஆக உள்ளது. இதுவரை கொரோனா தாக்கத்தால் மாவட்டத்தில் 736 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.
- காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
- பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கால் பாளையம் அடுத்த வைர பாளையம் காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கவுதம் (30), மணி வண்ணன்(39), சுப்பிரமணி (30), மணிகண்டன்(38), செந்தில்குமார்(41), சக்திவேல்(48), சபரீஷ்(33), முத்து சபரிநாதன் (37) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக கரு ங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.7, 850 பணம் மற்றும் 5 மோட்டார் சைக்கி ள்கள் பறிமுதல் செய்ய ப்பட்டன.
- மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளியூர் சென்று விட்டார்.
- வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
ஈரோடு,
ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்செல்வன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீடு ஸ்டோனி பாலம் ஓடையோரம் சந்து பகுதியில் உள்ளது. அருள்செல்வன் வீடு ஓட்டு வீடாகும்.
இந்நிலையில் அருள்செல்வன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளியூர் சென்று விட்டார். இன்று காலை அருள் செல்வன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்தபோது அதில் 20 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். வீட்டை சுற்றி பார்த்த போது வீட்டின் ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் உள்ளே இறங்கி துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அருள்செல்வனுக்கு தெரிந்தவர்கள் யாராவது இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளனர்.
- அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் ஆபத்தான பகுதியில் குளித்ததாக கூறப்படுகிறது.
டி.என்.பாளையம்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40), தறிபட்டறை தொழில் செய்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி சில வருடங்களாக மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா ராமநாதபுரம் ஊராட்சி தொட்டகலாம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (36), தறிபட்டறை தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளனர்.
அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் வலது புறத்தில் ஆழமாக உள்ளதால் பொதுப்பணித்துறை சார்பில் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த எச்சரிக்கை பலகையை மீறியும் போலீசாரின் அறிவுறுத்தலை மீறியும் ரமேஷ் மற்றும் ராமசாமி அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் ஆபத்தான பகுதியில் குளித்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் ஆழம் அதிகம் என்பதால் எதிர்பாராத விதமாக ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் நீரில் மூழ்கினர்.
உடனே அங்கிருந்தோர் சத்தியமங்கலம் தீயணைப்பு துறை மற்றும் பங்களாப்புதூர் போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணை ப்புத்துறை வீரர்கள் ரமேஷ் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்க ப்பட்டது. அதனையடுத்து கொடிவேரி அணைப்பகு தியில் ரமேஷை மீட்ட அதே பகுதியில் சிறிது நேரத்திற்கு பிறகு ராமசாமியை பிணமாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், கொடிவேரி அணையின் பவானி ஆற்றுக்கு குளிக்க வந்த நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சாலையோரம் இருந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது.
- மோட்டார் சைக்கிள் கீழே கிடந்த மரத்தின் மோதி விபத்து ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் பரவலான மழை பெய்தது. இந்த மழையின்போது பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது.
அப்போது அவ்வழியாக வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த தொழிலாளியான செந்தில்(45), மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் மரம் விழுந்தது தெரியவில்லை. இதனால் அவருடைய மோட்டார் சைக்கிள் கீழே கிடந்த மரத்தின் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த செந்திலை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
- மூட்டை மூட்டைகளாக பதுக்கி கடத்தி சென்றதை போலீ சார் கண்டுபிடித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து வெங்காய லோடு களை ஏற்றுக் கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது வேனில் இருந்தவர்கள் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) ஆகியோர் வேன் டிரைவர், கிளீனராக இருந்தது தெரிய வந்தது.
பின்னர் வேனில் ஏறி சோதனை செய்த போது வெங்காய லோடுகள் அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டைகளாக பதுக்கி கடத்தி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மகேந்திரன், பிரோமோத்தை சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கர்நாடக மாநிலம் மைசூர் ஆர். எம். சி. பண்டிபாளையத்தை சேர்ந்த பவன் (25) என தெரிய வந்தது. அவர் சொல்லி தான் மேட்டு ப்பாளையத்தில் உள்ள வியாபாரிகளுக்கு சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்தி செல்ல ப்பட்டதாக இருவரும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்ற வாளியான பவனை பிடிக்க சத்தியமங்கலம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பவன் பிடிபட்டால்தான் புகையிலை கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரிய வரும் என போலீசார் தெரி வித்தனர்.
- பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர்
- மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சின்ன களியூர், பகவதி நகரை சேர்ந்தவர் மாதன்(70). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணம் ஆகி தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3 மாதமாக மாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பக்கத்து தெருவை சேர்ந்த உறவினருக்கு திருமணம் என்பதால் மாதன் மனைவி அவரது மகள் பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் மாதன் மட்டும் தனியாக இருந்தார்.
இந்நிலையில் மாதனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரது பேரன் வீட்டுக்கு வந்தார். அப்போது மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.
இது குறித்த அவரது பேரன் அக்கம் பக்கத்தினர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த குருணை மருந்தை எடுத்து குடித்து மாதன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது.
- வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஈரோடு,
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்தாலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது.
மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கு வதற்கு முன்பே வெயிலின் தாக்கம் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் வெயில் நிறை வடைந்ததால் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாகவே பதிவாகி வருகிறது.
நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்கு ள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
முக்கிய சாலைகள் மதிய நேரம் வெறிச்சோடி காணப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.
குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அனல் காற்று, புழுக்கத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் அவதி வருகின்றனர்.
வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். முடிந்தவரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறு த்தியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
வெயில் தாக்கத்தின் போது வெளியே செல்வ தால் உடலில் நீர் சத்து குறைந்து மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெயிலின் தாக்கம் காரணமாக 1 - ந் தேதிக்கு பதிலாக 7-ந் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக பதிவாகி வருவதால் பள்ளி திறப்பை மேலும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.
பெருந்துறை,
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பெருந்துறையில் இன்று காலை நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்பு ணர்வு மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மராத்தான் ஓட்டம் ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தொடங்கி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற பொதுமக்கள் சுற்றுச்சூழல் குறித்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
- மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பு.புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் கொங்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேணு கோபால் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் உதயகுமார் மற்றும் மாநில அமைப்பாளர் ராம்தாஸ் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.
முன்னதாக வட்டாரத் தலைவர் சுப்பு வரவேற்றார்.
கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள். முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளியங்கிரி, தும்பூர் போஜான் மாவட்ட சிறு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் கிட்டப்பா ரெட்டி, தமிழக நதிகள் இணைப்பு விவசாயி சங்க துணை தலைவர் பழனி ச்சாமி, தாசில்தார் (ஓய்வு) அன்னூர் கோபால்சாமி, சண்முகம், கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் நடராஜன், புளியம்பட்டி ஆசிரியை ஆனந்தி, துரை சாமி மற்றும் அனைத்து தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்று ப்புள்ளி வைக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கும் வன விலங்குகள் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தினை பயன்படுத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.
மேலும் மயில் மற்றும் வனவிலங்குகள் எண்ணி க்கை பெருகி விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பயிர் சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதமும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். இதே போல் யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும்.
பயிர் சேதம் ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளை விக்கும் வன விலங்குகளால் ஏற்படும் உயிர் சேதத்துக்கும் மற்றும் விளை நிலங்களில் பறவைகள் விலங்குகள் இறந்து கிடந்தாலோ விவசாயிகள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கக் கூடாது.
மேலும் இது குறித்து விவசாயிகள் மீது நட வடிக்கை எடுத்தால் விவ சாயிகளை ஒன்று திரண்டு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்து விவசாயிகள் காப்பாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் அரசியல் கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஆதரவு தரப்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
முடிவில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
- பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் 4 ராஜ வீதிகள் வழியாக வந்தனர்.
- அலகு குத்தி, பறவை காவடியில் 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
சென்னிமலை ,
சென்னிமலை பார்க் ரோட்டில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. விழாவை யொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் 4 ராஜ வீதிகள் வழியாக வந்தனர்.
இதை தெடர்ந்து பிராட்டியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கார்த்தி, செல்வா, கண்ணன் ஆகி யோர் வேனின் மேல்பகுதி யில் விமான அலகு குத்தி, பறவை காவடியில் 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
மேலும் பக்தர்கள் 12 அடி நீளமுள்ள அலகை வாயில் குத்தி துர்க்கை அம்மன் கோவில் வரை வந்து அம்மனை வழி பட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதையடுத்து அன்னதானம் வழங்க ப்பட்டது. இதை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற்றது.






