பணம் வைத்து சூதாடிய 8 பேர் கும்பல் கைது

காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கும்பல் கைது
Published on

ஈரோடு, 

ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கால் பாளையம் அடுத்த வைர பாளையம் காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.

போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கவுதம் (30), மணி வண்ணன்(39), சுப்பிரமணி (30), மணிகண்டன்(38), செந்தில்குமார்(41), சக்திவேல்(48), சபரீஷ்(33), முத்து சபரிநாதன் (37) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக கரு ங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.7, 850 பணம் மற்றும் 5 மோட்டார் சைக்கி ள்கள் பறிமுதல் செய்ய ப்பட்டன. 

X

Maalai Malar
www.maalaimalar.com