என் மலர்
ஈரோடு
- கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
- கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
வீரேநகர்:
நெதர்லாந்த் வீரேநகரில் புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. காதலர்களின் சொர்க்கபுரியாக திகழும் இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகள் இங்கு திரளுவார்கள்.
காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவது உண்டு. சில காதலர்கள் மெய்மறந்து அத்துமீறுவதும் உண்டு. பக்கத்தில் யார்? இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் நிர்வாணமாக உல்லாசத்திலும் ஈடுபடுவார்கள், கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிறு குன்றுகளை கூட காதலர்கள் விடுவது இல்லை. அங்கும் அவர்கள் ஜாலியாக இருப்பார்கள்.
இதனால் அந்த கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
கடற்கரையை படுக்கை அறைகாக மாற்றும் இளசுகளின் இந்த அத்துமீறல் குறித்து வீரேநகர் மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தது. இதையடுத்து வீரேநகர் கடற்கரையில் காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க தற்போது நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.
இந்த தடையால் கடற்கரையில் நிர்வாணமாக சன்பாத் எடுக்க வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் நாங்கள் உல்லாசமாக இருப்பதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துக்காக சன்பாத் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதால் முழுமையாக குரங்குகளை பிடிக்க முடியவில்லை.
- வீட்டில் உள்ள உணவு பொருட்கள், வெயிலில் காய வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி வருகின்றன
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன.
இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து பழக்கியதால் உணவு கிடைக்காத சமயங்களில் இந்த குரங்குகள் சென்னிமலை நகரத்தில் உள்ள வீடுகளுக்கு வந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.
அவ்வப்போது வனத்துறையினர் கூண்டுகள் வைத்து பிடித்து வருகின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதால் முழுமையாக குரங்குகளை பிடிக்க முடியவில்லை. இதனால் குரங்குகள் சென்னி மலையில் உள்ள வீடுகளுக்கு வந்து புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றன.
வீட்டில் உள்ள உணவு பொருட்கள், வெயிலில் காய வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட மலை அடிவார பகுதி, அருணகிரிநாதர் வீதி, பொறையங்காடு, களத்துக்காடு பகுதிக்குள் புகுந்து குரங்குகள் அட்டூழியம் செய்து வருகின்றன. அங்குள்ள ஓட்டு வீடுகளின் மேல் குரங்குகள் ஏறி ஓடுகளை பிரிப்பதும், செல்போன் கோபுரங்களில் உள்ள ஒயர்களை பிடுங்கு வதும் போன்ற செயல்களை குரங்குகள் அரங்கேற்றி வருகின்றன.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது,
'வீட்டு வாசல்களில் தனியாக குழந்தைகள் உணவு சாப்பிடும் போது குரங்குகள் கூட்டமாக வந்து உணவுக்காக குழந்தைகளை தாக்க முயற்சி செய்கின்றன.
அதேபோல் ஓட்டு வீடுகளின் மேல் ஏறி குதிப்பதும், ஓடுகளை பிரிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கொள்ளையர்கள் தான் வந்து விட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
அதனால் குடியிருப்பு பகுதிக்குள் அட்டூழியம் செய்யும் குரங்குகளை முழுமையாக கூண்டு வைத்து பிடித்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
- சிறுவலூர் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ஆண்கள் 100-க்கும் மேற்பட்டோர் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளைப்பாறைமேடு என்ற பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி திடீரென குருமந்தூர்-கொளப்பலூர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
கொளுத்தும் வெயிலில் பெண்கள் சாலைமறியல் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தெரிய வந்ததும் சிறுவலூர் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் இந்த மதுக்கடையில் குடித்துவிட்டு இங்கேயே தங்கி விடுகின்றனர். எந்த வேலைக்கும் செல்லாமல் மதுக்கடையிலேயே இருப்பதால் குடும்பம் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெண்கள் சாலைமறியல் காரணமாக இன்று டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்க காலை 11 மணியில் இருந்தே ஏராளமான ஆண்கள் மதுகுடிக்க காத்து இருந்தனர். ஆனால் பெண்கள் போராட்டம் காரணமாக 12 மணி ஆகியும் மதுக்கடை திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த ஆண்கள் 100-க்கும் மேற்பட்டோர் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து 12.30 மணி அளவில் மதுக்கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
இந்த போட்டி போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- அரசு பஸ் அந்தியூர் வழியாக கோபிசெட்டி பாளையத்துக்கு வந்து கொண்டு இருந்தது.
- பஸ்சில் வந்த பயணிகள் 5 பேரும், வேனில் வந்த தொழிலாளர்கள் 5 பேர் என 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
கோபி:
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு ஒரு அரசு பஸ் வந்தது.
இந்த பஸ்சை சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்த தங்கராசு என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக ரத்தினசேகர் என்பவர் இருந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில் அரசு பஸ் அந்தியூர் வழியாக கோபிசெட்டி பாளையத்துக்கு வந்து கொண்டு இருந்தது. பஸ் கோபி செட்டிபாளையம் அடுத்த கவுண்டன்புதூர் என்ற பகுதியில் இரவு 9 மணிக்கு வந்தது.
அப்போது எதிரே ஒரு தனியார் கம்பெனியின் வேன் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு வந்தது. இதையடுத்து அரசு பஸ் கவுண்டன்புதூரில் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. மேலும் வேனின் முன் பகுதியும் சேதமானது. இதை கண்ட பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் அலறி துடித்தனர். இதில் பஸ்சில் வந்த பயணிகள் 5 பேரும், வேனில் வந்த தொழிலாளர்கள் 5 பேர் என 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- எதிர்பாராத விதமாக திடீரென்று ஸ்கூட்டர் தீ பற்றி எரிய தொடங்கியது.
- மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பு.புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபு ரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 36). இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் புளியம்பட்டி அடுத்த காரப்பாடியில் இருந்து பு.புளியம்பட்டி ரோட்டில் வந்தார்.
இதை தொடர்ந்து அவர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது திடீ ரென அவரது ஸ்கூட்டர் பழுதடைந்து நின்று விட்டது. இதையடுத்து ஸ்கூட்டரை மீண்டும் இயக்க முயன்றார். ஆனால் இயக்க முடியவில்லை.
அப்போது ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோல் வாடை வீசியது. இதையடுத்து பெட்ரோல் டேங்கில் இருந்து புகை வந்தது. இதை தொடர்ந்து எதிர்பாராத விதமாக திடீரென்று ஸ்கூட்டர் தீ பற்றி எரிய தொடங்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன் ஸ்கூட்ட ரை விட்டு விட்டு ஓடி உயிர் தப்பினார். ஸ்கூட்டர் முழு வதும் எரிந்து சேதமடைந்தது. இதைக் கண்டு அந்த வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. இதையடுத்து பு.புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து ஸ்கூட்டர் எப்படி தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது.
- வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு,
தமிழகத்தில் பள்ளிக ளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த தால் பள்ளி திறப்பை தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இதனையேற்று ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்தது. இதனால் மீண்டும் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனையேற்று 2-வது முறையாக பள்ளி தேதி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 12-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், ஜூன் 14-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் நாளை பள்ளிகள் திறப்பையொட்டி வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதன்படி ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் நேற்று இரவு முதலே மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தொலைதூரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் முன்பதிவு நிரம்பிவிட்டன.
இதனையடுத்து வெளியூரில் இருந்து ஈரோடுக்கு வரும் மக்கள் சிரமம் இன்றி வருவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.
இதேப்போல் ஈரோடு ரெயில் நிலையங்க ளிலும் கடந்த 2 நாட்களாக பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றன. வெளியூர் சென்றவர்கள் குடும்பம், குடும்பமாக மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வரத் தொடங்கி யுள்ளனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. முன்பதிவு பெட்டிகள் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் இடம் பிடிக்க மக்கள் போடா போட்டி போட்டனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களிலும் அங்கிருந்து ஈரோடு வந்த ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பள்ளி திறப்பையொட்டி ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் போன்ற பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளில் பெற்றோர் குழந்தைகளுக்கு புதிய புத்தகப்பை, நோட்டுகள், எழுதுப்பொருட்கள் வாங்க குவிந்தனர். இதேபோல் ஷூ, பெல்ட் கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி திறப்பையொட்டி ஏற்கனவே பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
- ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
- 4 செல்போன்கள், ரூ.23,120 ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெருந்தலையூர் ஈஸ்வரன் கோவில் பின்புறம் பவானி ஆற்ற ங்கரையோரம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெ றுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பி.மேட்டு ப்பா ளையம் பகுதியை சேர்ந்த நாராயணன் (53), அய்யம்பா ளையம் பகுதியை சேர்ந்த பூபதி (42), கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (62), ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (23), ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்கிற காதர் (47), பவானி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (41), பவானி பகுதியை சேர்ந்த முத்து (41), கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த அண்ணா துரை (62) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்களி டமிருந்து சீட்டு கட்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போ ன்கள், ரூ.23,120 ரொக்க பணம் ஆகியவற்றை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் கருங்கல்பா ளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அபூபக்கர் தலைமையிலான போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வைராபா ளையம், நேதாஜி வீதி, ஓம் காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள காலி இடடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டி ருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வைராபாளையம் பகுதியை சேர்ந்த விஜய் (29), பன்னீர்செல்வம் (43), மருதமுத்து (55), வேலுசாமி (46), விஜய் (21), நவநீதன் (22), சந்திரன் (67), முருகேசன் (38) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.1,460 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்ப ட்டது.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.
- மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.
ஈரோடு,
கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஈ.செட்டிபாளையம், தடப்பள்ளி வாய்க்கால் கரை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் நம்பியூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (58) என்பதும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.
- 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
சென்னிமலை,
சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 23-ந் தேதி இந்த தொழிற்சாலையின் கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனையை முடித்து கொண்டு ரூ.23 லட்சம் பணத்துடன் ஈங்கூரில் உள்ள தொழிற்சாலைக்கு சத்தியமூர்த்தி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சத்தியமூர்த்தி சென்ற காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று அவரிடம் இருந்த ரூ.23 லட்சத்தை கொ ள்ளையடித்து சென்றனர்.
பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கண்ணங்குடி பகுதியை சேர்ந்த மனோகர் (29) மற்றும் நவநீதன் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரை சேர்ந்த இளையராஜா (31) மற்றும் கோவை செட்டி பாளையத்தை சேர்ந்த அலெக்சா ண்டர் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவரான சேகர் என்கிற ராஜசேகர் (30) மற்றும் ராமதுரை (32) ஆகிய 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜசேகர் சரணடைந்தார். அவரை சென்னிமலை போலீசார் பெருந்துறை மாஜிஸ்திரேட் நீதிம ன்றனத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் ராஜசேகரை சென்னிமலை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து நேற்று முதல் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் குறித்து போலீசாரிடம் ராஜசேகர் உண்மையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ராமதுரை மற்றும் செல்வம், விக்கி என்கிற விக்னேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதில் ராமதுரை என்பவர் ஏற்கனவே கைது செய்யப்ப ட்ட மனோகரனின் அண்ணன் ஆவார். இதுவரை கைது செய்ய ப்பட்ட நபர்களி டமிருந்து ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- 288 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணைக்கு வரும் நீரும் குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.51 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 288 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- லாரியில் இருந்து ஒரு ராட்சத கிராணைட் கல் சாலையில் கீழே விழுந்தது.
- எந்த ஒரு வாகனமும் வராததால் விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை.
அந்தியூர்,
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. மேலும் இந்த வழியாக செல்வதனால் போக்குவரத்து தொலைவு குறைவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்த டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து ராட்சத கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக லாரி மலைப்பாதையின் 2-வது வளைவில் திரும்பும் பொழுது லாரியில் இருந்து ஒரு ராட்சத கிராணைட் கல் சாலையில் கீழே விழுந்தது.
இதனையடுத்து டிரைவர் அந்த லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு அங்கேயே நின்றிருந்தார். அதிகாலை நேரம் என்பதா லும், லாரியின் பின்னால் எந்த ஒரு வாகனமும் வராததால் விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை.
மேலும் சாலை ஓரமாக இந்த கிரானைட் கல் விழுந்திருப்பதால் போக்கு வரத்து பாதிப்பு எதுவும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றது. தகவலை அறிந்த பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் தனபால், முருகன் உள்ளி ட்ட போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லை வண்டியில் ஏற்றும் பணி யில் ஈடுபட்டனர்.
மேலும் பொக்லைன் எந்திரத்தின் மூலமாக மட்டுமே இந்த கல்லை ஏற்ற முடியும் என்பதால் 2 வாகனங்களை வரவழைத்து ஏற்றும் பணி நடைபெற்றது.
- மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
- கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததையும் ஒத்து க்கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்த ரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெருந்துறை-ஈரோடு சாலையில் மார்க்கெட் அருகே போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டி ருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு மேல் திண்டல், அருள் நகரை சேர்ந்த விஷால் (21) என்பதும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததையும் ஒத்துக்கொண்டார்.
மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 550 கிராம் கஞ்சாத்தூள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5,500 இருக்கும். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சா தூள்கள், ரூ.1,600 ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பெருந்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.
அவரை பிடித்து சோதனை செய்ததில் 450 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.4,500 இருக்கும்.
விசாரணையில் அவர் கீழ் திண்டல் பகுதியை சேர்ந்த யோகேஷ் (20) என தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேசை கைது செய்தனர். அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதானவர்களிடம் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






