ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்
Published on

ஈரோடு,

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 81.43 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 368 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.98 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக குண்டேரி பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.54 அடியாக உள்ளது. இதேப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 24.15 அடியாக உள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com